2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்சித்துறை, இந்தியக் காவல்துறை முதலான பொதுப்பணித் துறைகளுக்கான தேர்வு முடிவில் 31 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2012 ஆம் ஆண்டுக்கான UPSC தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளியன்று (03-05-2013) வெளியானது.
இதில், 998 மாணவர்கள் பொதுப்பணித்துறை பணிகளுக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளனர். தேர்வு முடிவில் ஹரிதா குமார் முதல் இடத்தையும் ஸ்ரீராம் இரண்டாம் இடத்தையும் ஸ்ருதி சரன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற 998 பேர்களில் 23 ஊனமுற்றோர் உட்பட 457 பேர் பொதுப்பிரிவிலிருந்தும் 9 ஊனமுற்றோர் உட்பட 295 பேர் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களிலிருந்தும் 2 ஊனமுற்றோர் உட்பட 169 பேர் சீர்மரபினரிலிருந்தும் 77 பேர் பழங்குடியினரிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 998 பேர் இந்திய ஆட்சித்துறை, இந்தியக் காவல்துறை, இந்திய வெளிநாட்டுத் தூதரகங்கள், மற்றும் மத்திய அரசுப் பணிகளில் தற்போது காலியாக உள்ள 1091 இடங்களில் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். மீதம் 93 இடங்கள் காலியாக உள்ளன.
இவ்வாண்டு தேர்ச்சி அடைந்தவர்களில் 31 பேர் முஸ்லிம்களாவர். இவர்களில் 4 பேர் அதிக மதிப்பெண் பெற்ற 100 பேர்களில் அடங்குவர். கடந்த ஆண்டு தேர்விலும் மொத்தம் தேர்ச்சி பெற்ற 920 பேர்களில் 31 முஸ்லிம்கள் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
வ.எண் | நிலை | பதிவெண் |
பெயர் |
1 | 23 | 035545 | SYED SEHRISH ASGAR |
2 | 41 | 066391 | SHOWKAT AHMAD PARRAY |
3 | 95 | 182909 | KHURSHEED ALI QADRI |
4 | 97 | 038816 | JAFAR MALIK |
5 | 119 | 283801 | ZEESHAN QAMER |
6 | 183 | 377310 | WASEEM AKRAM |
7 | 189 | 208999 | ADNAN NAYEEM ASMI |
8 | 194 | 207008 | AMANAT MANN |
9 | 199 | 146557 | SHAMA PARVEEN |
10 | 212 | 393751 | TOUFEL TAHIR |
11 | 319 | 090198 | UMME FARDINA ADIL |
12 | 386 | 094382 | NAVEED TRUMBOO |
13 | 394 | 114902 | MAZID KHAN |
14 | 438 | 018620 | SADDIK AHMED |
15 | 501 | 029247 | ABID HUSSAIN SADIQ |
16 | 507 | 308901 | ANSARI SHAKEEL AHMED |
17 | 525 | 150058 | ANEES C |
18 | 571 | 004438 | AMANULLAH TAK |
19 | 581 | 038236 | AKIL BAKSHI |
20 | 612 | 079922 | YASSER ARAFAT F A |
21 | 651 | 231299 | DANISH ABDULLAH |
22 | 709 | 200407 | HASAN AHMED |
23 | 722 | 108770 | MD MUSTAQUE |
24 | 730 | 133654 | MD SALIK PARWAIZ |
25 | 745 | 010166 | MOHAMMAD SUHAIL FAZAL |
26 | 760 | 017847 | MOONA YASMIN |
27 | 786 | 425714 | NAIKWADI PARVEZ FATTULAL |
28 | 801 | 398329 | A THAMEEM ANSARIYA |
29 | 820 | 060296 | RUVEDA SALAM |
30 | 825 | 223489 | HAMMAD ZAFAR |
31 | 902 | 008274 | IFTAKHAR AHMED CHOWDHRY |
2010 ஆம் ஆண்டு கணக்குப்படி, இந்திய அளவில் மொத்தமுள்ள 4790 இந்திய ஆட்சித்துறை(IAS) பணிகளில் 108 முஸ்லிம்கள் உள்ளனர். இது 2.25 சதவீதமாகும். மேலும் இந்தியக் காவல்துறை(IPS) பணிகளில் 109 முஸ்லிம்கள் உள்ளனர். இது 3.39 சதவீதமாகும்!
கடந்த 2011 ஆம் ஆண்டுத் தேர்வு முடிவில் முஸ்லிம்கள் 3.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் அது இந்த 2012 ஆம் தேர்வு முடிவில் 3.11 சதவீதமாக குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!
சத்தியமார்க்கம்.காம் குழுமம், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, இவர்களது எதிர்காலம் சிறப்பாக அமைய இறைவனிடம் பிரார்த்தனைகளையும் செய்வதில் மகிழ்கிறது.