நாள் காட்டியைக் கணக்கிடுவது!

Share this:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
 
 அன்பான சகோதர சகோதரிகளுக்கு,
 
 மனித குலத்தின் காலெண்டர்
 
 என்ற தலைப்பில்

 29 ஷவ்வால் 1430 சனிக்கிழமை (17.10.2009) அன்று சென்னை எக்மோர் ரயில் நிலையத்தின் எதிரில் உள்ள சிராஜ் ஹாலில் காலை 9:30 மணி முதல் இரவு 9:00 மணிவரை ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
 
 1. நாட்காட்டி கணக்கிடுவது! எவ்வாறு?
 2. நாட்காட்டியை கணக்கிட இஸ்லாம் அனுமதித்துள்ளதா?
 3. ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் தேவையை நிறைவு செய்ய இஸ்லாமிய நாட்காட்டியால்
 முடியுமா?
 4. கணக்கிட்டு நாட்காட்டி தயார் செய்து அதை நடைமுறைப்படுத்தினால் நபி(ஸல்) அவர்களின்
 பொன்மொழிகள் புறக்கணிக்கப்படுமா?
 
 இன்னும் மனித குலத்தின் எண்ணற்ற கேள்விகளுக்கு விடை காண விரும்புவோர் தவறாமல் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளவும்.
 
 வெளிநாடுகளில் வாழும் மக்கள் இத்தகவலை தமது நாட்டில் உள்ள நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியப்படுத்தி மாநாட்டில் கலந்து பயன்பெறச் செய்யவும்.
 
 மேலும் இத்தகவலை இணையவாயிலாக அனைத்து தமிழ், உருது, மலையாள மொழி குழுமங்களில் அம்மொழி தெரிந்தவர்கள் பதிவு செய்யவும்.
 
 அறிஞர்கள் தங்களுடைய கருத்துகளை பதிய உள்ளார்கள். இக்கருத்தரங்கம் தமிழ், உருது மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடைபெறுகிறது.
 
 மேலும் தகவல்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
 
 தமிழ் – 94431 03500 – Tamil
 
 மலையாளம் – 096057 57190 – Malayalam
 
 உருது – 97876 17222 – Urdu
 
 இப்படிக்கு
 ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.