வெற்றிநடை போடும் குற்றவாளிகள்!

கடந்த விஜயதசமி அன்று ஆக்ராவில் துப்பாக்கிகளுக்கு பகிரங்கமாகப் பூஜை போடும் பஜ்ரங்தள் உறுப்பினர்கள்!

யார் தீவிரவாதி? ஹிந்துத்துவா என்றால் மறைக்கப் படும் பயங்கரவாதம்! என்ற பெயரில் “அவுட்லுக் இந்தியா” இதழில் திருமதி. ஸ்மிதா குப்தா ஆங்கிலத்தில் எழுதிய செய்திக் கட்டுரை!

(தமிழில் சத்தியமார்க்கம்.காம்)

 

இக்கட்டுரையின் சாரம்சம் – அவுட்லுக் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்கள்:

கடந்த 2006ம் ஆண்டில் Nanded இல் நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது பஜ்ரங்தள்தான் என்பது மஹாராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புத்துறை (ATS) நடத்திய புலனாய்வில் வெளியானது.

– பஜ்ரங்தள்ளின்முக்கியக் குறி பள்ளிவாசல்களாக இருந்தன. கடந்த 2003 இலும் மூன்று பள்ளிவாசல்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப் பட்டன.

– ஆனால் அந்தக் குற்றச் சாட்டுகள் ATS & CBI இனரால் திட்டமிட்டு கைவிடப் பட்டன.

– கடந்த ஆகஸ்ட் 2008 இல் கான்பூரில் குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக வெடித்து இரு பஜ்ரங்தள் உறுப்பினர்கள் இறந்தனர். அதைத் தொடர்ந்து இந்தியா உட்பட உலகமே அதிரும் வகையில் பல்வேறு இடங்களில் வண்டி வண்டியாக வெடிகுண்டுகள் கைப்பற்றப் பட்டன.

 

ங்களூரு, அஹ்மதாபாத், டெல்லி ஆகிய பெருநகரங்களில்கடந்த மாதத்தில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான குண்டு வெடிப்புகளினால் உலகமே உறைந்து போயிருந்தது.

இதில் பாதிப்புக்குள்ளானவர்கள், வெடிகுண்டுகளில் இறந்து போனவர்களும் அவர்தம் உறவினர்கள் மட்டுமல்ல; இந்திய முஸ்லிம்களும் அடக்கம். இன்று வரை எந்த ஓர் இஸ்லாமிய இயக்கமோ, குழுவோ இந்த பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்காத சூழலில் இப்பழி இந்திய முஸ்லிம்களின் மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்டது.

 பாதிக்கப்பட்டது இந்திய முஸ்லிம்கள் என்றால், நன்மையடைந்தது?

வேறு யார்? பிஜேபிதான். இல்லாத இயக்கங்கள் பெயரை உருவாக்கி பாமரன் கூட “முஸ்லிம்கள் தான் செஞ்சாங்களாம்” என்று முணுமுணுக்க வைத்தது பிஜேபியின் ஒரு வெற்றிகரமான போர் தந்திரம் என்றால் அது மிகையில்லை.

இந்திய சட்டதிட்டங்களுக்கு எதிராக குறிப்பிட்ட சமூகங்களைக் கொன்றொழிக்கவென்றே பிரத்யேகமான இராணுவ பயிற்சி முகாம்களை பகிரங்கமாக நடத்திவரும் பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP)இன் இளைஞர்களுக்கான பிரிவாகச் செயல்பட்டு வரும் பிரிவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இத்தகைய பயங்கரவாதச் செயல்கள் அனைத்திற்கும் பின்புலமாகச் செயல்படுவது பஜ்ரங்தள் என்பது காவல்துறையினரின் புலனாய்விலிருந்து வெளிப்படும் விஷயங்கள்.

இங்கே கூறப்படும் எவையும் மிகைப்படுத்தப் பட்டவை அல்ல.

உதாரணத்திற்கு, மஹாராஷ்ட்டிராவின் தீவிரவாதத் தடுப்புத்துறையின் புலனாய்வில் வெளியான உண்மைகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்:

ஓய்வு பெற்ற PWD பொறியாளரான எல்.ஜி. ராஜ்கொண்டுவார், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராவார். கடந்த ஏப்ரல் 2006 இல் மஹாராஷ்ட்ராவின் Nanded பகுதியில் உள்ள இவரது வீட்டில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் இவர் பலியானார். இவருடன் இறந்தவர் ஹெச்.பான்ஸே. காயமடைந்தவர்கள் எம்.கே.வேக், ஒய்.தேஷ்பண்டே, ஜி.ஜே.துப்தெவார் மற்றும் ஆர்.எம்.பாண்டே ஆகியோர்.

