அறிவிப்பு: அறிவுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம்!

நிர்வாக அறிவிப்பு:

சத்தியமார்க்கம்.காம் நடத்திவரும் இஸ்லாமிய அறிவுப்போட்டி-களில் உற்சாகமாக கலந்து கொண்டு வரும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறைச் சிந்தனையின் பக்கம் ஈர்ப்பினை அதிகரிப்பதும் அறிவுப் புரட்சியை நோக்கி கவனத்தைத் திசை திருப்புவதுமான நோக்கத்தை முன்வைத்து துவங்கப்பட்ட இப்போட்டிக்குக் கிடைத்த வெற்றிக்கு, உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்களையும் பிரார்த்தனைகளையும் கூடவே உன்னத ஆலோசனைகளையும் சுமந்து வாசகர்களிடமிருந்து பரவலாக வந்து குவிந்து கொண்டிருக்கும் மின் அஞ்சல்களும் பின்னூட்டங்களும் சாட்சி பகர்கின்றன.

“அறிவுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களைத் தேர்வு செய்யும் முறையினை மாற்ற வேண்டும்” என்ற, இணைய வேகம் குறைந்த பல வாசகர்களின் தொடர்ச்சியான – நியாயமான கோரிக்கைகளைத் தொடர்ந்து, இதுநாள் வரை மிகக் குறைந்த நேரத்தின் அடிப்படையில் வெற்றியாளரைத் தேர்வு செய்யும் முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இனி குறைந்த நேரத்தின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படமாட்டாது. கலந்து கொண்டு 100% சரியான விடைகள் எழுதி வெற்றி பெறும் வாசகர்கள் இனிவரும் போட்டிகளில் இன்ஷா அல்லாஹ் [Computer based Random Selection] குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை அறியத் தருகிறோம்.

வாசகர்களின் உற்சாகமான தொடர் ஆதரவுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி!

– நடுவர் குழு,
சத்தியமார்க்கம்.காம் இஸ்லாமிய அறிவுப்போட்டி