முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு

மிழகத்தில் IAS, IPS-க்குப் பிறகு உயர் பதவிகளாக உள்ள இணை ஆணையர் (Deputy Collector), காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP), மாவட்டப் பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவுள்ளது.

 

இதற்கான விண்ணப்பப் படிவம் தற்போது விநியோகிக்கப் படுகிறது. முஸ்லீம் பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் 13 இடங்களில் குரூப் I மற்றும் குரூப் II தேர்விற்காக இலவசப் பயிற்சி நடத்தப்பட உள்ளதாக “ரேடியன்ட் அகாடமி” தலைவர் ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள புது கல்லூரியில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன.

மேலும் சென்னை எஸ்ஐஇடி பெண்கள் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி, மதுரை வக்ப் கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி உட்பட தமிழக்த்தில் 13 இடங்களில் இந்த இலவச பயிற்சி அளிக்கப் படுகிறது. இந்த இலவசப் பயிற்சி பற்றி மேலும் அறிந்து கொள்ள ரேடியன்ட் அகாடமி ரஹ்மதுல்லாஹ் (+91 – 9629309314) அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.


இணைய தளம்: http://www.radianiasacademy.org/pages/ContactUS/Address.aspx

தகவல்: S.சித்தீக்.M.Tech