ஸ்ரீரங்கம் கோவிலுக்கு குண்டு மிரட்டல் விடுத்த முருகானந்தம் கைது!

Share this:

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், அரியலுார் மருதையாற்று பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை, ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன், அரியலுார் மாவட்டம், மருதையாற்று பாலம் ஆகியவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் என, கடந்த ஆறு மாதங்களில் 20 – க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தன.

இதுகுறித்து, திருச்சி ரயில்வே மற்றும் ஸ்ரீரங்கம் போலீசார், 60க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, திருச்சி மாவட்டம், லால்குடி, டி.வளவனுார் பகுதியை சேர்ந்த முருகானந்தம், 32, என்பவரை, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதியதாக, ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் (26-07-2015)


https://i.ytimg.com/vi/9FqakpL2uD0/mqdefault.jpgதிருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் ஆணையர் மற்றும் ரயில் நிலைய மேலாளருக்கு நேற்று தனிதனியாக கடிதம் வந்தது. ஸ்ரீரங்கம் கோயில் ஆணையருக்கு எழுதப்பட்ட கடிதத்தில், வரும் 29ம் தேதி ஸ்ரீரங்கத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிக்கும் எனவும், ரயில் நிலைய மேலாளர் செந்தில்குமாருக்கு வந்த கடிதத்தில் ஸ்ரீரங்கம் கோயிலில், ரயில் நிலையத்தில் 29.11.2014 அன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும். ரயிலில், பஸ்சில் வைப்பேன் எனவும் எழுதப்பட்டிருந்தது. இந்த இரு கடிதங்களிலும் மோகன்முரளி, முருகன் வீடியோ, போட்டோ கடை, ராமலிங்க நகர், புத்தூர், திருச்சி என்ற முகவரி எழுதப்பட்டிருந்தது.

இந்த இரு மிரட்டல் கடிதங்கள் குறித்த புகாரின்பேரில், மாநகர போலீஸ் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஸ்ரீரங்கம் கோயிலில் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினர். கோயிலுக்கு வந்த பக்தர்களை முழுமையாக பரிசோதித்த பின்னரே அனுமதித்தனர். அதுபோல் கோயிலை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. அதுபோல் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் 2 மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சில ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் பிளாட்பாரங்களில் இருந்த டீக்கடைகள் மற்றும் குப்பை தொட்டிகள் ஆகியவற்றில் பலத்த சோதனை நடத்தப்பட்டது. மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

– தினகரன் (26-11-2014)


Video News:   www.youtube.com/watch?v=wf-CSF8XmQo

Bomb Detection and Disposal Squad personnel conducting anti-sabotage checks inside the Srirangam Sri Ranganathaswamy Temple on Tuesday.

An anonymous letter threatening that bombs would go off at the Srirangam Railway Station and Sri Ranganathaswamy Temple before November 29 kept the security personnel on their toes on Tuesday.

The handwritten letter in Tamil addressed to the Srirangam Railway station master threatened that the blasts would be carried out using powerful explosives.

Upon receipt of the letter on Tuesday, the station master alerted the Government Railway Police and the Railway Protection Force (RPF). The letter sent in the name of a video and photo shop owner at Puthur in Tiruchi threatened that bombs would be planted in trains and buses.

Consequent to the receipt of the threat letter, anti-sabotage teams of the RPF and the City Police conducted thorough checks at the railway station and the temple complex as a precautionary measure. A sniffer dog belonging to the RPF Dog Squad trained in detecting explosive substances was pressed into service to conduct checks at the railway station.

The Bomb Detection Squad of the RPF along with a team of its personnel and Railway Police men had been deployed at the Srirangam Railway Station to keep a round-the-clock watch, railway sources said. The police personnel later enquired the photo shop owner who feigned ignorance.

– The Hindu (26-11-2014)தொடர்புடைய செய்திகள்:

முஸ்லிம் பெயரில் குண்டு மிரட்டல். மாணவர் ஹரீஷ் கைது!

முஸ்லிம்​ பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்து பயங்கரவாதி கைது!

விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்!

ராம் – பாம் என்று மீடியாக்கள் ஏன் தலைப்பிடவில்லை?

ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்! – ஆளூர் ஷாநவாஸ்

காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்!

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!

ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன

ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !

”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்!

விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்!

விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!

போலீஸ் பாதுகாப்புக்காக தன்னைத் தானே கத்தியால் குத்தி நாடகமாடிய பா.ஜனதா பிரமுகர்

வெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் கைது!

போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காக குமரி பா.ஜ. பிரமுகர் கொலை முயற்சி நாடகம்!

கன்னியாகுமரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 வெடிகுண்டுகள் பறிமுதல்

தொடர்ந்து தோல்வியுறும் இராம கோபாலனின் மத வியாபாரம்!

கலவரம் ஏற்படுத்த பாகிஸ்தான் கொடியேற்றிய கயவர்கள்; கண்டுபிடித்த Blogger..!

விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!

வெடிகுண்டுகளின் பிறப்பிடம் ஆர்.எஸ்.எஸ்!

உலகின் மிக பெரிய பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிவிப்பு


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.