இவர்கள் அனைவரும் பஜ்ரங்தள் அமைப்பின் கட்டளையைச் செயல் படுத்திக் கொண்டிருந்தவர்கள்.

பதிவான FIR அறிக்கையில் “சேமிப்புக் கிடங்கில் வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறியதால் அசம்பாவிதம் ஏற்பட்டது” என்று பஜ்ரங்தள் கூறியிருந்தது.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்த விசாரணையில் திடுக்கிடும் பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாயின. அவற்றில் ஒன்று, மஹாராஷ்ட்ராவில் சில பள்ளிவாசல்களைக் குறி வைத்து நிகழ்த்த இருந்த பெரும் குண்டு வெடிப்புகளுக்கான தயாரிப்புப் பணியில் பஜ்ரங்தள் உறுப்பினர்களான மேற்கண்ட நபர்கள் ஈடுபட்டிருந்த வேளையில், வெடிகுண்டுகளை இடம் மாற்றும்போது தவறுதலாக வெடித்திருக்கிறது.

ஆனால், அதிர்ச்சியில் உறைய வைத்த காவல்துறையின் ஜோடனையில், அனைத்து குண்டு வெடிப்புக்களையும் முஸ்லிம்கள் செய்ததாகக் காண்பிக்கும் வண்ணம் “உருவாக்கப்பட்ட தடயங்கள்” பதிவான FIR அறிக்கை அவசர அவசரமாக மாற்றி எழுதப்பட்டது.

புத்தம் புதிய FIR அறிக்கை, “இஸ்லாமியத் தீவிரவாதி”களே இதனைச் செய்ததாகக் கூறியது. தீவிரவாத அமைப்புக்கு பேரும் சூட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 16 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கையில் மேற்படி நடந்த குண்டு வெடிப்புக்கான வரைபடங்கள், பொருட்கள் இருந்ததாகவும் இவர்களே இதற்கு முன் நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்கள் என்றும் ரிமாண்ட் விண்ணப்பத்தில் எழுதப்பட்டபின் செய்தியாளர்களை அழைத்து, அழுத்தம் திருத்தமாக செய்தி கொடுக்கப்பட்டது.

கடந்த மே 4, 2006இல், இந்த வழக்கு ATS இன் கைக்கு மாறியது.

அதன்பின்னர் கடந்த ஆகஸ்ட் 24 ந்தேதியில் ATSஇன் முதல் குற்றப்பத்திரிகையின்படி பஜ்ரங்தள் மற்றும் சங் பரிவாரின் பயங்கரவாதப் பின்னணி முழுமையாக வெட்ட வெளிச்சமாகியுள்ளது:

பஜ்ரங்தள் : பின்னணி என்ன?

ராம் ஜானகி யாத்ராவின் பாதுகாப்பிற்கு ஒரு குழு என்ற பெயரில் கடந்த 1984 இல் விஷ்வ ஹிந்து பரிஷத் உருவாக்கிய அமைப்பே பஜ்ரங்தள் ஆகும்.

 

அதன் பின் கடந்த 1993 இல் உத்தரபிரதேச எல்லையைத் தாண்டி மிகப் பெரிய அளவில் விஸ்தீரணம் செய்யப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவாக பஜ்ரங்தள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது.

 

வருடங்கள் உருண்டோட, ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளின் பக்கம் பஜ்ரங்தள்ளின் கவனம் திரும்பியது. பிரச்னை தீர்க்க ‘அவதாரம் எடுத்ததாக’ அதன் தலைவர் ப்ரகாஷ் ஷர்மாவினால் வர்ணனை செய்யப்பட்டது.

 

“பசுக்களை கொல்பவர்களையும், ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என்று நாங்கள் அடையாளம் காட்டும் முஸ்லிம்களையும் இந்திய அரசு தண்டிக்காவிட்டால், அரசின் அப்பணிகளை நாங்களே கையில் எடுத்துக் கொள்வோம்!” – உத்தரபிரதேசத்தின் வி.ஹெச்.ப்பி தலைவரான ருக்குன் சிங் பாயல் பஜ்ரங்தள் பற்றிக் கூறிய வாக்கு இது!

