அதிர்ச்சி…! எதைப் பற்றியும் கவலையில்லை… ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடிய கோயில் விழா
பெங்களூரு: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரு கிராமத்தில் முட்டி மோதி, நெருக்கித் தள்ளி, திருவிழாவைக் கொண்டாடி உள்ளனர். லாக்டவுன் சமயத்தில் கர்நாடகத்தில் ஆயிரணக்கானோர் ஒன்றிணைந்து இந்த விழாவை நடத்தியது பெரும் கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது!
எப்போது இந்த லாக்டவுன் முடியும் என்று தெரியவில்லை. அதேசமயம் தொற்று எண்ணிக்கையும் மொத்தமாகக் குறையவில்லை. பாதிப்புகள் தினந்தோறும் இருக்கத்தான் செய்கிறது. தற்போது 3-வது கட்ட லாக்டவுன் முடிய போகிறது. 4-வது கட்ட லாக் இருக்கும் என்றும், அது புது வடிவத்துடன் இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
நோய்த் தொற்று மக்களை பெரிய அளவில் அச்சுறுத்தி வரும் இந்த சூழலில் எதைப் பத்தியும் கவலை இல்லாமல், யாரைப் பற்றியும் கவலை இல்லாமல், அரசின் உத்தரவையும் மதிக்காமல், கர்நாடகாவில் உள்ள கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து திருவிழாவை கொண்டாடி உள்ளனர்.
ராமநகரா மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ளது கொலகொண்டனஹல்லி கிராமம். இந்த கிராம மக்கள்தான் திடீரென ஆயிரக்கணக்காக ஒன்றுகூடிவிட்டனர்.. இந்த விழாவை கொண்டாட யாரிடம் அனுமதி வாங்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்தத் திருவிழா சம்பந்தமான போட்டோக்கள், வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது!
பொதுமக்களின் நிலை குறித்து இவர்களுக்கு எல்லாம் கவலையே கிடையாதா என்று சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். அது மட்டுமல்ல, கொலகொண்டனஹல்லி தாசில்தார், ராமநகரா துணை கமிஷனரிடமும் புகார் அளித்தார்.
இதையடுத்து இந்தப் புகாரின்பேரில் திருவிழா கொண்டாட பெர்மிஷன் தந்த பஞ்சாயத்து மேம்பாட்டு அலுவலர் கல்மாத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். எனினும் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டர்வர்கள். இவர்களில் யாருக்கேனும் ஒருத்தருக்கு தொற்று இருந்தாலும் அது பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால் இந்த சம்பவம் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது!
நன்றி : Hemavandhana, One India