தெளிவான தீவிரவாதி…!

தெளிவான தீவிரவாதி...!
Share this:

தெளிவான தீவிரவாதி…!

இருபதாம் நூற்றாண்டிற்கு மேற்குலகம் கண்டு பிடித்தளித்து, விசித்திரமாகத் தமிழ்ப்படுத்தப் பட்ட சொற்கள்தாம் Terrorism/Terrorist முறையே தீவிரவாதம்/தீவிரவாதி!

 
தேர்தலில் “தீவிர”ப் பிரச்சாரம் செய்பவர், அரசியல்வாதி.
 
என்கவுண்டரில் கொல்லப் பட்ட வீரப்பனை இரு மாமாங்கங்களாகத் “தீவிர”மாகத் தேடியவர்கள், காவல் துறையினர்.
 
நடிக-நடிகையரின் வீட்டில் கருப்புப் பணத்தைத் “தீவிர” வேட்டையாடுபவர்கள், வருமான வரிச் சோதனையாளர்கள்.
 
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றத் “தீவிர” முயற்சியில், மத்திய அரசு.
 
Terrorism, Terrorist ஆகிய ஆங்கிலச் சொற்களை முறையே தீவிரவாதம், தீவிரவாதி என்று தமிழ்ப் படுத்தினால் மேற்காணும் அரசியல்வாதி, காவல்துறையினர், வருமான வரிச் சோதனையாளர்கள், மத்திய அரசு மட்டுமின்றித் தற்போது தமிழகத்தில் “தீவிர”மாகி விட்ட பருவமழையும் தீவிரவாதிப் பட்டியலில் இடம் பெற்றுவிடும்.
 
Terrorism என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, ‘பயங்கர ஆட்சிமுறை’, ‘பயங்கரக் கொள்கை (இயக்கம்)’, ‘அச்சுறுத்திப் பணிய வைத்தல்’ ஆகிய தமிழ்ப் பொருள்களும் Terrorist என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, ‘பயங்கரவாதி’, ‘வன்முறைப் புரட்சிக்காரன்’, ‘அச்சுறுத்தி ஆள்பவன்’ ஆகிய பொருள்களும் அகராதியில் காணப்படுகின்றன.

ஆனால், தமிழில் வெளிவரும் அனைத்து இதழ்களும் Terrorist ஐத்தீவிரவாதி என்று தமிழ்ப் படுத்தி,  “ஈடுபடும் காரியத்தில் தெளிவுடனும் உறுதியுடனும் செயல்படுபவன்” என்ற அகராதி பொருளை அர்த்தமற்றதாக்கி, “ஆயுதங்களால் மக்களை அநியாயமாகக் கொல்பவன்” என்ற ஒரே பொருள்சார்ந்த அச்சத்தை மக்களின் மனதில் விதைத்து விட்டன.

இந்தத் ‘தீவிரவாதி’ என்ற பூச்சாண்டியைக் காட்டியே நாட்டில்-உலகில் “தெளிவான தீவிரவாதிகள்” செய்து முடித்துள்ள, செய்ய எண்ணியுள்ளசெயல்களும்திட்டங்களும்எழுத்தில் வடிக்க இயலாதவை.

யார் இந்தத் தெளிவான தீவிரவாதிகள்?

தீவிரவாதிக்கான புதிய அர்த்தத்தின்படி, “தான் கருவறுக்க நினைப்பவர்களைப் பூண்டோடு அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் முறையாகத் திட்டமிட்டு இறுதிவரை அதனைச் செயல்படுத்துவதற்கான எல்லா வேலைகளையும் செய்பவன் “ஐத்தமிழிதழியலின் சம்பிராதயத்தைப் பின்பற்றி, “தெளிவான தீவிரவாதி” என்றே தற்காலிகமாகச் சொல்லி வைப்போம்.

அந்த வகையில் இன்று கண்முன் நிழலாடுபவர்கள் இருவரே. முதலாமவர், இருபதாம் நூற்றாண்டிற்குத் தீவிரவாதத்தைப் பரிசளித்த உலகத் தீவிரவாதி ஜார்ஜ் புஷ். இரண்டாமவர், இந்திய உச்சநீதிமன்றத்தாலேயே “நவீன நீரோ” எனப் புகழ்மாலை சூட்டப்பட்ட இந்தியாவின் ஒரே மாநில முதல்வர் நரேந்திர மோடி.

“இஸ்லாமியத் தீவிரவாதம்” எனத் தீவிரவாதத்திற்கு இஸ்லாத்தை அடைமொழி கொடுத்த புஷ், இஸ்லாமிய மக்கள் நிறைந்து வாழும் ஆப்கான் மற்றும் ஈராக்கில் கொன்று குவித்த அப்பாவி முஸ்லிம்களின் எண்ணிகை மில்லியன்களைத் தாண்டும்

கடந்தசில தினங்களுக்கு முன்னர், இந்தியத்தலைநகரம் டில்லியில்நடந்த மத-அரசியல் தலைவர்களின் சர்வதேசத் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்த தலாய்லாமா, “இஸ்லாம் என்பது சமாதானத்தின் மார்க்கமாகும். அது ஒருபோதும் தீவிரவாதத்தை ஊக்குவித்ததில்லை. அப்படியிருக்கையில் தீவிரவாதத்திற்கு இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும் குறிவைப்பது வேதனைக்குரியதாகும். முஸ்லிம்கள் உலகில் சமாதானத்தை விரும்புபவர்களாவர். ஓர் உண்மையான முஸ்லிமினால் ஒரு போதும் தீவிரவாதி ஆக இயலாது” எனக்கூறினார்.
 
