சத்தியமார்க்கம்.காம் தளத்தில் அநாகரீகப் பின்னூட்டங்கள்!

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ஓரிரு நாட்களாக ஒரு குறிப்பிட்ட ஐ.பி முகவரியிலிருந்து அநாகரிகமான கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. சத்தியமார்க்கம்.காம் தளத்தின் விவாத அரங்கம் பகுதியில் விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதாக ஒப்புக் கொண்டு முறையாகத் தன்னை உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, தற்போது வெவ்வேறு பெயர்களில் தம் கருத்துக்களை பதிந்திருக்கும் இந்த நபரின் கருத்துக்கள் நாகரீகமானதாக இருந்த காரணத்தால், இவரைப் பற்றி நாம் அறிந்திருந்தும் இவர் எந்த எந்த புனைப்பெயர்களில் எல்லாம் பதிகிறார் என்ற அநாவசிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல் ஆரோக்கியமான இவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அனுமதித்து வந்தோம்.

 

ஆனால் சமுதாயத்தில் பிளவையும், சமுதாய நலனுக்குக் கேட்டையும் ஏற்படுத்தும்படி பிரபல இமாம்களின் பெயர்களில் அவர்களே தங்களின் சொந்தப் பெயர்களில் பதிவது போன்ற தோற்றத்தை  ஏற்படுத்திக்கொண்டு வன்முறையைத் தூண்டும் விதமாக இவரே சமீப ஆக்கங்களின் பின்னூட்டங்களில் பெயரை மாற்றி மாற்றி பதிந்து வருவதால் அதனை தொடர்ந்து மட்டுறுத்தலுக்கு உட்படுத்தி வருகிறோம்.

 

அநாகரிக கருத்துக்களை தொடர்ந்து இட்டுவரும் இச்சகோதரரை நாம் கேட்டுக் கொள்வது என்னவெனில் இவரின் கையாலாகாதனம் தொடரும் பட்சத்தில் சர்வதேச தரத்திலான உயர்தொழில்நுட்பங்களை திறமைவாய்ந்த வல்லுனர்களைக் கொண்டு கையாளும் சத்தியமார்க்கம்.காம் தன்னிடம் பதிவாகியுள்ள அனைத்து ஆதாரங்களையும் ஒன்று திரட்டி இவர் இருப்பிடமாகக் கொண்டு பதியும் சைபீரியா இணைய வழங்கி நிறுவனத்தின் உயர்அலுவலர்கள் திரு மஜ்தி ஈத், திரு காலித் சல்மான் அவர்களிடம் முறையான சட்டரீதியான சைபர் க்ரைம் பிரிவில் புகார் தரப்படும் என்பதையும் அதே வேளையில் சமூகக்கேடு விளைவிக்கும் எண்ணத்துடன் அவர் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பதிந்த அனைத்து விஷயங்களையும் முழு ஆதாரத்துடன் வெளியிடப்படும் என்பதையும் அன்புடன் அறியத் தருகிறோம்.

 

-நிர்வாகம் (சத்தியமார்க்கம்.காம்)