வக்கிர நாளிதழின் ஊடக விபச்சாரம்!

Share this:

டகங்கள் தங்கள் வணிகத்தை உயர்த்திக் கொள்வதற்காகப் பல வகைப்பட்ட செய்திகளையும் கட்டுரைகளையும் கற்பனை வளத்துடன் புனைந்து வெளியிடும் வழக்கம் தற்போது மலிந்து விட்டது.

நாள்/வார இதழ்கள் தங்கள் விற்பனையைக் கூட்ட இப்படிச் செய்வது போல, ஒளி ஊடகமான தொலைக்காட்சிகள் அவற்றின் T.R.P ரேட்டை அதிகரிக்க நீயா-நானா, அரட்டை அரங்கம் போன்ற “டாக் ஷோ”க்கள், பாட்டு அல்லது நடனப்போட்டிகள் நிறைந்த “Reality Show” – க்கள் அல்லது உண்மை விளம்பல்(?) போன்ற நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. இவை பெரும்பாலும் ஒத்திகை பார்க்கப்பட்டுப் பரபரப்பான மோதல்களுடன் அல்லது ஆவேசமான அழுகைக் காட்சிகளுடன் ஒளிபரப்பப்பட்டுப் பார்வையாளர்களைக் கவர்கின்றன. நோக்கம் விற்பனை ஒன்றே.. பெண்களைக் கட்டிப் போட்டுள்ள கண்ணீர்த் தொடர்களும் கணவனுக்கு மனைவியும் மனைவிக்குக் கணவனும் செய்யும் வஞ்சனையையும் நம்பிக்கை மோசடியையும் விலாவாரியாகக் காட்டுகின்றன. ஒழுக்கம் பண்பாடு சமூகக் கட்டுப்பாடு என்பனவெல்லாம் 1995 ஆம் ஆண்டோடு போய்விட்டன. இன்று வளரும் தலைமுறைக்கு ஊடகங்கள் அறிமுகப்படுத்துவன தரங்கெட்ட – ஒழுக்க மாண்புகளைப் புறந்தள்ளிய- உலகமும் வாழ்க்கையுமே ஆகும்.

இன்றைய தலைமுறை, கற்பு என்ற ஒன்றை அறியாமல் கள்ளத்தொடர்புகளை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஊடகங்கள் செயல்படுகின்றன. கள்ளக்காதல் காரணமாகக் கணவனை அல்லது மனைவியை அல்லது கள்ளக்காதலனை/ காதலியைக் கொலை செய்யும் செய்திகளை நாள் தவறாமல் ஊடகங்கள் தருகின்றன. முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை அவ்வப்போது செய்தியாக வந்ததால் மக்களுக்கு அவை மிகுந்த அதிர்ச்சியையும் கூச்சத்தையும் தந்தன. மது குடிப்பதையும் புகை பிடிப்பதையும் சமூகத்துக்குப் பயந்து ஒதுக்குப்புறமாகச் செய்தது போல அந்தக் கள்ள உறவுகள் நிகழ்ந்தன. ஆனால் இன்று அரசே மது விற்பனை செய்வதால் குடிப்பதை இயல்பாக ஏற்றுக்கொண்டதைப்போல, இன்று ஊடகப்போட்டியில் அன்றாடம் இத்தகு செய்திகள் விலாவாரியாகத் தரப்படுவதால் இவற்றையும் மக்கள் இயல்பாக எடுத்துக்கொள்ளும் அவல நிலை வந்து விட்டது.

கோபத்தில் நிகழும் அடிதடித் தகராறு கொலையில் முடிந்தாலும் அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறில் நடந்த கொலையாக இருந்தாலும் ஊடகங்கள் கிளுகிளுப்புக்காகக் “கள்ளக்காதல் காரணமா?” எனக் கொக்கி போடுகின்றன. அடுத்தவனின் அந்தரங்கத்தைத் துழாவும் மலிவான ஆர்வத்துக்குத் தீனிபோடும் வகையில் செய்திகள் புனையப்படுகின்றன.

ஆனால் அவற்றில் ஒரளவுக்கு மேல் கிளுகிளுப்பூட்ட முடியாது. மஞ்சள் பத்திரிகைத் தரத்துக்கு விஷயங்களை விலாவாரியாகத் தர முடியாது. எனவே “அந்தரங்கம்” “ஆலோசனை” என்று போட்டு இவைபோன்ற கள்ளக்காதல், ஓரினப் புணர்ச்சி, விலக்கப்பட்ட உறவுக்குள் புணர்ச்சி, கல்யாணத்துக்கு முன் கற்பிழந்தது, கல்யாணத்துக்குப் பின் கணவனை வஞ்சிப்பது, மாமனாரின் இன்ப வெறி என “சுயமைதுன”க் கதைகளை உண்மைபோல வெளியிடுகின்றன. இந்தக் கேவலமான பிழைப்பில் முன்னணியில் நிற்பது தினமலர்.

