கல்வி உதவித் தொகை!

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்கள். 

உயர்நிலை பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலை பள்ளிப் படிப்பு (+2), பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தொழில் கல்வி, மார்க்கக் கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

 

கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழின் (xerox) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்தப் படிப்பு படிக்க இருக்கிறார்கள்? அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு? ஆகியவைகளையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். 

இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதி குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்தப் படிவத்தை முடிந்தவரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக்கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்.  இறையருள் பெறுங்கள்!

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

TAMAM

P.O.BOX 1263

MUTTRAH-114

SULTANATE OF OMAN

விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 30-05-2008