அன்பு மிக்க சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்கள் அபிமான சத்தியமார்க்கம் தளத்தில் சகோதரர் நூருத்தீன் எழுதிய ‘தோழியர்’ தொடர் நிறைவடைந்து இன்ஷா அல்லாஹ் வருகின்ற 22.8.2014 அன்று நூலுருவில் வெளிவர இருக்கிறது, அல்ஹம்து லில்லாஹ்!
சிறப்பு அழைப்பாளர்களாக
டாக்டர் ஆயிஷா அப்துல் ஹமீது M.B.B.S. (மனநல மருத்துவர், சென்னை)
பேரா. சயீதா பானு M.A. BEd. (தாளாளர், அனை கதீஜா மகளிர் கல்லூரி, அம்மாபட்டினம்)
பேரா. அ. மார்க்ஸ் (தலைவர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்)
ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். நன்றியுரை : நூலாசிரியர் நூருத்தீன்.
நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் கீழ்க்காணும் அழைப்பிதழை ஏற்று வாய்ப்புள்ளவர்கள் கட்டாயம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்,
சத்தியமார்க்கம்.காம்