நாட்டில் எங்காவது தீவிரவாதச் செயல்கள் நடந்தால் காவல்துறை விசாரணை துவங்கும் முன்பே முஸ்லிம்களைக் கோத்துக் கதை எழுதும் வழக்கம் இருப்பது போல் கிளுகிளு கள்ளக்காதல் செய்திகளிலும் முஸ்லிம் பெயர்களைக் கோத்து எழுதுவது பரபரப்பான விற்பனைக்கு வழிவகுக்கும் என்பது தினமலரின் வியாபாரத் தந்திரம்.

நடுநிலையான தமிழ் மக்கள் பெரும்பாலோர் இந்த இதழுக்கு பா ம க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கொடுத்த பெயரைத்தான் பயன்படுத்துகின்றனர். அந்தப் பெயர் தனக்குப் பொருத்தமானதுதான் என நிரூபித்துக் கொண்டே இருக்கிறது அவ்விதழ்.

சில மாதங்களுக்கு முன் (09/09/2012) வெளியான தினமலர் வாரமலர் இதழில் மேற்சொன்னதுபோன்ற ஒரு கதை, கடிதம் என்ற பெயரில் “அன்புடன் அந்தரங்கம்” பகுதியில் வெளியானது. இது கடிதமன்று; புனையப்பட்ட கதை என்பதை இதன் உள்ளடக்கமே வெளிப்படுத்தி விடுகின்றது. (கதை வசனங்கள் முழுமையாக இங்கே காணலாம்)

விறுவிறுப்பான துவக்கத்துக்காக, “நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம். 1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன்” என்று துவங்குகிறது கதை. மிகவும் கட்டுப்பாடான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் மிக மிகக் கட்டுப்பாடாகச் சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஸவூதி அரேபியாவில் வாழ்ந்து கொண்டு “கள்ள உறவுக்கதை” சொன்னால்தான் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என்று நினைத்துக்கொண்டான் கதாசிரியன். உண்மைதான் முரண் இன்றி வரும்; கற்பனை பல்லிளித்து விடும். இளித்திருக்கிறது. மேற்கொண்டு வாசியுங்கள்.

இந்தக் கதையில் சொல்லப்பட்டிருப்பது:-

1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு முதல், என் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் இங்கு இருந்து வருகிறேன். மகன் 10ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படிக்கின்றனர்
எனக்கு வயது 45, என் மனைவிக்கு வயது 36, நண்பருக்கு வயது 47

அடே கதாசிரியனே.. உன் கதைப்படி அவன் வயது 45, அவன் ஸவூதிக்கு வந்தது 1983.. அதாவது அவன் ஸவூதியில் 29 வருடங்கள் இருந்தால் அவன் 16 வயதில் அங்கு வந்திருக்க வேண்டும் இல்லையா?

16 வயதுக்காரனுக்கு ஸவூதியில் வேலை பார்க்க விஸா தரமாட்டார்களே? கதை புனையும் அவசரத்தில் இதைப் புரிந்துகொள்ள மறந்து விட்டாய்.

அத்துடன் குடும்பமின்றி தனியே வசிக்கும் ஒருவர் (Bachelor) இன்னொரு குடும்பத்துடன் ஒரே வீட்டில் “ஷேரிங்” இல் தங்க முடியாது எனும் சவூதி நாட்டின் சட்டத்தையும், கதாசிரியனான நீ அறியாமல் இருந்தது பரிதாபகரமாக இருக்கிறதே!

என் மனைவியிடம் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டேன். அவள் கேட்பதாக இல்லை. அவனது காலை பிடித்து கெஞ்சி கேட்டு விட்டேன். “உன் மனைவி இப்படி இருக்கும் போது, நான் என்ன செய்ய முடியும். நீ வெளியே போகச் சொன்னால், இப்போதே போய் விடுகிறேன். அவள் உயிருக்கு நீதான் பொறுப்பு…’ என்கிறான். வாரம் ஒரு முறை, அவனிடம் உறவு கண்டிப்பாக வேண்டும் என்று என்னிடமே சொல்கிறாள். அதற்கும் ஒத்து கொண்டு தான், ஒரே வீட்டில் இருந்து வருகிறோம். குடும்ப மானம் வெளியில் செல்லக்கூடாது என்று தான் இவ்வளவையும், மனதுக்குள் புதைத்து, உயிரற்ற உடம்பாக சுற்றி வருகிறேன்

வாரம் ஒரு முறை கள்ளக்காதலனுடன் உறவு இருந்தே வேண்டும் என்று கணவனிடமே கூறுவது கற்பனையின் உச்சம். மிச்ச ஆறுநாளும் என்ன செய்வாளாம் கதாசிரியனே?

எந்த மானமுள்ள ஆண்மகனாவது, மனைவி அடுத்தவனுடன் வாரம் ஒருமுறை உறவு கொள்வேன் என்று சொல்வதை ஒப்புக்கொள்வானா? கற்பனைக்கும் அளவில்லையா?