இந்தியாவில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களில் முஸ்லிம்களே வைத்துக் கொண்டதுபோல் உருவாக்கப்பட்டு உலகத்தை உலுக்கிய, பேரிழப்பை உண்டாக்கியவர்கள் பஜ்ரங்தள் குழுவினர். இவர்கள் நிகழ்த்திய சில பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் பின்வருமாறு:

– பர்பானி பகுதியில் உள்ள முஹம்மதியா பள்ளிவாசல் (நவம்பர் 2003)

– ஜல்னா பகுதியில் உள்ள காதிரியா பள்ளிவாசல் (ஆகஸ்ட் 2004)

பர்பானி மாவட்டத்தில் உள்ள பூர்ணா நகரத்தின் மெராஜுல் உலூம் பள்ளிவாசல் / மதரஸா (ஆகஸ்ட் 2004)

அவுரங்காபாத் நகரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பெரும் குண்டு வெடிப்பினை நிகழ்த்துவதற்காக பஜ்ரங்தள் குழுவினால் தயாரிக்கப்பட்ட குண்டே தவறுதலாக வெடித்துள்ளது. இதில் பன்ஸே மற்றும் வேக் ஆகியோர் கடந்த மே மாதம் 2004 இல் அவுரங்கபாத் பள்ளிவாசலுக்குச் சென்று எடுத்துக்கொண்ட குறிப்புகளும், குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கு அவ்விருவரும் கலந்தாலோசனை செய்து பேசிய பேச்சுகள்பதிவாகிய செல் போன்களும் சிக்கியுள்ளன.

இந்து இளைஞர்களைக் கவரும் வகையில் உடற்பயிற்சி மையத்தைத் துவங்கிய பன்ஸே மற்றும் பாண்டே, முஸ்லிம் எதிர்ப்பு வெறியை இந்துக்களுக்கு ஊட்டப் பல்வேறு செமினார்கள் / வகுப்புகளை நடத்தினர். அதில் குறிப்பாக முஸ்லிம்கள் என்றாலே இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் முஸ்லிம்களைஅழித்து ஒழிக்க “ஏதாவது” செய்தே ஆக வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு இரத்தம் சூடேற்றும் பாடங்கள் எடுக்கப் பட்டன.

புனே, கோவா மற்றும் நாக்பூர் போஸ்லாவில் உள்ள இராணுவப் பயிற்சிக் கூடத்தில்சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் தயாரிக்கும் பயிற்சியினை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் இவர்கள். மேற்கண்ட நகரங்களில் உள்ள RSS முகாம்களில் கராத்தே, துப்பாக்கி சுடும் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தவறுதலாக நடந்த குண்டு விபத்தில் பலியான ஹெச்.வீ.பன்ஸேவின் வீட்டைச் சோதனையிட்டபோது, ஒட்டு தாடி, ஒட்டு மீசை மற்றும் முஸ்லிம்கள் அணியும் உடைகள் ஆகிய பொருட்கள் கிடைத்தன.

இந்த ஒட்டுமொத்த நாடகத்தின் நோக்கம் என்ன?

எங்குப் பார்த்தாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும். அதைத் தொடர்ந்து அவர்கள் சமூகத்தில் இருந்து அப்புறப் படுத்தப் படவேண்டும். அமைதி மார்க்கம் என்ற எண்ணம் கொண்டு இஸ்லாத்தில் இணையும் மக்களின் எண்ணிக்கை, இத்தகைய நிகழ்வுகள் மூலம் பெருமளவு குறைக்கப் படல் வேண்டும். மொத்தத்தில் இஸ்லாத்தின் மீதான வெறுப்பு நாடெங்கிலும் நிலவ வேண்டும் என்பதே இந்த சதித் திட்டத்தின் நோக்கம் என்பதை, கிடைத்துக் கொண்டு வரும் ஆதாரங்கள் தெளிவு படுத்துகின்றன.

ATS இன் புலனாய்வு அறிக்கை இவ்வாறு முடிகிறது:

பஜ்ரங்தள் மற்றும் சங் பரிவாரின் குறி மஹாராஷ்ட்ராவின் முஸ்லிம்களே!

