பெண்ணைப் பொன்னில் பொதிந்தது யார்? (பகுதி-2)

Share this:

பெண்களின் ஆபரணத்தின் மீதான அளவுகடந்த ஆசையை முன்வைத்து நடத்தப்பட்ட பெண்கள் கருத்தரங்கில் பங்கு கொண்ட பிரபல கேரள பெண் வழக்கறிஞர் கெ.பி. மறியம்மா அவர்கள், அங்கு முன்வைக்கப்பட்ட இது தொடர்பான 6 கேள்விகளுக்கு தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

1) பெண்களில் 50 % பேரும் ஆபரண ஆசையுடையவரல்ல! மாப்பிள்ளையின் கோரிக்கைக்கு இணங்க பெண் வீட்டினர் நகை கொடுக்க நிர்பந்தமான சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். அதனால் பெண்கள் நகைகளை உபயோகிக்கின்றனர் என்பதே உண்மை. பெண்களில் நகைகள் மிகுதியாக உள்ளவர்கள் கூட அதை உபயோகிப்பதிலில்லை. ஆண்களின் மனமாற்றம் கொண்டு மட்டுமே பெண்களுக்கு இப்பிரச்சினையில் இருந்து தப்பிக்க இயலும்.

2) திருமணச் சந்தையில் கண்ணீர் குடிக்கும் நிலைக்கு ஆளாகும் பெண்களின் மோசமான நிலைக்கு முக்கியக் காரணம் பெண்களின் ஆபரணத்தின் மீதான அளவுகடந்த ஆசை மட்டும்காரணமல்ல. பெண்கள் ஆபரணம் அணிய நிர்பந்தமான சூழலுக்கு தள்ளப்படுவதற்குக் காரணம் ஆண்களின் பணத்தின் மீதான அதிக ஆசையே காரணம். பணமில்லாதவர்கள் அதிக கஷ்டங்கள் அனுபவிக்கக் கூடிய நிலை உருவாகுவதற்கும் காரணம் அதுவே. சிலரின் குடும்பவாழ்க்கை தாறுமாறாகி தற்கொலையில் சென்று முடிவதற்குக் காரணமும் ஆண்களின் அதிக ஆசையே காரணம். நகைகள் அதிகமாக அணிந்துக் கொண்டு உலாவருபவர்கள் குடும்ப வருமானத்தில் மிகவும் தாழ்நிலையில் உள்ளவர்களே ஆவர். இவர்கள் மகளின் திருமணத்திற்கு நகை கொடுப்பது தங்களின் சொந்த வருமானத்தைக் கொண்டல்ல. திருமண வியாபார சந்தையில் சொந்த மகளுக்கு விலைகூறும் பொழுது மகளின் கண்ணீரை காண்பதற்கு சகிக்காத பெற்றோர்கள் பிரிவெடுத்தாவது தன் மகளை கட்டி அனுப்புகின்றனர். தங்களின் சொந்த இந்திரியங்களில் இருந்து பிறந்தது பெண்களாகிப் போனதன் காரணத்தால் பெற்றோர்களை பிச்சைக்காரர்களாக மாற்றும் இந்த சம்பிரதாயத்தை உருவாக்கியது பெண்களும் பெண்களின் நகைப்பிரியமும் தான் எனக்கூற முடியுமா? திருமணம் செய்விக்க ஒரு வருடம் அதிகமானால் திருமண சந்தையில் வரதட்சணையின் டிமாண்டும் அதற்கௌ ஏற்ப அதிகரிக்கும். அதனால் முன்னரே தங்கள் பெண்குழந்தைகளை திருமணம் செய்து அனுப்பிவிட பெற்றோர்கள் நிர்பந்தமான சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அதன் காரணமாக பெண்களின் கல்வி முடங்குகின்றது. இவை எல்லாம் ஆண்கள் உருவாக்கி வைத்த இந்த மோசமான சம்பிரதாயத்தின் விளைவுகளல்லவா? ஆதலால் இதன் உத்தரவாதம் ஒருபோதும் பெண்களுக்கல்ல. ஆண்களுக்கே!

