சத்தியமார்க்கம்.காம் நடத்திய 2008-09 கட்டுரைப் போட்டி முடிவுகள்

Share this:

 

 

 

அளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் உள்ள ஏக இறைவனின் பெயரால்…

அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதர சகோதரிகளுக்கு,

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அருளும் நம் அனைவரின் மீதும் நிலவட்டும்!

இணையம் எனும் தொலை தொடர்பு சாதனம், எண்பதுகளின் இறுதியில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காகத் துவங்கப்பட்டு, வெகுவாய் விரிந்து படர்ந்துப் பரவி, இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் வியாபித்து விட்டது. இணையம் இல்லாத இல்லம் இல்லை என்ற நிலை வெகு விரைவில் ஏற்பட்டு விடும், இன்ஷா அல்லாஹ்.

வணிகம், விளம்பரம், நாள்-வார-மாத இதழ்கள், ஊடகங்கள் போன்ற பொதுத் துறைகள் முதல், கல்வி, மருத்துவம், தொலைத் தொடர்பு, திருமணம், என்று தனிமனித வாழ்விலும் தன் ஆளுமையை இணையம் ஏற்படுத்தி விட்டது. மனிதனுடைய அன்றாட வழ்க்கையின் ஒரு அம்சமாக மாறியுள்ள, சக்தி வாய்ந்த ஊடகமான இணையத்தை இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகவும் சமுதாய ஒற்றுமைக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சத்தியமார்க்கம்.காம் தளம் செயலாற்றி வருகின்றது எல்லாப் புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே.

இணையத்தோடு தொடர்புடைய மற்றும் அதை பயன் படுத்துபவர்கள், அல்லாஹ் அவரவருக்கு வழங்கியுள்ள ஆற்றல்களை அடையாளம் கண்டு கொள்வதும், அவற்றை வளர்த்துக் கொள்வதும் அவற்றால் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டியச் சேவைகளைச் செய்ய முன்வர வேண்டியதும் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்திட ஏவப்பட்ட முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் மீதும் உள்ள கடமைகளாகும் என்று கூறினால் அது மிகையாகாது.

தன்னுள் புதைந்திருக்கும் ஆற்றல் வெளிப்படும்வரை எவருக்கும் தன்னுள்ளேயே அது ஒளிந்து கொண்டிருப்பது தெரியாது! நன்றாக எழுதுவது சிரமமாக இருப்பினும் நல்லதை எழுதுவது சிரமமில்லை. நல்லவை வெளிபடுத்தப் படவேண்டும்; தீயவைகள் களையப்படவேண்டும்.

அவ்வகையில் வாசகர்களுள் புதைந்திருக்கும் எழுத்தாற்றலையும் உலக / மார்க்க அறிவையும் சிந்தனைகளையும் வெளிபடுத்துவதும் அதன் மூலம் அவர்களுக்குள்ளும் சமுதாயத்திலும் நல்ல தாக்கங்களும் மாற்றங்களும் ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தின் முதல் முயற்சியாக, சத்தியமார்க்கம்.காம் ஒரு கட்டுரைப் போட்டியைக் கடந்த 8 செப்டம்பர் 2007 அன்று அறிவித்திருந்ததும் அதற்கு வாசகர்கள் நல்ல ஆதரவு அளித்திருந்ததும் தாங்கள் அறிந்ததே.

அவ்வழியில் தரமான பல கட்டுரைகள் மூலம் ஒற்றுமை, ஒழுக்கம், இறையச்சம், மூடநம்பிக்கைக ஒழிப்பு, சமுதாய நலன் போன்ற நமது சமுதாயத்துக்குத் தேவையான – பயன் தரத் தக்க பல ஆக்கங்கள் கடந்த ஆண்டு இங்கு வெளியிடப்பட்டன. அவற்றை முறையாகச் செயல்படுத்துவதன் மூலம் அனைவரும் பயனடைய வேண்டும்; அதற்கு இறைவன் அருள் புரியப் பிராத்திப்போமாக.

அதேபோல் கடந்த வெள்ளி, 08 ஆகஸ்ட் 2008 அன்று சத்தியமார்க்கம்.காம் சார்பாக அதே நோக்கங்களுடன் சமுதாயத்தில் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் இரண்டாவது கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம். இவ்வாண்டுக்கான கட்டுரைத் தலைப்புகள் சென்ற ஆண்டைவிடச் சற்று வித்தியாசமாகவும் வரலாற்றுடன் தொடர்புடைய, தற்கால உலக அரசியல் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பின்னணியைக் கொண்டிருந்தன.

போட்டிக் கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி, வாசகர்கள் வேண்டுகோளுக்கிணங்க 15.12.2008 வரை நீட்டிக்கப்பட்டது.

போட்டியில் பங்குபெற்றவர்கள் எண்ணிக்கை – குறிப்பாக பெண்கள் எண்ணிக்கை – சென்ற ஆண்டோடு ஒப்பிடும்போது குறைவாக இருப்பினும், சென்ற ஆண்டைப் போல் ஆக்கங்கள் நல்ல தரமானதாகவே வந்துள்ளன.