தலாய் லாமா கூறியதில், “அமைதியைப் போதிக்கும்/விரும்பும் இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிமால் தீவிரவாதியாக ஒருபோதும் இயலாது” என்ற சொற்கள் ஊன்றிக் கவனிக்கத் தக்கவை.
    
ஆனால் இவையெல்லாம் தெளிவான திட்டங்களுடன் அரசு இயந்திரங்களை உபயோகித்து தீவிரவாதத்தில் ஈடுபடும் புஷ் மற்றும் மோடி போன்ற தெளிவான தீவிரவாதிகளுக்கு மூளையில் ஏறப்போவதில்லை.
 
அந்த மாநாட்டிற்குப் பின்னர் டில்லி ஜுமா மஸ்ஜிதின் இமாம் புகாரி பேசியதில் சிலவாசகங்களும் இங்கு கவனிக்கத்தக்கவை.

இன அழிப்பைத் திட்டமிட்டு நடத்தியத் தெளிவான தீவிரவாதி! “நரேந்திரமோடி குஜராத்தில் முதல்வராக இருக்கும் வரை அங்கு இன அழித்தொழிப்பு ஓயாது. இன்றுவரை தீவிரவாதி என்ற பெயரில் பல அப்பாவி இளைஞர்களை மோடி என்கவுண்டர் என்ற பெயரில் அழித்து வருகிறார். ஆனால் உண்மையான தீவிரவாதி மோடிதான்.

குஜராத் இன அழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதியாக்கப் படவேண்டும். ஆனால் அது மோடி முதல்வராக இருக்கும்வரை நம்மால் எதிர்பார்க்க இயலாத ஒன்று. தங்களை அநியாயமாக அழிப்பவர்களுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோபமே பலரைத் தீவிரவாதத்தில் கொண்டு சேர்க்கின்றது.

தன் சொந்தச் சகோதர-சகோதரிகள், பெற்றோர், பச்சிளம் பாலகர்கள் தன் கண் முன்னே வைத்து கொடுமைப் படுத்தப்பட்டும் மானபங்கப் படுத்தப்பட்டும் கொல்லப்படும் போது தடுக்க வேண்டிய காவல்துறையே தீவிரவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கும் ஒருவன் -இறுதியாக நீதிமன்றக் கதவுகளைத் தட்டி, அங்கும் எவ்வித நீதியும் கிடைக்காமல் போனால் அவன்என்ன தான் செய்வான்? யாருக்காக வாழ வேண்டுமோ அவர்கள் அனைவரும் தன் கண் முன்னால் அநியாயமாகக் கொலையுண்டபின்னர், தனக்கு நீதியும் மறுக்கப் பட்ட அத்தகைய நிலையில் அவன் தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல் தீவிரவாதச் செயல்களின் பக்கம் திரும்பாமல் இருந்தாலே அது அற்புதமாகும்.

கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கு நீதி உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க இயலும்” என இமாம் புகாரிகூறினார்.

இமாம் புகாரியின்கருத்தை நாம் இங்கு எடுத்தெழுதுவதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

கடந்த பாராளுமன்றத் தேர்தல்களில் தனது தோழர் வாஜ்பாயின் வெற்றிக்காக பாஜகவுக்கு ஓட்டுகேட்டவர்தான் இவர். முஸ்லிம் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட எவனும் இந்தியத் தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தலைமையாகக் கொண்ட பாஜகவிற்காக ஓட்டு கேட்க மாட்டான் என்பது திண்ணம்.

அப்படியிருக்க பாஜக அனுதாபியான இவர், அதே பாஜகவின் மாநில முதல்வர் மோடியினைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கின்றார் எனில் அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமேயாகும்.

தனது தலைமைப் பீடம் பயிற்றுவித்த, “முஸ்லிம்களை அடியோடு அழித்தல்” என்ற அடிப்படை அஜண்டாவை அப்படியே உள்வாங்கி, துவக்கம் முதல் மிகச் சரியாகத் திட்டமிட்டு அதனைக் குஜராத்தில் நடைமுறைப் படுத்துபவர்தான் மோடி.

அதற்காகத் தனது இன மக்களைக்கூட காவு கொடுக்கத் தயாரானவன் தெளிவான தீவிரவாதியல்லாமல் வேறென்ன?