3) தற்போது நகைக்கடைகள் அதிகம் முளைப்பதன் பின்னணியில் எக்காலத்தும் தங்கத்தின் மதிப்பு மாறா நிலையும் ஒரு காரணமாகும். அடிக்கடி நகையின் விலை கூடுகின்றது. தற்போது இருப்பதிலேயே ஏற்றவும் பெரிய இலாபகரமான தொழிலாக வியாபாரிகள் இதனை காண்கின்றனர். எத்தனை நாட்கள் இருந்தாலும் மதிப்பு மாறாத உலோகமானதால் தான் இந்தப் பக்கம் அதிக பணம் முடக்க வியாபாரிகள் தயாராகின்றனர்.

4) முன்பு முஸ்லிமல்லாத பெண்கள் நகைகள் போடுவது மிகவும் குறைவாக இருந்தது. தற்பொழுது அவர்களும் முஸ்லிம்களைப் போல் நகைகளை அதிகமாக போடத் துவங்கியுள்ளனர். இது வரதட்சணை அவர்களுக்கிடையிலும் பரவத்தொடங்கிவிட்டதன் அடையாளமாகும்.

5) பெண்களின் நகைபற்றை குறைக்க மார்க்க உபதேசங்கள் நல்ல விதத்தில் பலனளிக்கும். நம் ஜமாஅத்துகள் சமூக சேவைகளின் உறைவிடங்களாக மாறவேண்டும். திருமணத்திற்கு முன்பே ஆண் பெண்களை பங்குபெற செய்து சமூக வகுப்புக்கள் நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் வரதட்சணை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகளை அவர்களுக்கு புரியவைப்பதற்கு முடியவேண்டும். பெண்கள் தங்களின் உரிமையான மஹ்ரை கேட்டுப் பெறவும், ஆண்கள் தாங்கள் கொடுக்கும் மஹ்ரை மட்டும் அணிந்து கொண்டு பெண்களை அழைத்து செல்வதற்கும் உரிய சூழல் உருவாக வேண்டும்.

6) ஆபரணத்தின் மீதான அளவுகடந்த ஆசையில் இருந்து பெண்கள் மட்டும் மீள்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு ஒருபோதும்பரிகாரம்கிடைக்கப்போவதில்லை. பணம் மீதுள்ள அதிக ஆசையின் காரணமாக மார்க்க விதிகளை மீறி 35 திருமணம் வரை செய்து சமூகத்தை ஏய்த்த ஆண்கள் உள்ள சமூகம் தான் நம்முடையது. ஆண்கள் பணத்தின் மீது இவ்வாறு அதீத பற்று வைத்திருக்கும் பொழுது, பெண்கள் நகையின் மீதான அதீத பற்றிலிருந்து மீள்வதால் மட்டும் பிரச்சினை எவ்வாறு தீரும். இன்றைய பெண்கள் முக்கியமாக இளம்பெண்கள் போடுவது நகைகளையல்ல. அதற்குப்பகரமாக அணியும் ஆடையின் வண்ணத்திற்கு மேட்ச் பார்த்து அதற்கு ஏற்ற ஃபேன்ஸி சாதனங்களைதான் அவர்கள் தற்போது பரவலாக பயன்படுத்துகின்றனர். அதிக நகைகள் உள்ள பெண்கள் கூட அவற்றை அணிந்து தங்களின் அழகை வெளிக்காட்ட தற்போது தயாராவதில்லை. எதிர்காலத்திற்குரிய ஒரு சேமிப்பாக மட்டுமே தற்போது அவர்கள் அதனை காண்கின்றனர்.

வைக்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர் அளித்த பதிலின் மொத்த தாக்கத்தில் அவர் ஆண் சமூகத்தையே சாடினார். பெண்களின் அதீத நகை மோகத்திற்கு அடிப்படை காரணம் ஆண்களின் பணத்தின் மீதான அதீத ஆசையே காரணம் என்பது அவர் கருத்துக்களில் எங்கும் பிரதிபலித்தது. முடிவாக ஆண்களின் மனமாற்றத்தின் மூலம் மட்டுமே இதற்கு முழுஅளவில் பரிகாரம் காணமுடியும் என அவர் கூறினார்.

–அபூசுமையா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.