உருகும் பிஞ்சுக்கு உதவுவோம்!

Share this:

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூரைச் சேர்ந்த ஜஹபர் சாதிக்கின் மகன் இபுராஹீம், மூன்று வயது நிரம்பிய பாலகன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக விரைப்புற்று நோயால் பாதிக்கப் பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.

 

அவனின் தந்தை ஜஹபர் சாதிக் மிகக் குறைந்த ஊதியத்தில் டிரைவராகக் குவைத்தில் பணியாற்றி வருகிறார். இதுவரைக்கும் அவரது ஒரே சொத்தாக இருந்த, குடியிருந்த வீட்டையும் மகனது மருத்துச் செலவுக்காக விற்று விட்டார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, திருச்சியிலுள்ள ஜி.வி.என் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை இபுராஹீமின் உடல்நலம் மோசமாகியதும், கடந்த மாதம் சென்னையிலுள்ள Cancer Institiute (WIA) புற்றுநோய் மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும்படி ஜி.வி.என் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

குழந்தையின் சிகிச்சைக் குறிப்புகள்

17.03.2008இல் நாகை Advanced Diagnostics & Scans செண்டரில் டாக்டர் ரேணுகா அவர்களால் Ultrasonogram பரிசோதனை நடத்தப் பட்டு, நோயின் வீரியம் அறியப் பட்டது. குறியீட்டு எண் 9192.

12.08.2008இல் திருச்சியிலுள்ள GVN Hospital மருத்துவர்களான டாக்டர் கோவிந்தராஜ், டாக்டர் பன்னீர் செல்வம் ஆகியோரால் Ultrasound Scan பரிசோதனை செய்யப் பட்டு, புற்றின் அளவு (52x41x40) கண்டறியப் பட்டது.

13.08.2008, 11.09.2008, 08.10.2008 ஆகிய நாட்களில் முறையே 232598, 233381, 234000 ஆகிய குறியீட்டு எண்களின்கீழ் குழந்தைக்கு லேப் பரிசோதனையும் கீமியோ தெரஃபி சிகிச்சையும் அளிக்கப் பட்டது.

03.04.2009இல் சென்னையில் உள்ள Cancer Institiute (WIA) மருத்துவர்களின் பரிசோதனை ஆரம்பம். டாக்டர் சஷிதரின் அறிக்கைப்படி (Ref 09/03375) HIO-NSGCT, Maligant Testis என்று குறிப்பிடப் பட்டது.

04.04.2009இல் Cancer Institiute (WIA) பயோகெமிஸ்ட் அறிக்கைப்படி 200-400 வரை இருக்க வேண்டிய Serum LDH, 960 இருப்பதாகக் கண்டறியப் பட்டது.

06.04.2009இன் கார்டியாக் டாக்டர் வந்தனாவின் அறிக்கைப்படி குழந்தைக்கு நோயின் தாக்குதலால் மூச்சுத் திணறல் முற்றி வருவதாகக் கண்டறியப் பட்டது.

கடந்த 03-06/04/2009 தேதிகளில் குழந்தையைப் பரிசோதித்த சென்னை மருத்துவர்கள், குழந்தையின் மூச்சுக் குழலில் பிரச்சினை உருவாவதாகத் தெரிவித்து உடனடியாகச் சிகிச்சை ஆரம்பிக்க வேண்டுமென்றும் மொத்தம் 3,00,000 ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

ஆரம்ப கட்டச் சிகிச்சைக்கு மட்டும் அவசரமாக 80,000 ரூபாய் உடனடியாகக் கட்ட வேண்டும் என்று சென்னை Cancer Institiute (WIA) நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குழந்தையின் தந்தை ஜஹபர் சாதிக், தனது இயலாமையைக் குறிப்பிட்டு பொருளாதார உதவி கேட்டு எழுதியுள்ளதை தட்ஸ்தமிழ்.காம் தளம் வெளியிட்டுள்ளது:

குவைத்: நாகப்பட்டணத்தைச் சேர்ந்த குவைத்தில் பணியாற்றி வரும் ஜெஹப் சாதிக் என்பவர், புற்று நோயால் பாதிக்கப்பட் தனது 3 வயது மகனுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைக்கு பண வசதி இல்லாமல் நிதியுதவி கோரி நிற்கிறார்.

நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் எம். ஜெஹபர் சாதிக். புற்று நோயால் பாதிக்கப்படடுள்ள தனது 3 வயது மகனுக்கு சிகிச்சை அளிக்க பண வசதி இல்லாமல் தவித்து வருகிறார்.

இதுகுறித்து ஜெஹபர் சாதிக் கூறுகையில், எம். ஜெஹபர் சாதிக் ஆகிய நான் தற்போது குவைத்தில் டிரைவராக பணியாற்றி வருகின்றேன்.

இப்ராஹீம் என்ற எனது மூன்று வயது மகனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக புற்று நோய் ஏற்பட்டு திருச்சி GVN மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றேன்.

இந்நிலையில் GVN மருத்துவமனையினர் மேற் சிகிச்சைக்காக அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறிவிட்டார்கள்.

அவர்களின் அறிவரைப்படி நானும் அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு என் பிள்ளையை அழைத்து சென்று காட்டினேன். அவர்கள் பல மருத்துவ சோதனைகள் செய்த பின், இறைவனின் கிருபையால் இந்நோயை குணப்படுத்தி விட முடியும் என்றும், உடனே மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

ஆனால், அவர்கள் கேட்கும் மருத்துவ தொகை என் சக்திற்கு அப்பாற்பட்டதாக உள்ளது. இங்கு எனக்கு கிடைக்கும் சம்பளமும் மிகக் குறைவுதான். அப்படியிருந்தும் ஏற்கனவே என் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளேன்.

பிள்ளையை விட பணம் பெரிதல்ல என்பதால் எனக்கிருந்த ஒரே சொத்தான சொந்த வீட்டையும் விற்று விட்டேன்.

இப்படிப்பட்ட சூம்நிலையில் என்னால் இவ்வளவு அதிகமான தொகையை செலுத்தி மருத்துவம் செய்ய இயலாத நிலையில் இருக்கின்றேன்.

என் பிள்ளை பூரண குணம் அடைய வேண்டும் என்றால் உடனடியாக அவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். என்னால் இயலாத இந்த நிலையால்தான் தங்கள் அமைப்பிடம் உதவி செய்யுமாறு அன்பு கோரிக்கை வைக்கின்றேன்.

என் பிள்ளையின் மருத்துவ செலவிற்கு தங்களால் இயன்ற உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

சத்தியமார்க்கம்.காம் குழுவினருக்கு அனுப்பி வைக்கப் பட்ட பல சான்றுகள் சரிபார்க்கப் பட்டு, இங்கு இரண்டு மட்டும் பதிக்கப் படுகின்றன.

எங்களுக்கு வரப்பெற்றவைகளுள் தெளிவான சான்று-1:

எங்களுக்கு வரப்பெற்றவைகளுள் தெளிவான சான்று-2:

தங்கள் உதவிகளைக் கீழ்காணும் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பலாம்:

வங்கிக் கணக்கு விபரம்

J. Riyas Deen

(குழந்தை இபுராஹீமின் அண்ணன்)

A/c No: 734724928

Indian Bank

Nagoor Branch

Nagappattanam Dt.,

Pin: 611 002

நேரடியாக விசாரித்துக் கூடுதல் தகவல் பெற விரும்புவோர் குழந்தையின் தந்தை ஜஹபர் சாதிக் அவர்களது தொடர்பு எண் 00965-99180678 என்ற குவைத் அலைபேசியிலோ குழந்தையின் தாய் மாமன் அன்ஸாரீ அவர்களது 0091-9791775642 என்ற இந்திய அலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். வீட்டு முகவரி : 564/393, மெயின் ரோடு, நாகூர்-611002, நாகப்பட்டிணம் மாவட்டம், தமிழ்நாடு.

