சத்தியமார்க்கம்.காம் இஸ்லாமிய அறிவுப் போட்டியும் நிபந்தனைகளும்!

ளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் ஏக இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

“படிப்பீராக! படைத்த இறைவனின் திருப்பெயரால் படிப்பீராக!” – ஓதுதலையும் அதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வதையும் அடிப்படையாக வைத்து அருளப்பட்ட இறைமார்க்கத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ள முஸ்லிம் சமுதாயம் ஏனோ சண்டை, சச்சரவு, அநாவசிய வாக்குவாதம், பிளவு, வேற்றுமை பாராட்டல் போன்ற ஷைத்தானிய குணங்களுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

இச்சமுதாயத்தில் ஊடுருவியுள்ள – இஸ்லாம் அறவே தடை செய்துள்ள, இத்தகைய தீய குணங்களெல்லாம் மறைந்து உன்னத சமுதாயமாக மாற வேண்டுமெனில், இறைச் சிந்தனையின் பக்கம் ஈர்ப்பினை அதிகரிப்பதும், அறிவுப் புரட்சியை நோக்கி கவனத்தைத் திசை திருப்புவதும் அவசியமாகிறது.

கற்றலும் கற்பித்தலும் மேலோங்கவும், அறிவைப் பெருக்கிக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும் ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் (ஆகஸ்ட் 2010)  முதல் தேதியிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி ஒன்றை நடத்தத் தீர்மானித்துள்ளது.

கல்வி கற்றலின் முக்கியத்துவத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் அவசியத்தையும் இச்சமுதாயத்தில் பரவலாக்கிடுவதற்கு இந்த அறிவுப்போட்டி உதவும் என சத்தியமார்க்கம்.காம் நம்புகிறது. அதுவே இப்போட்டியின் நோக்கமாகும்.

வல்ல இறைவன் அதற்கு உறுதுணையும் அருளும் புரிவானாக!

 

போட்டியில் கலந்து கொள்ள முகப்பில் வெளியாகும் அறிவுப்போட்டிக்கான சுட்டியைக் கிளிக்கவும்.

போட்டியின் நிபந்தனைகள்:

1. மார்க்கம் மற்றும் உலக விஷயங்களிலிருந்து பிரதி வாரம் 10 கேள்விகள் இடம்பெறும். போட்டியாளர்கள் கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளிலிருந்து சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும்.

1அ. போட்டியாளர்கள் தங்களின் சரியான மின் அஞ்சல் முகவரியைத் தந்து போட்டியில் கலந்து கொள்ளவும். வெற்றி பெற்ற அறிவிப்பும், பரிசுக்கான விபரத்திற்காகவும் இந்த மின் அஞ்சல் முகவரியை  மட்டுமே சத்தியமார்க்கம்.காம் தொடர்பு கொள்ளும்.

2. போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரம் ஒவ்வொரு வாரமும் தளத்தில் வெளியாகும்.

3. போட்டியில் வெல்வோருக்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவான முறையில் எடுத்துரைக்கும் “ரஹீக்” நூல் பரிசாக வழங்கப்படும்.

4. ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான விடையளித்திருப்பின், அவர்களில் மிகக் குறைந்த நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்தவர் பரிசுக்குரியவராக தேர்வு செய்யப்படுவார். அதிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருப்பின் அவர்களில் முதன் முதலாக சரியாக விடையளித்தவர் பரிசுக்குரியவராகத் தேர்வு செய்யப்படுவார். அதிலும் போட்டி ஏற்படின் குலுக்கல் முறையில் பரிசுக்குரியவர் தேர்வு செய்யப்படுவார். சத்தியமார்க்கம்.காம் நிர்வாகக் குழுவின் முடிவே இறுதியானது.

5. வெற்றி பெற்றவருக்குரியப் பரிசு இந்திய அல்லது இலங்கை முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும். மற்ற நாடுகளுக்கு அனுப்ப இயலாது.

6. பரிசு அறிவிக்கப்பட்டு ஒரு மாத காலத்துக்குள் பரிசுக்குரியவர் தமது முகவரியைத் தெரிவித்துப் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

7. வெற்றிபெற்றவர்கள், போட்டியின் போது உள்ளீடு செய்த மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளப்படுவர். அதனைத் தொடர்ந்து பரிசு அனுப்பி வைக்கப்பட வேண்டிய இந்திய அல்லது இலங்கை முகவரியை quiz@satyamargam.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டி தொடர்பான தொழில் நுட்ப சந்தேகங்கள் ஏதும் இருப்பின் இதே மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

8. சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் எவரும் இப்போட்டியில் பங்கு பெற அனுமதி இல்லை.

சகோதரர்கள் அனைவருக்கும் புனித ரமளான் நல்வாழ்த்துக்கள்.

– சத்தியமார்க்கம்.காம்