மஹாராஷ்ட்ரா முழுவதும் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பங்களில் மேற்கூறிய இரு அமைப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

“குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியது முஸ்லிம்களே!” என்று உலகிற்குக் காண்பிக்கும் வகையில் முஸ்லிம்களில் ஒருபிரிவினர் இன்னொரு பிரிவினருக்கு தனிப்பட்ட விரோதம் காரணமாக குண்டு வைத்ததாக ஜோடிக்கப் பட்டது.

இந்தியாவின் குருட்டுப் பார்வை!

குற்றமிழைத்தவர் சிறுபான்மையினர் என்றால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் இந்திய மாநிலங்கள், சங்பரிவாரங்கள் சட்டத்தை மீறுகையில் சும்மா இருப்பதேன்?


அவுட்லுக் இதழின் கேள்விக்கு சிலரின் பதில்கள்:

“கர்நாடகா மற்றும் ஒரிஸ்ஸாவில் பஜ்ரங்தள் மேற்கொண்டு வரும் வெறியாட்டங்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் அரசு இயந்திரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன!. கிறித்துவர்கள் ஓட்டுவங்கிகளாக இல்லை என்பது அரசின் நினைப்பாக இருக்கலாம்.”

-டொமினிக் இம்மானுவேல், டெல்லி கத்தோலிக் சர்ச் செய்தித் தொடர்பாளர்

 

இது இந்திய முஸ்லிம்களின் அழிவுக்காலம் என்று சொல்லலாம். ஏனெனில் அநீதியான முறையில் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று காண்பிப்பதன் மூலம் தேசிய அளவில் ஒரு நபர் புகழ் பெறுகிறார்.”

ஷாஹித் சித்திக்கி, ஆசிரியர் – நயி துனியா

 

“மாநில அளவில் நடந்து வரும் இத்தகைய நிகழ்வுகள் அரசின் கையாலாகாததனத்தையே காட்டுகிறது. இதில் சிறுபான்மையினரைக் குற்றம் சொல்வது தவறு.”
-குர்சரன் தாஸ், பத்திரிகையாளர்

ATS துப்புத் துலங்கவும் அதன் புலனாய்வில் பல்வேறு உண்மைகளை உடைத்து வெட்ட வெளிச்சமாக்கவும் உதவிய, தான் எழுதிய Communalism Combat என்ற நூலை எழுதிய தீஸ்ட்டா செட்டால்வாட் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

“ATSஇன் இந்ப் புலனாய்வு இந்திய மண்ணில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்ததில் அதன் பங்கு மிக முக்கியமானதாகவும் உள்ளது. ஹிந்துத்துவாவின் சாயம் வெளுத்த நிமிடத்தில் இருந்து ATS மீது விழுந்த கனத்த அழுத்தம் காரணமாக அதன் அறிக்கைகளில் யூ-டர்ன் அடிக்க ஆரம்பித்தன. இதில் CBI இன் நடவடிக்கைகள் கேள்விக்குரியவையாகும். இந்த வழக்கினை வலுவிழக்கச் செய்யும் அனைத்து அயோக்கியத் தனங்களையும் CBI செய்தது”

ATI இன் புலனாய்வின் மூலம் வெளிப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளையும் அதன் பின்னணியில் இருந்து செயல்பட்ட பஜ்ரங்தள்ளும் அதைப் பின்னணியில் இருந்து கொண்டு இயக்கிய சங் பரிவார் ஆகியன CBI யின் குற்றப்பத்திரிகையில் மாற்றி எழுதப் பட்டன.

அதாவது, வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டபோது இறந்தவர்களுக்கும் எந்தவொரு பயங்கரவாதச் செயலுக்கும் தொடர்பு இல்லை என்ற தொனியில் வழக்கின் போக்கினை CBIமாற்றியமைத்தது. (The CBI chargesheet, which Setalvad procured on an RTI application, reveals that the agency simply diluted the ATS’s charges of criminal conspiracy involving terrorist acts.) இதன் மூலம் மஹாராஷ்ட்டிராவில் உள்ள எந்தவொரு பயங்கரவாத அமைப்பினையும் தொடர்பு படுத்தி விசாரிக்க வழியில்லாமல், தனிப்பட்ட வழக்காக CBI மாற்றி அமைத்தது.