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் குழந்தை இபுராஹீமுடைய மருத்துவச் செலவுக்கு மனிதாபிமானம் நிறைந்தவர்கள் கைநிறைய வாரி வழங்குங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

குழந்தையின் மருத்துவத் தேவைக்குரிய பொருளுதவி நிறைந்து விட்டால் அதை இங்கு அறிவிப்புச் செய்வோம், இன்ஷா அல்லாஹ்.

உதவி செய்யும் உள்ளங்கள் விரும்பினால் அவர்களது பெயர்களும் தொகையும் (சான்றுகள் பெறப்பட்டு) இங்குப் பதிவு செய்யப் படும்.

அள்ளி வழங்குவோம்; நமக்கு அல்லாஹ் வழங்குவான்!

அள்ளி வழங்கியவர்கள்:

கீழக்கரை அஞ்சல் சார்பாக ரூபாய் 25,000ஐ சென்னையில் உள்ள இ.த.ஜ அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு நமக்கு அனுப்பப்பட்ட தகவல்:

பிஸ்மில்லாஹ்

வல்ல ரஹ்மான் குழந்தை இபுராஹீமின் நோயை மிக விரைவில் குணப்படுத்தி, அக்குழந்தையின் பெற்றோர்கள் மனம் குளிர வைப்பானாக ஆமீன்.

இக்குழந்தையின் மருத்துவத்திற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமீரகம் சார்பாக ரூபாய் 25 ஆயிரத்தை கொடுக்கின்றோம். இந்த ரூபாயை எங்களது சென்னை தலைமையகத்தில் வரும் மே 7ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம். இதஜ தலைமைக்கு செல்வதற்கு முன்பாக எனக்கு (00971504985037) விபரத்தை தெரிவித்துக் கொள்ளவும்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
168/95, முதல் மாடி, பவளக்கார தெரு,
மண்ணடி, சென்னை – 600001
ஸெய்யது இக்பால் – 00919600191610

வஸ்ஸலாம்

தாங்களின் சகோதரன்
கீழை ஜமீல்

(தொடர்பு கொண்டதையும் உதவிபெற்றுக் கொண்டதையும் சகோ.ஜஹபர் சாதிக் இங்கு உறுதிசெய்க)


தமிழ் இணைய உலகில் பரவலாக அறியப்பட்ட (இஸ்லாம் குரல்) சகோதரர் ஸஃபா-மர்வா ஜாஃபர் அலீ அவர்களின் கடிதமும் உதவி வழங்கியதற்கான சான்றும்:

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சத்தியமார்க்கம் நிர்வாக சகோதரர்களுக்கு….

இதுபோன்ற நற்காரியங்களை முஸ்லிம் சகோதரர்களுக்கு எடுத்து வைத்து நன்மையில் அனைவரையும் கூட்டாக்கி வைத்ததற்கு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! இஸ்லாம் குரல் தளத்தின் சார்பாக இந்த தொகையை, தாங்கள் சத்திய மார்க்கம் தளத்தில் கொடுத்திருந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி அதனுடைய நகலையும் இணைத்து இருக்கிறேன். மேலும் இங்கே குவைத்தில் உள்ள குழந்தையின் தந்தையிடமும் தொலைபேசி மூலம் வங்கி கணக்கை உறுதி செய்து கொண்டேன். இங்கே இதைப் பகிர்ந்து கொள்வது எதற்காகவென்றால் மற்றவர்களுக்கு ஒரு ஊக்கம் கொடுப்பதற்காகவே! அல்லாஹ் நம்முடைய செயல்களை முகஸ்துதியை விட்டும் தூரமாக்கி, அவன் ஏற்றுக் கொள்ளக்கூடிய செயல்களாக ஆக்கி வைப்பானாக!

பிஸ்மில்லாஹிர்ரஹிமானிர்ரஹீம்.

