அமெரிக்க ஊடகங்கள் திவால்!!

Share this:

உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கும் இந்தப் பொருளாதாரத் தேக்கம் யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஜவுளித் தொழிலில் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. உலக போலிஸான அமெரிக்காவிலோ நிலைமை படுமோசம். லேஹ்மான் பிரதர்ஸில் ஆரம்பித்த திவால் புயல் , இப்போது அமெரிக்க பத்திரிகையுலகையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.

 

தொடர்ச்சியான நிறுவனங்களின் திவால் நோட்டீஸ் , பத்திரிகைகளின் விளம்பர வருவாயை வெகுவாக குறைத்துவிட்டது.

அனேக அமெரிக்க ஊடகங்கள் பொருளாதாரச்சூறாவளியில் சிக்கித் தவிக்கின்றன…….அதனால் நிறைய பத்திரிகையாளர்கள் மற்றும் அது சார்ந்த பணியாளர்கள் வேலை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.

அதனால் பொருளாதாரச் சிக்கலின் புதிய சேதாரமாக டிரிப்யூன் கம்பெனி – அமெரிக்காவின் புகழ் பெற்ற லாஸ் ஏன்சல்ஸ் டைம் மற்றும் சிகாகோ ட்ரிப்யூன் பத்திரிகைகளையும் 23 தொலைக்காட்சி சேனல்களையும் மற்றும் 12 பத்திரிகைகளையும் கொண்ட இந்த மாபெரும் மீடியா கம்பெனி ஏற்கெனவே மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டது. ட்ரிப்யூன் கம்பெனியின் தலைமை நிர்வாகி திரு.சாம் ஜெல் குறிப்பிட்டதாவது , நிறுவனத்தின் மொத்த மதிப்பான 7.6 பில்லியன் டாலர்களை விட கடனானது 13 பில்லியனைத் தாண்டுவதாகவும் , நிலைமை தங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை எனவும் , வருவாயானது அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

நியூயார்க் டைம்ஸின் பிரபல பத்திரிகையாளர் திரு. காஃர் குறிப்பிடும்போது , “ஊடகத் துறையினர் பெரும்பாலும் விளம்பரத்தை நம்பியே இருப்பதால் பொருளாதாரச் சுனாமியில் அவர்களும் சிக்கிக் கொண்டார்கள்…….என்றார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தன்னுடைய தலைமை அலுவலகத்தை அடகு வைத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெறுகிறது. தங்கள் நிறுவனத்தை நடத்த இதை விட வேறு வழி தெரியவில்லை என்றும் சொல்லியிருக்கிறது அது. அந்நிறுவனத்தின் பங்குகள் 55 சதவித மதிப்பை இந்த வருடத்தில் இழந்திருக்கிறது..மொத்த நிதி நெருக்கடி மதிப்பு 400 மில்லியன் டாலர்கள்.

சி.பி.எஸ் செய்தித் தொலைக்காட்சி பங்கு மதிப்புகள் 5 டாலருக்கும் குறைவாக வீழ்ச்சியுற்றிருக்கின்றன. நியூஸ் கார்ப் பங்குகள் 6 டாலருக்கும் கீழே போய்விட்டன. டைம் வார்னர் குழுமத்தின் பங்குகள் 8 டாலருக்கும் கீழே வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

அமெரிக்காவின் மூன்றாவது பெரிய மீடியாவான மெக் க்ளாத்தி குழுமம் 30 பத்திரிகைகளை நடத்தி வருகிறது..அதன் முக்கிய பத்திரிகையான மியாமி ஹெரால்டை விற்பனைக்கு என்று அறிவித்திருக்கிறது. அந்த மியாமி ஹெரால்டு பத்திரிகையின் சர்க்குலேசம் 210000 பிரதிகளுக்கு மேல் , அது மட்டுமின்றி 19 புலிட்சர் விருதுகளையும் பெற்ற பத்திரிகை அது.

தற்போதைய நிலவரப்படி , அமெரிக்காவின் மொத்த பத்திரிகைகளின் விளம்பர வருமானம் 2 பில்லியன் டாலர்கள்….இது மூன்றாவது காலாண்டில் 18.1 சதவீதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இணைய வருமான வீழ்ச்சியும் இரண்டாவது காலாண்டாக தொடர்கிறது. , யு.எஸ்.ஏ டுடே பத்திரிக்கை ஏற்கெனவே ஆட்குறைப்பை அறிவித்திருக்கிறது. போன வாரம் தான் சிகாகோ ட்ரிப்யூன் ஆட்குறைப்பை அறிவித்திருந்தது. யு.எஸ்.ஏ டுடே வின் தாய்க் குழுமமான கேன் னெட் தன்னிடமுள்ள 80 பத்திரிகைகளின் ஊழியர்களில் பத்து சதம் பேரை வெளியேற்றப்போவதாக அறிவித்திருக்கிறது.

17 உறுப்பினர்களைக் கொண்ட காக்ஸ் குழுமமோ , தனது வாஷிங்டன் செயல்பாட்டை மூடப் போவதாக அறிவித்திருக்கிறது.. மில்வாய்ஃக்கி ஜோர்னல் – சென் டினல் ஏற்கெனவே 20 சத ஊழியர்களை வெளியேற்றிவிட்டன. பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள் தங்களது வெளி நாட்டு பிரிவுகளை மூடிவிட்டன.

நன்றி: தமிழ் சர்கிள்.

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.