அறிவுப்போட்டி – 7 : விடைகளும் வெற்றியாளர்களும்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும். [http://www.satyamargam.com/islam/islamic-quiz.html]

அறிவுப் போட்டி எண் – 7 இல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில் கீழ்க்காணும் 16 பேர் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:

1) கலீல் – pmka…..@yahoo.com  
2) முஹம்மது ஸாலிஹ் – mohda….@hotmail.com  
3) அஹமது – allam….@rediff.com
4) மரியம் பீவி – mbee…@gmail.com
5) அஸ்மா – msasm….@yahoo.com
6) கஸீப் – sohailm….@gmail.com
7) ஜைனுல் ஆபிதீன் – pirab…@hotmail.com
8) ஹாரூன் இப்ராகீம் – amharoo….@yahoo.in
9) அப்துல் காதர் – pudupe…..@yahoo.in
10) அப்துல் பாஸித் – basith4…@gmail.com
11) அப்துல் – slaveo…..@rediffmail.com
12) சாமு – samabdu…@yahoo.in
13) ஃபாத்திமா – jjfat….@gmail.com
14) முஹம்மது நிஹால் – faizura….@gmail.com
15) ஹஸ்னா – ssafi…@gmail.com
16) மும்தாஜ் – mbeev….@gmail.com

மேற்காணும் பட்டியலில் உள்ள பதினாறு பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் பதிலளித்த கீழ்க்கண்டவர்கள் முதல் மூன்று வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சகோதரர் கஸீப் sohailm…..@gmail.com  முதல் பரிசு (40 வினாடிகள்)
(2) சகோதரர் அப்துல் காதர் pudupe….@yahoo.in  இரண்டாம் பரிசு (44 வினாடிகள்)
(3) சகோதரி மும்தாஜ் mbeev…@gmail.com  மூன்றாம் பரிசு (47 வினாடிகள்)

அறிவுப்போட்டி-7க்கான சரியான விடைகள்:

வினா-1: நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் நபியாகவும் அரசராகவும் இருந்தவர் யார்?
விடை: சுலைமான் (அலை)

வினா-2: நபி(ஸல்) அவர்கள், மக்காவை வெற்றி கொண்டது எப்போது?
விடை: ஹிஜ்ரி 8

வினா-3: தபூக் போரில் கலந்துக் கொள்ளாமல் பின் தங்கியதால்,முஸ்லிம் சமூகத்தால் தனித்து விடப்பட்டு, பின்பு இறைவனால் மன்னிக்கப் பட்ட மூன்று நபித்தோழர்கள் யாவர்?
விடை: கஅப் இப்னு மாலிக், முராரா இப்னு ரபீ, ஹிலால் இப்னு உமைய்யா(ரழி)

வினா-4: அப்துல்லாஹ் இப்னு உபை யார்?
விடை: நயவஞ்சகர்களின் தலைவன்

வினா-5: நூஹ்(அலை) எத்தனை ஆண்டுகள் தம் சமூகத்தாரிடம் பிரச்சாரம் செய்தார்கள்?
விடை: 950

வினா-6: குர்ஆனில் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பெயர் எத்தனை முறை குறிப்பிடப் பட்டுள்ளது?
விடை: நான்கு

வினா-7: உமர்(ரழி) எந்த வயதில் இஸ்லாத்தை ஏற்றார்கள்?
விடை: இருபத்து ஏழு

வினா-8: அபிசீனியா சென்ற இரண்டாவது குழுவில் இடம் பெற்றவர்கள் எத்தனை பேர்?
விடை: 101

வினா-9: “பாபர் மஸ்ஜித் இருந்த நிலத்தை இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்காவிட்டால் முஸ்லிம்கள் தேசத்துரோகிகளாகவே கருதப்படுவர்” என்று சொன்னவர் யார்?
விடை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

வினா-10: பாபர் மசூதிக்குள் சங் பரிவார் கும்பலால் முதன்முதலில் சிலை வைக்கப்பட்டு, பிரச்சினை உருவாக்கப்பட்ட வருடம் எது?
விடை: 1949

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 7-ல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோ. கஸீப், சகோ. அப்துல் காதர், சகோதரி மும்தாஜ் ஆகியோருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (admin@satyamargam.com) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோர் அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. போட்டி எண் 7 இலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தந்த அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.