சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டி முடிவுகள்!

Share this:

அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசக சகோதர சகோதரிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

எண்பதுகளின் இறுதியில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஒரு பொட்டுப் போல் தொடங்கிய இணைய உலகு, வெகுவாய் விரிந்து படர்ந்துப் பரவி, இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் வியாபித்து விட்டது. இணையம் இல்லாமல் இயக்கம் இல்லை என்ற நிலை அனைத்துத் துறைகளுக்கும் வெகு விரைவில் ஏற்பட்டு விடும்.

வணிகம், விளம்பரம், நாள்-வார-மாத இதழ் ஊடகங்கள் போன்ற பொதுத் துறைகள் மட்டுமின்றி, திருமணம் போன்ற தனிமனித வாழ்விலும் தன் ஆளுமையை இணையம் ஏற்படுத்திக் கொண்டு விட்டது. சக்தி வாய்ந்த ஊடகமான இணையத்தை இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகவும் சமுதாய ஒற்றுமைக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சத்தியமார்க்கம்.காம் தளம் செயலாற்றி வருகின்றது.

இணையத்தைப் பயன்படுத்தி, அல்லாஹ் அவரவருக்கு வழங்கியுள்ள ஆற்றல்களை அடையாளம் கண்டு கொள்வதும் அவற்றை வளர்த்துக் கொள்வதும் அவற்றால் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டியச் சேவைகளைச் செய்ய முன்வர வேண்டியதும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் மீதும் உள்ள கடமைகளாகும் என்று சொன்னால் அது மிகையாகாது.

தன்னுள் புதைந்திருக்கும் ஆற்றல் வெளிப்படும்வரை எவருக்கும் தன்னுள்ளேயே அது ஒளிந்து கொண்டிருப்பதுத் தெரியாது!

அவ்வகையில் வாசகர்களுள் புதைந்திருக்கும் எழுத்தாற்றலை வெளிக்கொண்டு வரும் முதல் முயற்சியாக, சத்தியமார்க்கம்.காம் ஒரு கட்டுரைப் போட்டியைககடந்த 8 செப்டம்பர் 2007 அன்று அறிவித்திருந்தது.

அறிவிக்கப்பட்டிருந்த கட்டுரைத் தலைப்புகளிலிருந்து,


► இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகள்
► இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை
► இஸ்லாமியக் குடும்பச் சூழல்
► இஸ்லாமும் இணையமும்
► இஸ்லாமும் மேற்கத்தியக் கலாச்சாரமும்
► எது பெண்ணுரிமை?
► ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்
► கல்வியில் உயர்நிலை மேம்பாடு அடைய…
► கலாச்சார ஊடுறுவல்
► குழந்தைகளின் ஆரம்பக் கல்வி – இஸ்லாம்
► சகோதரத்துவம் நிலைபெற…
► சமூகத்தில் பெண்களின் பங்கு
► திருக்குர் ஆன் உருவாக்கிய சமுதாயம்
► பயங்கரவாதமும் மேற்குலகும்
► பெண்களின் சமூகப் பொறுப்புகள்
► மனித உடல் – இறைவனின் அற்புதம்
► மீடியாக்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?
► வளைகுடா வாழ்க்கை – வரமா சாபமா?


முதலிய தலைப்புகள் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கட்டுரைகள் எமக்குக் கிடைக்கப்பெற்றன.

இக்கட்டுரைப் போட்டியின் தொடக்கத்திலிருந்து இறுதி வரையிலான எங்களுடைய செயல்பாடுகளை உங்களோடுப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

முதல் கட்டுரை, கடந்த 21 செப்டம்பர் 2007 அன்று எங்களுக்கு வந்து சேர்ந்து உற்சாகமூட்டியது! அடுத்தடுத்துக் கட்டுரைகள் வரத் தொடங்கின. கட்டுரைகள் எங்கள் கைக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்த 31 அக்டோபர் 2007, வாசகர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க 15 நவம்பர் 2007 வரை நீட்டிக்கப்பட்டது. கட்டுரைகள் அனுப்பிய சிலர் கையெழுத்துப் பிரதியாக அனுப்பி இருந்ததால் அவற்றை யுனிகோடில் தட்டச்சும் பொறுப்பும் எங்கள் மீது ஒரு சுகமான சுமையாகச் சுமத்தப் பட்டது.

ஐவர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டு, கட்டுரைகளுக்குத் தனிதனியாக மதிப்பெண்கள் வழங்கும் பொறுப்பை நடுவர் குழுவினர் ஏற்றுக் கொண்டனர். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஐந்து வேறுபட்ட மதிப்பெண்கள் இடப்பட்டு, சத்தியமார்க்கம்.காம் நிர்வாகிக்கு அனுப்பி வைக்கப் பட்டது. ஐந்து மதிப்பெண்களையும் கூட்டி வரும் மொத்தத்தை ஐந்தால் வகுத்துப் பெறப்பட்டதே இறுதி மதிப்பெண்ணாகும் (காட்டு : 52+61+49+70+39=271/5=54.2) என்று முடிவு செய்யப்பட்டது.


மதிப்பெண்கள் வழங்கிய முறை :

அடிப்படை மதிப்பெண்

35

தலைப்பை விட்டு விலகாததற்கு

+10

ஆதார அடிப்படைகளின் சேர்க்கைக்கு

+10

அழகிய ஆற்றொழுக்கு நடைக்கு

+10

கொள்கைத் தெளிவுக்கு

+15

சமுதாயச் சிந்தனைக்கு

+10

உவமை / மேற்கோள்களுக்கு

+05

திறனாய்வு / தீர்வுக்கு

+05

மொத்தம்

100


இவற்றுள் மொத்த மதிப்பெண்ணில் தலைப்புக்குத் தொடர்பில்லாத கட்டுரைக்குப் 10 மதிப்பெண்களும் ஆதார அடிப்படைகள் அற்றவைகளுக்குப் 10 மதிப்பெண்களும் குறைக்கப் பட்டன.