அறிவிக்கப்பட்டிருந்த கீழ்கண்ட கட்டுரைத் தலைப்புகளிலிருந்து

நீல நிற எழுத்துகளில் உள்ள தலைப்புகள் மட்டுமே வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கட்டுரைகளாக எமக்குக் கிடைக்கப் பெற்றன:


· 3.5 சத இடஒதுக்கீடு தீர்வாகுமா?.
· இந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சனையா?
· இந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி?!
· உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால்?
· இந்திய அரசியல் முஸ்லிம்களுக்கு ஹராமா?!

· இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பான வாழ்வுக்கு…?
· காங்கிரஸில் சங்கபரிவாரத்தின் ஊடுருவல்.
· பெருகிவரும் போலி முஸ்லிம் தீவிரவாத குற்றச்சாட்டுக்கான தீர்வு!
· உலக அமைதி இஸ்லாத்தினூடாக..!
· உலகின் அழியா நிலையான இஸம் – இஸ்லாம்!
· இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு.
· முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்வு அடைவதற்கான வழிகள்!
· உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்!
· இஸ்லாமியப் பிரச்சாரம் திரைப்படத்துறை மூலமாக…

· சாவர்க்கரும் பாராளுமன்றத்தீட்டும்!
· இலங்கை முஸ்லிம்களின் அவலநிலைக்கான தீர்வு!
· குண்டுவெடிப்புகளும் திரைமறைவு சதிகளும்!
· ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும்–தீர்வு என்ன?
· போராட்டம் – நிலையான வாழ்விற்கான ஒரே வழி!.
· அமெரிக்கா இஸ்லாத்தை நோக்கி..!.
· மத்திய கிழக்கும் மறைக்கப்பட்ட உண்மைகளும்!
· மஸ்ஜிதுல் அக்ஸா – முஸ்லிம்களின் ஆன்மா!
· சியோனிஸ பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி!
· ஊழல் அரசியலை ஒழிப்பதற்கான வழி!

· தமிழகம் – ஜாதி அரசியலிலிருந்து விடியலை நோக்கி!

நடுவர் குழு மற்றும் மதிப்பீடு முறை விபரங்கள்

இம்முறையும் சென்ற நடுவர் குழுவில் இருந்தவர்கள் மூவர் உட்பட ஐவர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டு, கட்டுரைகளுக்குத் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கும் பொறுப்பை நடுவர் குழுவினர் ஏற்றுக் கொண்டனர். சத்தியமார்க்கம்.காம் நிர்வாகியால் பெறப்பட்ட கட்டுரைகள் பெயர்கள் அகற்றப்பட்டு, கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பாளரால் எண்குறியீடுகள் இடப்பட்டு, நடுவர்களுக்கு அனுப்பப்பட்டன.

 

 

ஒவ்வொரு கட்டுரைக்கும் நடுவர்களால் தனித்தனி ஆய்வுப்படி ஐந்து வேறுபட்ட மதிப்பெண்கள் இடப்பட்டு, சத்தியமார்க்கம்.காம் நிர்வாகிக்கு அனுப்பி வைக்கப் பட்டது. ஐந்து மதிப்பெண்களையும் கூட்டி வரும் மொத்தத்தை ஐந்தால் வகுத்துப் பெறப்பட்டதே இறுதி மதிப்பெண்ணாகும் (உம் : 52+ 61 + 49 + 70 + 39 = 271/5 = 54.2 ).

 

மதிப்பெண்கள் வழங்கிய முறை:

அடிப்படை மதிப்பெண்

35

தலைப்பை விட்டுவிலகாததற்கு

+10

ஆதார அடிப்படைகளின்சேர்க்கைக்கு

+10

அழகிய ஆற்றொழுக்கு நடைக்கு

+10

கொள்கைத் தெளிவுக்கு

+15

சமுதாயச் சிந்தனைக்கு

+10

உவமை / மேற்கோள்களுக்கு

+05

திறனாய்வு / தீர்வுக்கு

+05

மொத்தம்

100

 

இவற்றுள் மொத்த மதிப்பெண்ணில் தலைப்புக்குத் தொடர்பில்லாக் கட்டுரைக்குப் 10 மதிப்பெண்களும் ஆதார அடிப்படைகள் அற்றவைகளுக்குப் 10 மதிப்பெண்களும் குறைக்கப்பட்டன.


மதிப்பெண்கள் வழங்கப்பட்ட கட்டுரைகள் மீண்டும் கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பப்பட்டு, கட்டுரையாளர்கள் பெயருடன் மீண்டும் பெறப்பட்டு, பரிசு பெற்றவர்கள் பெயர்ப் பட்டியல் நடுவர்களால் தயாரிக்கப்பட்டது.