தன் பதவிக்காகத் தன் மக்களையே எரித்த நவீன நீரோ! உலகில் இஸ்லாமியர்களின் தலைமீது தீவிரவாதச் சுமையைத் தூக்கி வைத்து, அவர்களை அழிக்கத் தன் சொந்தநாட்டு மக்களையே காவு கொடுக்கும், உலகத்திலேயே தெளிவான தீவிரவாதியான புஷ்ஷை அடியொற்றி, குஜராத் முஸ்லிம்களை அழிக்கத் தன் இனமக்களான “கரசேவகர்களையே ரயிலில் வைத்துப் பூண்டோடு எரித்த” மோடி, தொடர்ந்த முஸ்லிம் மக்களின் இன அழிப்பிற்காகப் பல மாதங்களுக்கு முன்னரே தயாராகி இருந்தது இன்று வெளிக் கொணரப் பட்டுள்ளது.

தான் காக்கவேண்டியப் பயிரையே மேய்ந்த வேலி!

குஜராத் முதல்வராக மோடி பதவி ஏற்றதிலிருந்து இதுவரை போலி என்கவுண்டர் மூலம் காவல் துறையால் சுட்டுத் தள்ளப் பட்ட – சொஹ்ரப்தீன் தம்பதியினர் உட்பட – முஸ்லிம்களின் எண்ணிக்கை ஐம்பதை நெருங்குகிறது. படுகொலை செய்யப் பட்ட அனைவர் மீதும் “மோடியைக் கொல்லச் சதி செய்தார்கள்” என்ற ஒரேயொரு போலியான குற்றச்சாட்டு சுமத்தப் பட்டது. நாட்டுத் துப்பாக்கிகள் ‘வைத்து’ எடுக்கப் பட்டன. ஆனால், நேர்மையான சில பத்திரிகைகளாலும் நல்ல மனம் படைத்த நடுநிலையாளர் சிலராலும் உண்மை வெளிச்சத்துக்குக் கொண்டு வரப் பட்டது.  போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லிம்களைச் சுட்டுத் தள்ளிய குற்றத்துக்காக மூன்று IPS கொலைகார அதிகாரிகள் கைது செய்யப் பட்ட செய்தி, நாட்டையே ஓர் உலுக்கு உலுக்கி எடுத்தது. பள்ளிப் படிப்பைப் படிப்பதற்குக்கூட வசதியில்லாமல் முஸ்லிம்கள் போட்ட பிச்சையில் படித்தவனும் பதின்மூன்று முஸ்லிம்களைப் போலி என்கவுண்டரில் கொன்றவனுமான டி.பி. வன்சாரா என்ற அயோக்கியக் கொலைகாரன் IPS-க்கு 150 கோடி வரை சொத்துகள் பரிசளிக்கப் பட்டுள்ளன.

கருவறுக்கப்பட்டது போக, அனைத்தையும் இழந்து சொந்த மண்ணில் அகதி முகாம்களில், அடிமனதில் அடங்காத பீதியுடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்குத் தினசரி வாழ்வாதார உரிமைகளைக்கூட கொடுக்காமல் மறுத்து வருவது மோடியின் திட்டத்தின் மற்றொரு கட்டத்தைச் செயல்படுத்துவதன் ஒரு பாகமே.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமல் தடுப்பதும் அதன் மற்றொரு கட்டம்தான். இதனைத் தான் இமாம் புகாரி அடிகோடிட்டுள்ளார்.

இதோ இன்று தனது நாட்டில் நடைமுறைப் படுத்திய அதே திட்டத்தைக் கர்நாடகத்திலும் “குஜராத் மாடல் பின்பற்றப்படும்” எனத் தனது மற்றொரு சக சங்கத் தோழனான எடியூரப்பாவிற்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார் மோடி.

இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் வகுத்தளித்த “முஸ்லிம் இன அழிப்பை”த் திட்டமிட்டு நடைமுறைபடுத்த முயலும் மோடியை இந்தியாவின் நம்பர் ஒன் தெளிவான தீவிரவாதி என்று தாராளமாகக் கூறலாம்.

“கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்” என்ற உவமைச் சொலவடையை உண்மைப் படுத்துவது போல் பெரும்பாலும் தீவிரவாதிகளுக்கு இறுதி முடிவு என்பது “என்கவுண்டர்” போன்று ஏதாவது விரும்பத்தகாத துர்முடிவாகவே இருக்கும்.

இன்று உலகிலும் இந்தியாவிலும் தெளிவான தீவிரவாதிகளாக வலம் வரும் புஷ் மற்றும் மோடிதீவிரவாதிகளின் முடிவு…?

இவர்களால் பாதிக்கப்பட்டு இன்றும் நீதி மறுக்கப்பட்டு மனதில் அடங்காக் குமுறலுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்களுக்கான நீதி கிடைப்பதைப் பொறுத்தே இவ்விருவரின் முடிவும் அமையும்.

இந்தத் தெளிவான தீவிரவாதிகளால் அநியாயத்திற்குள்ளாக்கப்பட்டு, மறுக்கப்பட்ட நீதியுடன் உலாவரும் எண்ணிலடங்கா அப்பாவி மக்களை, இவர்களைப் போன்றவர்களுக்கு எதிரான மற்றொரு தீவிரவாதக் கூட்டமாக மாற்றாமல் இருப்பதற்கான கடமை இவ்வுலகில் நீதிமன்றங்களுக்கு மட்டுமே உண்டு.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.