மேற்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி வழங்கப்பட்ட மதிப்பெண்களுள் மிகுஉயர்நிலையாக 91 மதிப்பெண்களைப் பெற்று, சிறப்புப் பரிசுக்குரிய கட்டுரையாக “ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்” என்ற கட்டுரை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது!

சிறப்புப் பரிசுக்குரிய கட்டுரையை வடித்தளித்தச் சகோதரி ஜியா சித்தாரா (உம்மு ஹிபா) அவர்கள், தாம் எடுத்துக் கொள்ளும் கருப் பொருளுக்குப் பொருத்தமான சான்றுகளை மேற்கோள் காட்டிச் செறிவாக எழுதும் எழுத்தாளர் மட்டுமின்றி, கவியுள்ளம் கொண்டவருமாவார். சிறப்புப் பரிசை வென்ற அவருக்கு சத்தியமார்க்கம்.காம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது!


பரிசு

கட்டுரையாளர்

தலைப்பு

மதிப்பெண்கள்

சிறப்புப் பரிசு

சகோதரி. உம்மு ஹிபா (ஜியா ஸித்தாரா)

ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்

91


சிறப்புப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரை சத்தியமார்க்கம்.காம் தளத்தில்
பதிக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


சகோதரர்களுக்கான பரிசுகள்:


பரிசு

கட்டுரையாளர்

தலைப்பு

மதிப்பெண்கள்

முதற் பரிசு

சகோ. இப்னு அமீர்

இணையமும் இஸ்லாமும்

85

இரண்டாம் பரிசு

சகோ. சலாஹுத்தீன்

இஸ்லாமும் மேற்கத்தியக் கலாச்சாரமும்

77

மூன்றாம் பரிசு

சகோ. மீ. அப்துல்லாஹ்

குழந்தைகளின் ஆரம்பக் கல்வி இஸ்லாம்

74

ஆறுதல் பரிசு

சகோ ஹாஜா முஹைதீன்

வளைகுடா வாழ்க்கை வரமா? சாபமா?

73

ஆறுதல் பரிசு

சகோ. அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

கலாச்சார ஊடுருவல்

73

ஆறுதல் பரிசு

சகோ. ஷரஃபுத்தீன்

திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்

72

ஆறுதல் பரிசு

சகோ. கோவை முஹம்மத் (இறைதாசன்)

இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை

71

ஆறுதல் பரிசு

சகோ. N. ஜமாலுத்தீன்

எது பெண்ணுரிமை?

70

 


சகோதரியர்களுக்கான பரிசுகள்:


பரிசு

கட்டுரையாளர்

தலைப்பு

மதிப்பெண்கள்

முதற் பரிசு

சகோ. ஷமீலா யூசுஃப் அலி (ஹயா ரூஹி)

இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு

79

இரண்டாம் பரிசு

சகோ. உம்மு ரம்லா

இஸ்லாமியக் குடும்பச் சூழல்

69

மூன்றாம் பரிசு

சகோ. ஜஸீலா

எது பெண்ணுரிமை?

68

ஆறுதல் பரிசு

சகோ ஆயிஷத்து ஜமீலா

பெண்களின் சமூகப் பொறுப்புகள்

67

ஆறுதல் பரிசு

சகோ. ஃபரீதா

இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை

64

ஆறுதல் பரிசு

சகோ. சாரா பேகம் எம்.ஏ

திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்

63

ஆறுதல் பரிசு

சகோ. நதீரா இஸ்மாயில்

திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்

61

ஆறுதல் பரிசு

சகோ. ஜியா சித்தாரா (உம்மு ஹிபா)

இஸ்லாமியக் குடும்பச் சூழல்

84

 


இவை தவிர ஊக்கப் பரிசு ஒன்றையும் அறிவிக்கிறோம். இப்பரிசினை வெல்பவர்:


ஊக்கப்பரிசு

சகோ. முஹம்மத் அப்துல் கனி

தலைப்பு: எது பெண்ணுரிமை?

 


முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறுதல் பரிசுகளை வென்ற சகோதர சகோதரிகளின் கட்டுரைகளும் அடுத்தடுத்துப் பதிக்கப் படவிருக்கின்றன, இன்ஷா அல்லாஹ். தொடர்ந்து ஏனைய கட்டுரைகளும் சத்தியமார்க்கம்.காம் ஆசிரியர் குழுவின் திருத்தத்திற்குப் பின் பதிக்கப்படும்.

பரிசு பெற்றவர்களுக்கான பரிசுகளும் போட்டியில் கலந்துக் கொண்டமைக்கான சான்றிதழ்களும் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.


போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் உளங்கனிந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது!

வருங்காலத்தில் மேலும் இதுபோன்று சமுதாயத்திற்கு உபயோகமான பல்வேறு செயல்பாடுகளைச் சத்தியமார்க்கம்.காம் செய்வதற்கான ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கப்பெற வல்ல இறையோனிடம் பிரார்த்தியுங்கள்.

நன்றி!

சத்தியமார்க்கம்.காம்


குறிப்பு: போட்டியில் வென்ற கட்டுரையாளர்களுக்குரிய அனைத்துப் பரிசுகளும் உரியவர்களுக்கு சேர்ப்பிக்கப்பட்டு விட்டன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் – சத்தியமார்க்கம்.காம்Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.