மேற்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி வழங்கப்பட்ட மதிப்பெண்களுள் மிகுஉயர்நிலையாக 83.8 மதிப்பெண்களைப் பெற்று, சிறப்புப் பரிசுக்குரியதாக சகோ. அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்கள் அனுப்பிய ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும்-தீர்வு என்ன? என்ற கட்டுரை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது!


சிறப்புப் பரிசை வென்ற அவருக்கு சத்தியமார்க்கம்.காம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது!.

பரிசு

கட்டுரையாளர்

தலைப்பு

மதிப்பெண்கள்

சிறப்புப்பரிசு

அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும்-தீர்வு என்ன?

83.8


சிறப்புப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போதைய சூழலில் ஊடகத்தின் அவசியத்தை உணர்த்திடும் விதத்தில் இப்போட்டியில் வந்த ஆக்கங்களில் மிகவும் தரமான ஆக்கங்களாக (மேற்கண்ட நடுவர் குழுவின் தனித் தனியான மதிப்பீட்டு முறைப்படி) மதிப்பெண் அளிக்கப்பட்ட நிலையில் சிறப்புப் பரிசு ஆக்கமும், ஆண்களுக்கான முதல் பரிசை வென்றதும் ஒரே தலைப்பை உடையன என்பது இங்குக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

மூன்று சகோதரிகளிடமிருந்து மட்டுமே ஆக்கங்கள் பெற்றதால் சகோதரிகளுக்கான ஆறுதல் பரிசும் இரண்டு சகோதரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சகோதரர்களுக்கான பரிசுகள் :

பரிசு

கட்டுரையாளர்

தலைப்பு

மதிப்பெண்கள்

முதற் பரிசு

முஹம்மது ஃபெரோஸ்கான்

ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும்-தீர்வு என்ன?

82.4

இரண்டாம் பரிசு

அழகன். மு.யூஸூஃப்

சியோனிச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான வழி

76

மூன்றாம் பரிசு

ஏ.எம்.பி.பைஜூர் ஹாதி

இந்தியா மற்றொரு சுதந்திரப் போராட்டம் நோக்கி?!

75.4

ஆறுதல் பரிசு

முஹம்மத் ரஃபீக்

உலக அமைதி இஸ்லாத்தின் ஊடாக!

74.2

ஆறுதல் பரிசு

க. சே. செய்யது அஹமது கனி

இந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சனையா?

74

ஆறுதல் பரிசு

M. அப்துல் ரஹீம்,

உலக அமைதி இஸ்லாத்தின் ஊடாக!

73.8

ஆறுதல் பரிசு

முஜீபுர் ரஹ்மான் H

முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்வு அடைவதற்கான வழிகள்

71

 

சகோதரிகளுக்கான பரிசுகள்:

பரிசு

கட்டுரையாளர்

தலைப்பு

மதிப்பெண்கள்

முதற் பரிசு

Mrs.பேகம். J

உங்களுக்கு ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டால்..?

74

இரண்டாம் பரிசு

Ms.J. ஜெஸீலா

இந்தியாவில் தீவிரவாதம் தீர்க்க முடியாத பிரச்சனையா?

73

மூன்றாம் பரிசு

Mrs. A. ஷம்ஷாத்

உலகப் பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்!

66.6


முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறுதல் பரிசுகளை வென்ற சகோதர சகோதரிகளின் கட்டுரைகளும் அடுத்தடுத்துப் பதிக்கப் படவிருக்கின்றன, இன்ஷா அல்லாஹ். அதைத் தொடர்ந்து போட்டியில் பங்கு பெற்ற ஏனைய கட்டுரைகளும் சத்தியமார்க்கம்.காம் ஆசிரியர் குழுவினரின் திருத்தத்திற்குப் பின்னர் பதிக்கப்படும்.

பரிசு பெற்றவர்களுக்கான பரிசுகளும் போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

போட்டியில் கலந்து கொண்டு, சமுதாயம் பயனடையத் தக்கக் கருத்துகளையும் ஆய்வுகளையும் ஆக்கங்களாக சமர்பித்த அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் உளங்கனிந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறதுடன், தங்கள் எழுத்துப்பணி பலனுள்ள விதத்தில் தொடர்ந்திடவும் பிரார்த்திக்கிறது.

வருங்காலத்தில் மேலும் இதுபோன்று சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவனவற்றை அறிந்து செயல்படுத்தி ஈடேற்றம் பெற ஊக்குவிக்கும் பல்வேறு செயல்பாடுகளைச் சத்தியமார்க்கம்.காம் செய்வதற்கான ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கப்பெற வல்ல ஏக இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

போட்டியில் கலந்து கொண்ட கட்டுரையாளர்கள் அனைவரது எழுத்தும் மேலும் கூர் பெற்று, சீர் பெற்று, பிறர் பெறும் பயனை அதிகரிக்க வேண்டி வல்ல ரஹ்மானிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

நன்றி!

சத்தியமார்க்கம்.காம்

 

 

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.