மலேகாவில் 37 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இந்து தீவிரவாதிகள் என்று ஒரு பத்திரிக்கை கூட செய்தி வெளியிட்டதாக நான் காணவில்லை. ஆனால் அதே சமயம் மும்பை மற்றும் அக்ஷர்டாமில் குண்டு வெடிப்புகளை நடத்தியது இஸ்லாமிய தீவிரவாதிகள் என இந்திய அனைத்து முக்கிய பத்திரிக்கைகளும் முன்விதி எழுதின.
காஷ்மீர் குண்டுவெடிப்புகளில் மரணமடைபவர்கள் யார் என பாராளுமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்த பிறகும் இது வரை அதற்கான பதில் கிடைக்கவில்லை. உண்மையில் அங்கு கொல்லப்படுபவர்களில் 94 சதவீதமும் முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்களே. இந்த விவரங்கள் வெளிவராமல் இருப்பதனாலேயே கஷ்மீரில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளோடும் இஸ்லாமிய சமூகம் எளிதில் பிணைக்கப்பட்டு செய்தியாக்க இலகுவாக்கப்படுகிறது.
எங்கு எவ்வித அக்கிரமம் நடந்தாலும் அதில் ஒரு முஸ்லிமின் பெயர் உட்பட்டிருந்தால் உடன் அதற்கு மதத்தை காரணமாக்குவதன் பின்னணியில் கூட்டுசதி உள்ளது. இது போன்ற தருணங்களில் வெளியிடப்படும் எதிர் அறிக்கைகளை கொண்டே அரசியல்வாதிகளின் உண்மையான முகங்களை அடையாளம் கண்டு கொள்ளலாம் என இந்திய தேசிய லீக் நடத்திய சுலைமான் சேட் அவர்களின் நினைவு பொதுக்கூட்டட்தில் மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் பேசினார்.