பழகு மொழி (பகுதி – 5)

(1):2 குற்றியல் உகரம் (அரை மாத்திரை)

 

கடந்த பாடம் (1):1:3:1(அ)இல் நாம் படித்த உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகளுள் ஏதேனும் ஒன்று ஒரு சொல்லின் ஈற்றாய் (கடைசி எழுத்தாக) அமைந்து, அச்சொல், கீழ்க்காணும் ஆறு வகைச் சொற்களுள் ஒன்றாக இருப்பின் அந்த எழுத்து, குற்றியல் உகரம் எனப்படும்.

ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகர வல்லின உயிர் மெய்க் குறில் எழுத்துகள் சிலவேளை அதன் இயல்புத் தன்மையான ஒரு மாத்திரை அளவிலிருந்து குன்றி, அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். அதையே குற்றியல் உகரம் என்பர்..

 

குற்றியல் உகரத்தின் எழுத்துகள் 6: கு, சு, டு, து, பு, று (உகர வல்லின உயிர் மெய்க் குறில்கள்).

 

குற்றியல் உகர வகைகள் 6.


(1):2:1 நெடில் தொடர்க் குற்றியல் உகரம்:

இஃது இரண்டெழுத்துகளை மட்டும் கொண்டது. முதல் எழுத்து நெடிலாகவும் இரண்டாவதான இறுதி எழுத்து உகர வல்லின உயிர் மெய்க் குறில்களுள் ஒன்றாகவும் அமையும்.

 

காட்டுகள் : வாகு, காசு, மாடு, யாது, கோபு, று


(1):2:2 வன்தொடர்க் குற்றியல் உகரம்:

வன்தொடர்க் குற்றியல் உகரம் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். சொல்லின் ஈற்றில் (இறுதியில்) இடம் பெறும் உகர வல்லின உயிர் மெய்க் குறில் (கு,சு,டு,து,பு,று) எழுத்துக்கு இடப்புறம் அமைந்த (ஈற்றயல்) எழுத்து, ஈற்றெழுத்தின் மெய் (புள்ளி/ஒற்று) எழுத்தாக அமைந்திருக்கும்.

 

காட்டுகள் : சுக்கு, ச்சு, ட்டு, த்து, காப்பு, மாற்று


ஒரு சொல்லின் இறுதி ஈரெழுத்துகளாக (க்+க்+உ=)க்கு, (ச்+ச்+உ=)ச்சு, (ட்+ட்+=உ=)ட்டு, (த்+த்+உ=)த்து, (ப்+ப்+உ=)ப்பு, (ற்+ற்+உ=)ற்று ஆகியவற்றுள் ஏதேனும் அமைந்திருந்தால் அச்சொல்லின் இறுதியில் அமைந்த எழுத்து, வன்தொடர்க் குற்றியல் உகரம் என்று எளிதாக இனங் கண்டு கொள்ளலாம்.


(1):2:3 மென்தொடர்க் குற்றியல் உகரம்:

மென்தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் மெல்லின மெய்யெழுத்தைப் பெற்றிருப்பதால் மென்தொடர்க் குற்றியல் உகரம் என்றானது.


காட்டுகள் : நுங்கு, கழஞ்சு, ண்டு, சிந்து, கொம்பு, ன்று

 

ஒரு சொல்லின் இறுதி ஈரெழுத்துகள் ங்கு, ஞ்சு, ண்டு, ந்து, ம்பு, ன்று முதலியவற்றுள் ஏதேனும் ஒன்றாக அமைந்திருந்தால் அச்சொல்லின் இறுதியில் அமைந்த எழுத்து, மென்தொடர்க் குற்றியல் உகரம் என்று இனங் கண்டு கொள்க.


(1):2:4 இடைத் தொடர்க் குற்றியல் உகரம்:

இடைத் தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் இடையின மெய்யெழுத்தைப் பெற்றிருக்கும்.


காட்டுகள் : பெய்து, சார்பு, சால்பு, போழ்து


(1):2:5 ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரம்:

ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். ஈற்றயலில் ஆய்த எழுத்தைப் பெற்றிருக்கும்.


காட்டுகள் : கு, சு, து


குற்றியல் உகரப் பாடத்தில் இதுவரை நாம் பயின்றவை:


முதலாவதாக, ஓர் உயிர்மெய் நெடில் எழுத்தையும் ஓர் உயிர்மெய் வல்லின உகரக் குறில் எழுத்தையும் கொண்ட நெடில் தொடர்க் குற்றியல் உகரம்.

 

அடுத்த மூன்று பாடங்களில் (இறுதி எழுத்துக்கு இடப்புறம் அமைந்திருக்கும்) ஈற்றயலில் ஒற்று(புள்ளி எழுத்து) உடன் அமைந்த வன்/மென்/இடைத் தொடர்க் குற்றியல் உகரங்கள்.

 

ஐந்தாவதாக ஆய்த எழுத்தை ஈற்றயலாகக் கொண்ட ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரம்.


ஆறாவதாக நாம் பயில இருப்பது உயிர்த் தொடர்க் குற்றியல் உகரமாகும்.


(1):2:6 உயிர்(மெய்)த் தொடர்க் குற்றியல் உகரம்:

இந்தக் குற்றியல் உகரமும் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்டிருக்கும். இதன் ஈற்றயல் உயிர்மெய் எழுத்தாக இருந்த போதிலும் இஃது, உயிர்த் தொடர்க் குற்றியல் உகரம் என்றே வழங்கப் படுகிறது.


காட்டுகள் : விறகு, அரசு, கசடு, து, மரபு, வயிறு.

 

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

அதி. அழகு


<முன்னுரை | பகுதி - 1 | பகுதி - 2 | பகுதி - 3 | பகுதி – 4 >