அறிவுப்போட்டி – I : விடைகளும் வெற்றியாளர்களும்

Share this:

 

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருகிறது.

அறிவுப் போட்டி எண் 1(01-09-1431 / 11-08-2010)இல், 199 பேர் கலந்து கொண்டனர், அல்ஹம்து லில்லாஹ்! அவர்களுள் கீழ்க்காணும் 11 பேர் மட்டுமே அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்துள்ளனர்:

1. முஹம்மது அர்ஷாத்(arshath…@yahoo.com)

2. மிர்சா ஆதம்புள்ளே(mirusha….@yahoo.com)

3. நவ்ஃபல்(razik….@gmail.com)

4. ஹிஃப்லான்(hifla…@gmail.com)

5. அஸார் இஸ்லாஹி(azhar…@gmail.com)

6. அனிஸ்(anis…@gmail.com)

7. அபுதாஹிர்(siddi…@gmail.com)

8. இப்னு ஹுஸைன்(ibnu…@gmail.com)

9. ஷரஃபுதீன்(sharja…@yahoo.co.in)

10. அப்துல் ரஹீம்(raheem…@yahoo.com)

11. நூறா(icha…@yahoo.com)

அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலளித்த மேற்காணும் பட்டியலில் உள்ள பதினொருவருள் மிகக் குறைந்த நேரத்தில் (1 நிமிடம் 14 நொடிகளில்) பதிலளித்த சகோதரர் ஹிஃப்லான் அவர்கள் முதல் பரிசுக்குரியவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அறிவுப்போட்டியில் ஒரேயொரு பரிசு மட்டுமே அறிவித்திருந்தோம்.  வாசகர்களின் பெரும் வரவேற்பினைத் தொடர்ந்து, அறிவித்திருந்த ஒரு முதல்பரிசைவிடக் கூடுதலாக மேலும் இருவருக்கு இரண்டாம்,  மூன்றாம் பரிசுகளையும் வழங்க முடிவெடுத்து இருக்கிறோம்.

 

அதன்படி, அடுத்தடுத்துக் குறைந்த நேரத்தில் பதிலளித்த சகோதரர் நூறா(1:18 – ஒரு நிமிடம் 18 நொடிகள்) அவர்கள் இரண்டாம் பரிசுக்குரியவராகவும் சகோதரர் இப்னு ஹுஸைன்(1:43 – ஒரு நிமிடம் 43 நொடிகள்) மூன்றாம் பரிசுக்குரியவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

அறிவுப்போட்டி-I க்கான சரியான விடைகள்:

1 – நோன்பு நோற்பது எந்த வயது முதல் கடமையாகிறது? – விடை: வரம்பில்லை.

2 – ரமளானைப் பற்றி எத்தனை ஆயத்துக்கள் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன? – விடை: ஐந்து

3 – ரமலான் நோன்பாளிகளின் சிறப்பான பரிசு எது? – விடை: ரய்யான் எனும் சுவன வாயில்.

4 – முஸ்லிம்கள் நோன்பிற்கும் யூதர்கள் நோன்பிற்கும் வித்தியாசம் என்ன? – விடை: ஸஹர்.

5 – நோன்பின் மூலம் முஸ்லிம்கள் அடையும் பலன் என்ன? – விடை: தக்வா.

6 – குர் ஆன் அருளப்பட்ட மாதம் எது? – விடை: ரமளான்.

7 – குர் ஆனில் ஆரம்பத்தில் எத்தனை ஆயத்துக்கள் அருளப்பட்டன? – விடை: ஐந்து.

8 – நோன்பு எந்த ஆண்டு முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டது? – விடை: ஹிஜ்ரி இரண்டு.

9 – குர் ஆனில் முதலில் அருளப்பட்ட சூராவின் பெயர் என்ன? – விடை: சூரா அலக்.

10 – ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதம் எது? – விடை: ரமளான்

மதிப்பெண் இல்லா உபரி கேள்வி:

11. – இப்படத்தில் மஸ்ஜிதுல் அக்ஸா எங்குள்ளது? – விடை: மஞ்சள் வண்ணத்தில் காணப்படும் டூம், உமர்(ரலி) அவர்களால் கட்டப்பட்டதாகும். அதன் பக்கத்தில் பாழடைந்த கட்டடம் போன்று பராமரிக்கப்படாமல் காணப்படுவதே மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும். யூதர்களின் கைவசமான பின்னர் அதனை இடித்து ஸாலமோன் கோவில் கட்டுவதற்காக முயற்சிகள் நடைபெற்று வருவதும் அதற்காகவே மஸ்ஜிதுல் அக்ஸா என்றாலே மஞ்சள் நிறத்திலுள்ள டூம் ஆஃப் ராக்கை முன்னிலைபடுத்தி விளம்பரப் படுத்தப்படுவதும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது.


சத்தியமார்க்கம்.காம் நடத்திய முதல் அறிவுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரர்கள் ஹிஃப்லான், நூறா மற்றும் இப்னு ஹுஸைன் ஆகியோருக்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த மற்றவர்களுக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (admin@satyamargam.com) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.