ஐந்து வேளை தொழும் முஸ்லிமாக அவன் இருந்தது, உங்கள் மனைவிக்கு கூடுதல் ஈர்ப்பு.

என்று ஆறுதல் சொல்லும் கதாசிரியரே! உன் கதைப்படி வாசகரின் விரிவான கடிதத்தில் மேற்கண்ட கூற்றே இல்லை… மடத்தில் எழுதிக் கொடுத்ததில் மடத்தனம் ஆகிவிட்டதோ?

ஐவேளை தொழும் முஸ்லிம், இப்படிப்பட்ட அயோக்கியத் தனத்தில் இறங்க மாட்டானே!

கள்ள உறவுகளைப் பற்றி எவ்விதப் பதற்றமோ கூச்சமோ இன்றி விலாவாரியாக, சுவை குன்றாமல் விறுவிறுப்பாக யாராவது கடிதம் எழுத முடியுமா?

அவனுக்கு என்று ஒரு சமுதாயம் இருக்கிறது. அங்கு சென்று முறையிடாமல் தினமலரில் கடிதம் எழுதும் அளவுக்கு முஸ்லிம் சமுதாயத்தில் தரம் கெட்டவர் யாரும் இல்லை.

வக்கிர மனம் கொண்ட Pervert ஆன கதாசிரியரே! சமூகப்பொறுப்போ அக்கறையோ இல்லாமல் இந்தக் கதைகளை வாராவாரம் பெயரையும் நிகழிடத்தையும் மாற்றிப்போட்டு எழுதுவதால், தொடர்ந்து வாசிப்போருக்கு நாமும் இதைப்போல் முயன்றால் என்ன என்ற எண்ணம் வளராதா?

விடலைப் பையன்களும் பெண்களும் இதில் தப்பில்லை என்று துணிந்து விட மாட்டார்களா?

கடைசி ஆயுதமாக, முத்தலாக் என்ற ஆயுதத்தை பிரயோகியுங்கள்.

என்று தனது முட்டாள்தனக் கதைக்கு ஒரு ஃபினிஷிங் டச் வைத்து முடித்துள்ள தினமலரைக் கண்டு வியப்பு மேலிடுகிறது. முஸ்லிம்கள் பற்றி சாதாரண அடிப்படைகளை அறிந்த பிற மதத்தினர் கூட “முத்தலாக்” என்ற இவர்களின் கற்பனை ஆயுதம்(!) இஸ்லாத்தில் கிடையாது என்பதை அறிவர். “ஒரே நேரத்தில் தலாக்-தலாக்-தலாக் என்று முஸ்லிம்கள் முத்தலாக் செய்வர்” என்று முன்னொரு காலத்தில் செய்யப்பட்டு வந்த கோயபல்ஸ்தனத்தை, தினமலர் இன்னும் பிடித்துத் தொங்குவதைக் கண்டு ‘வாயால்’ சிரிக்கத் தோணவில்லை.

இதே கதையைக் கொஞ்சம் மாற்றி , “நான் மயிலாப்பூரைச் சேர்ந்த ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப் பையன். கடந்த 8 ஆண்டுகளாக, கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வசிக்கிறேன். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தலித் நண்பனை வீட்டில் தங்க வைத்திருந்தேன். அவன் என் மனைவியை மயக்கி …” என்றோ – தனது அலுவலகத்தில் பணியாற்றும் சக பெண் ஊழியர்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து மாட்டிக் கொண்ட அந்துமணி ரமேஷ் தனது லீலைகளைப் பற்றிய ஐடியாக்களையோ சகுந்தலா மாமியிடம் ஆலோசனை கேட்பதுபோல் கதை எழுத முடியுமா என்று நாம் நினைத்தால்…. அதுகூட நடக்கலாம்.

ஏனெனில், காசுக்காக எத்தகைய விபச்சாரம் செய்யவும் தயங்காத ஊடக எழுத்து விபச்சாரிகளான இவர்களுக்குச் சொந்த சமுதாயத்தின் மானம்கூட மதிப்பற்றதுதான்; பணத்திற்காகத் தன்னுடைய அந்தரங்கத்தையே பிரசுரிக்கும் கும்பலுக்கு இது சாதாரண விஷயம் தான்!

“மக்களைப் பிளவுபடுத்துகிறது பத்திரிகைகள்” என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு சும்மாவா சொன்னார்? “உண்மையின் உரைகல்” என்றொரு பெயரை தனது நெற்றியில் வெட்கமின்றி ஒட்டிக் கொண்டு, மூட நம்பிக்கைகளையும், மதவெறியையும், பாரபட்சமான செய்திகளையும் விட அதிக லாபம் கொழிக்கும் ஆபாசப் படங்கள் மற்றும் மூன்றாம் தரக் கதைகளையும் முதலீடாகக் கொண்டு காசு பார்க்கும் தினமலர், ஊடக விபச்சாரத்தில் ஈடுபடுகிறது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆக்கம்: மஹ்மூத் அல் ஹஸன்


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.