சத்திய மார்க்கம்.காம் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

குழந்தை இப்றாஹீமின் உடல் நிலையை தங்கள் தளத்திலிருந்து அறிந்தேன். அதனால் என்னாலான சிறிய முயற்சியாக இங்கு துபையில் என்னைச் சுற்றியுள்ள பலரிடமிருந்து உதவிகள் பெற்று கீழ் கண்ட தொகை (ரூபாய் 18,226)யை J. Riyas Deen அவர்களின் அக்கவுண்டிற்கு அனுப்பியுள்ளேன்.

நான் அவருடைய குடும்பத்தினர் எவரையும் தொடர்பு கொள்ள வில்லை. ஆகையால் தயவு செய்து இப்றாஹீம் குடும்பத்தினர் பணம் பெற்றுக் கொண்டதை உறுதி செய்து எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் குழந்தை இப்றாஹீமின் உடல் நிலையை சரியாக்கி நீடித்த ஆயுளோடு பல்லாண்டுகள் ஹிதாயத்தோடு வாழ பிரார்த்தித்தவனாக

குறிப்பு: தங்கள் தளத்தில் இக்காரியத்தில் இரண்டே இரண்டு உதவிகள் தவிர வேறு எதனையும் காண முடிய வில்லை. இரகசியமாக பல சகோதரர்கள் உதவி செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். இதை பிரசுரிப்பது மற்றவர்களுக்கு ஊக்கமாக அமையும் என்றால் எங்களுடைய எந்த விவரமும் இல்லாமல் செய்யவும். நான் இத்துடன் இணைத்துள்ள ரசீதில் ஏற்கனவே என் விவரத்தை அழித்து விட்டேன்.

அன்புடன்,

முஸ்லிம் சகோதரன்,

ஏ.எஸ். (அராமெக்ஸ்-துபை)


சத்தியமார்க்கம்.காம் சார்பாக எழுதப்பட்டக் கடிதமும் பொருளுதவியும்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

அன்புச் சகோதரர் ரியாஸ்தீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


நலம்; நலமே விழைவு.

தங்கள் தம்பி இபுராஹீமுடைய மருத்துவச் செலவுக்குப் பொருளாதார உதவிகோரி நமது தளமான சத்தியமார்க்கம்.காம் இணைய இதழில் ‘உருகும் பிஞ்சுக்கு உதவுவோம்’ என்ற தலைப்பில் கடந்த 30 ஏப்ரல் 2009 தேதியன்று வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதைப் படித்தச் சில சகோதரர்கள், தங்களால் இயன்ற பொருளுதவியைத் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு அனுப்பியிருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் வளங்களை வாரி வழங்குவானாக!

மேலும், சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகிகள் சார்பாக தங்கள் தம்பி இபுராஹீமுடைய மருத்துவச் செலவுக்காக இத்துடன் ரூபாய் 62,000 (அறுபத்தி இரண்டாயிரம்) தாங்கிய காசோலை (593410) இணைத்திருக்கிறோம்.

பெற்றுக் கொண்டதற்கு admin@satyamargam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பதில் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தங்கள் தம்பியின் நோயைத் தீர்த்து வைத்துப் பூரண நற்சுகம் அளிப்பானாக!

பிரார்த்தனைகளுடன்,

நிர்வாகிகள், சத்தியமார்க்கம்.காம்.


அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் அருளால், நானும் எனக்கு நெருங்கியவர்கள் சிலரும் இணைந்து ரூபாய் 5,556 சேர்த்து, அதை இணைப்பில் உள்ள ட்ராஃப்டாக எடுத்து நீங்கள் இங்குக் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்குக் கூரியர் மூலம் நேற்று (13.05.2009) அனுப்பி விட்டோம்.

இன்ஷா அல்லாஹ், அது நாளைக்கு நாகூரில் கிடைக்கக் கூடும்.

குழந்தை இபுராஹீமின் குடும்பத்தாரோடு தங்களுக்குத் தொடர்பிருப்பின், எங்கள் ட்ராஃப்ட் அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
முஹம்மது ஷரீஃப், பஹ்ரைன்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.