ஹிமாச்சலப் பிரதேசம் (30 செப் 2024) : ஹிமாச்சலப் பிரதேசத்தின் நக்ரோட்டா (Nagrota) பகுதியில் உள்ள கோயிலில், கடந்த செப்டம்பர் 26, 2024 அன்று சிவலிங்க சிலை, சில மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் மதக்கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் தத்தம் வீடுகளையும் கடைகளையும் காலி செய்ய வேண்டும் என பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதனால் நக்ரோட்டா பகுதி முழுவதும் பெரும் மதக்கலவரம் ஏற்படும் சூழல் நிலவி வந்தது. சிவலிங்கத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களைப் பிடிக்க காங்க்ரா காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்ததோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர், சிவலிங்க சிலையை உடைத்து மதக்கலவரத்தை ஏற்படுத்தியது நிஷாதேவி (35 வயது) எனும் இந்துப் பெண் என்பதை அறிந்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி ஆதாரங்களை வைத்து நிஷாதேவியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில் இப்பெண், ஏற்கனவே இரண்டு வெவ்வேறு கோவில்களின் சிவலிங்கச் சிலைகளை உடைத்து மதக்கலவரம் செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. (படம்: நன்றி தினகரன் https://www.dinakaran.com/woman_arrested_shiva_lingam/)
பெரும் மதக்கலவரத்தைத் தூண்டி, அப்பகுதி முஸ்லிம்களைக் காலி செய்ய வைக்க, பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் நிஷாதேவியின் பின்னால் நின்று இயக்கினார்களா என்ற ரீதியில் விசாரணை தொடர்கிறது.
After the Shivling was vandalised, There were protests by several Hindutva organisations at Gandhi Maidan. They were Chanting Anti-Muslim Slogans ( Na Mullon ka na Khazi ka, Ye Desh hai veer Shivaji ka). pic.twitter.com/2asGVpGgLd
— Mohammed Zubair (@zoo_bear) September 29, 2024