இதன் மூலம் பஜ்ரங்தளுக்கோ சங் பரிவாரத்தின் எந்தவொரு குழுவுக்கோவெடிகுண்டுகள் தயாரித்து நாட்டை நிர்மூலமாக்கும் மிகப் பெரிய சதித்திட்டத்தில்எந்த விதச் சம்பந்தமும் இல்லை என்று CBI கதை கட்டியது.

கான்பூரில் கடந்த ஆகஸ்ட் 24, 2008இல் சக்தி வாய்ந்த குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பஜ்ரங்தள் ஐச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ரா மற்றும் புபிந்தர் சிங் ஆகிய இருவரும் உடல் வெடித்துச் சிதறி இறந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த கான்பூர் மண்டல ஐ.ஜி.ப்பி. எஸ்.என்.சிங், “உத்தரபிரதேசத்தின் Special Task Force சிறப்புப் படையினர் நடத்திய புலனாய்வில் நாட்டையே சுடுகாடாக்கும் பெரும் வெடிகுண்டுகளுக்கான திட்டம் தீட்டப்பட்டிருப்பது வெளியாகியுள்ளது” எனக் கூறியிருந்தார்.

ஹிந்துத்துவக் குழுக்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும்போது மட்டும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குவதற்கு என்ன காரணம்?

 

ஆம்

இல்லை

அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் அதனைச் சார்ந்த நோக்கம்தான் காரணம்

81%

19%

நடவடிக்கை எடுத்தால் அது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதால்…

68%

32%

காவல்துறையில் பெரும்பாலோனோர் ஒருமதச் சார்புடன் நடப்பதால்…

55%

45%

இந்திய அரசு பஜ்ரங்தள்ளைத் தடை செய்ய வேண்டுமா?

69%

27%

பஜ்ரங்தள்ளின் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற நடவடிக்கைகள், பயங்கரவாதத்தில் சேருமா?

70%

27%

பஜ்ரங்தள் தயாரித்த வெடிகுண்டுகளில் உள்ள கிரானேடுகள் இராணுவப் படையில் பயன்படுத்தும் இரகங்களைச் சார்ந்தவை என்று வெளியான தகவல் இன்னும் சந்தேகங்களைக் கூடுதலாக்குகிறது.

இறந்துபோன பஜ்ரங்தள் புபிந்தர் சிங்கின் லாஜ்பட் நகரில் உள்ள ஸ்டுடியோவையும் அவனது வீட்டையும் காவல் துறையினர் சோதனையிட்டபோது அதிர்ந்து போயுள்ளனர்!. அங்கே சிக்கிய புபிந்தர் சிங்கின் டயரியில் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் ஃபெரோஜாபாத் நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் கடுமையான உயிர்ச்சேதம் விளைவிக்கும்படியாகக் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்காக வைத்திருந்த குறிப்பேடுகள் சிக்கின. இதில் அனைத்து குண்டு வெடிப்புகளும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமளான் மாதத்தில் நடத்த திட்டமிடப் பட்டிருந்தன என்பதைக் கான்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

கான்பூர் வெடிகுண்டு சம்பவத்தில் பஜ்ரங்தள்தான் குற்றவாளிகள் என்ற ரீதியில் வலுவான ஆதாரங்களுடன் வழக்கு சென்று கொண்டிருக்கும் சூழலில், அதைப் பற்றிச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் ஒரிஸா, கர்நாடகா, கேரளா என்று மாநில வாரியாக கிறித்துவர்கள் மீது வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டு வருகிறது பஜ்ரங்தள்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பஜ்ரங்தள்ளின் வன்முறைகள் பல்வேறு சமயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.(கூடுதல் ஆக்கங்களைப் பெற மேலேயுள்ள SEARCH பகுதியைப் பயன்படுத்தவும்)

மனிதம் எனும் உணர்வை ஆழமாகக் குழி தோண்டி புதைத்து, மதத்தினக் காரணம் காட்டி, தொடர்ந்து இனப்படுகொலைகளை மேற்கொண்டு வரும் ஹிந்துத்துவா எனும் தீய சக்தி நாட்டில் திகிலைத் தொடர்ந்து கிளப்பி வருகிறது.

இந்திய நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வரும் இந்திய மக்களுக்கு, இத்தகைய ஆதிக்க சக்திகளை அடியோடு வேரறுக்கும் கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே ஆறுதலாய் இருக்கும்.