தினமலரின் திருகுதாளம்

தினமல திருகுதாள திருவிளையாடல்

“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்” என்ற‌ பொய்யான மற்றும் தவறான தினமல(த்தின்) செய்திக்கு மறுப்பு அறிக்கை

தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொய்யான, தவறான, அவதூறான செய்தி வெளியிடும் தினமலர்

தினமலர் செய்திக்கு இளையான்குடி பேருராட்சித் தலைவர் அயூப் அலிகானின் மறுப்பு அறிக்கை

15.11.2011 ஆம் தேதியிட்ட தினமலர் நாளிதழில், “கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்திய இளையான்குடி பேருராட்சி முஸ்லிம் தலைவர்” என்ற தலைப்பில் எனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், என்னிடம் எவ்விதப் பேட்டியும் எடுக்காமல், பேட்டி எடுத்ததுபோல் பொய்யான மற்றும் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மாற்று மதத்தினை சேர்ந்த என் நண்பர்கள் ஒரு சிலர் எனக்கு வாக்களித்த கிராமப்புற மக்களுக்கு விருந்து வைத்தனர்.

பேருராட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மதநல்லிணக்கத்துடன் அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன்.

எனவே, துவேச மனப்பான்மையுடன் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அவதூறான இச்செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அன்புடன்,
A.அயூப்அலிகான்
பேருராட்சித் தலைவர்
இளையான்குடி

oOo

{AF template=white_border width=100% colorize=CCFFFF}

தினமலரில் வெளியான பொய்யான மற்றும் தவறான செய்தி:

கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்

இளையான்குடி : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சித் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, சுயேச்சை வேட்பாளர் அயூப் அலிக்கான், தாயமங்கலம் முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக, மூன்று “கிடா’ வெட்டி பக்தர்களுக்கு வழங்கினார்.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, இளையான்குடி பேரூராட்சி 16வது வார்டு செயலராக இருந்த அயூப் அலிக்கான், நகர் செயலர் அன்வர், அவைத் தலைவர் அப்துல் குலாம் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதில், நகர் செயலர் அன்வருக்கு சீட் வழங்கப்பட்டது. அதிருப்தி அடைந்த அவைத் தலைவர் அப்துல் குலாம், அயூப் அலிக்கானை தலைவர் பதவிக்கு, சுயேச்சையாக களத்தில் இறக்கினார். கட்சித் தலைமை அப்துல் குலாம், அயூப் அலிக்கானை கட்சியில் இருந்து நீக்கியது.

தங்களது பலத்தை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில், அப்துல் குலாம் ஆதரவாளர்கள் தீவிரமாக வேலை செய்து, அ.தி.மு.க., வேட்பாளர் அன்வரை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, அயூப் அலிக்கானை வெற்றி பெறச் செய்தனர்.

ஐந்து உறுப்பினர்களைப் பெற்றிருந்த அ.தி.மு.க.,வை ஓரங்கட்டி, சுயேச்சையாக வெற்றி பெற்ற அப்துல் வாஹித் துணைத் தலைவரானார்.

இந்நிலையில், தலைவராக வெற்றி பெற்ற அயூப் அலிக்கான், தேர்தலில் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, அருகில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நேர்த்திக் கடனாக, மூன்று “கிடா’ வெட்டி, தனது வெற்றிக்கு பாடுபட்டவர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,” தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் சக்தி வாய்ந்தது. எனது வேண்டுதலை நிறைவேற்றினால், அம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டியிருந்தேன். எனது வேண்டுதல் நிறைவேறியதால், அம்மனுக்கு கிடா வெட்டி அன்னதானம் செய்தேன்’ என்றார்.

SOURCE: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=349170

{/AF}

INFORMATION FROM ILAYANGUDIAN

நன்றி : வாஞ்சூரார் வலைப்பூ