அன்பான இஸ்லாமிய நண்பர்களுக்கு
மாலைமலர் இணையதளத்தில் இஸ்லாமியர்களின் புனித தலமான புனித மெக்கா நகரம் மெருகூட்டப்படுவது தொடர்பான செய்தி வெளியானது. சவுதி அரேபிய அரசால் மெக்கா நகரம் சீரமைக்கப்படுகிறது என்பதை குறிக்கும் வகையில் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஷியா, சன்னி மதத்தின் மீது தீவிர பற்று உள்ளவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற வார்த்தை இடம் பெற்றுவிட்டது.
இச்செய்தியில் மிதவாதிகள் என்பது மிதப்பற்றுள்ளவர்கள் என்றும் தீவிரவாதிகள் என்பது தீவிர பற்றுள்ளவர்கள் எனவும் இடம்பெற்றிருக்கவேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே தவறுதலாக இடம் பெற்ற வார்த்தைகளுக்காக வருந்துகிறோம்.
இப்படிக்கு
இணையதள ஆசிரியர்
மாலைமலர்.காம் (03-10-2014)
மாலைமலரில் வெளியான செய்தி:
http://www.maalaimalar.com/2014/10/02173240/Saudi-overhaul-reshapes-Islam.html
வருந்துகிறோம்:
http://www.maalaimalar.com/2014/10/02204654/sorry.html