இஸ்லாமியச் சட்டங்கள் குற்றங்களைத் தடுக்க வல்லன: இந்தியத் தலைமை நீதிபதி!

இந்தியத் தலைமை நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன்
Share this:

இஸ்லாமிய தண்டனைச் சட்டங்கள் உன்னதமானவை என்றும் குற்றமிழைப்பதைத் தடுக்க அவை மிக்க உகந்தவை என்றும் இந்தியாவின் தலைமை நீதியரசர் கேஜி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆய்வுப் பயிலகம் (National Academy for Legal Studies and Research-NALSAR) ஏற்பாடு செய்திருந்த "பெருகும் குற்றங்கள் – தகுந்த தண்டனைகளுக்கான தேடல்" என்ற பயிலரங்கிலேயே நீதியரசர் பாலகிருஷ்ணன் வளைகுடா நாட்டுச் சட்டங்களை ஒப்பிட்டுப் பேசினார். "சில வளைகுடா நாடுகளில் நடப்பில் இருக்கும் இஸ்லாமியச் சட்டக் கூறுகள்தாம் அந்நாட்டில் குற்றங்கள் மிகக் குறைவான அளவில் இருப்பதற்கான உத்தரவாதமாக உள்ளன. அவற்றுள் சில மிகக் கடுமையானதாகத் தெரியலாம். ஆனால் அவற்றால்தான் அந்நாடுகளில் குற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. நள்ளிரவில்கூட ஒரு பெண் அச்சமின்றித் தனியாக எங்கு வேண்டுமானாலும் சென்று வரமுடிகிறது Women can move around even at midnight without any fear" என்றும் அவர் தெரிவித்தார். "போக்குவரத்து மீறல்களுக்கான குற்றங்களும் கடுமையானவையாக இருப்பதால் அங்கு விபத்துகள் குறைவாகவே நிகழ்கின்றன" என்றும் அவர் தெரிவித்தார்.
 
"1857-க்கு முன்பு வரை இந்தியாவில் இஸ்லாமிய தண்டனைச் சட்டங்களே நடப்பில் இருந்தன; அப்போதைய சட்ட ஒழுங்கு நிலை மிகவும் நல்ல நிலையில் இருந்தது. நமக்கென தண்டனைச் சட்டங்களை உருவாக்கியது வரவேற்கத் தக்கதே; ஆனால், 1857-இல் இந்திய
தண்டனைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் அதற்கு முன்பிருந்தவாறு சட்ட-ஒழுங்கு, நல்ல நிலையில்
தொடரவில்லை" என்றும் அவர் கூறினார்.
 
"
இந்தியா ஒரு குடியரசாக இருந்த போதிலும் வளைகுடா நாடுகளில் சுதந்திரமாக நடமாட முடிவதுபோல நம் பெண்கள் அச்சமின்றி நடமாட முடிவதில்லை; போக்குவரத்து விதிகள் பொதுவாக மதிக்கப் படுவதில்
லை" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
"குற்றப் பிரிவில் மட்டும் நம் நாட்டில் 8,000 நீதிபதிகள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
ஒரே குற்றத்திற்குப் பல்வேறு நீதிபதிகளால் வெவ்வேறு வகையில் தீர்ப்புகள் வழங்கப்படுவது கவலைக்குரியது. பிணையில் விடுவிக்கும் முறை சரியாகப் பின்பற்றப் படுவதில்லை. பிணையில் விடுவிக்கும் கோரிக்கைகள் சில, 15 ஆண்டுகளாக விசாரிக்கப் படாமலேயே கிடப்பில் கிடக்கின்றன. விளைவு, விசாரணைக் கைதிகளால் மட்டுமே நம் நாட்டுச் சிறைகள் நிரம்பி வழிகின்றன"
என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.