அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோர்தாம்(அல்குர்ஆன் 39:9).
கல்வியில் சிறந்து விளங்கும் சமுதாயமே முன்னேற்றமடைந்த சமுதாயம் என்பது நிதர்சனமான உண்மை. கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் இஸ்லாம், கல்வி கற்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமை என்றே அறிவிக்கிறது.
இந்தியச் சிறுபான்மை முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கான திறவுகோல் கல்வியில் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. அத்தகைய அத்தியாவசியமான கல்வியைக் கற்க ஆர்வமுடைய மாணவர்களுக்கு பண வசதியின்மை தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில், சென்னை கிரஸண்ட் பள்ளி, பொறியியல் கல்லூரி போன்ற பிரபல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் செல்வந்தர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்களின் குழுமத்தைச் சேர்ந்த பி.எஸ்.அப்துர் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு, கல்வியில் ஆர்வமுடைய வசதி குறைந்த முஸ்லிம் மாணவர்களின் மேற்படிப்பிற்கு நிதி உதவி செய்து வருகிறது.
உதவி நிதி பெறும் தகுதி:
1. ஜகாத் நிதியிலிருந்து இக்கல்வி உதவி நிதி வழங்கப் படுவதால், விண்ணப்பதாரர்களின் குடும்பம் ஜகாத் பெறத் தகுதியுடையோராய் இருப்பது அவசியம்.
(ஜகாத் என்னும்) தானதர்மங்களெல்லாம், ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும், இந்தத் தானதர்மங்களை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளம் ஈர்க்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன் பட்டவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல் குர்ஆன் 9:60)
2. மாணவர்கள் கடந்தத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் மிகக் குறைவான வருமானமுடையவர்களாகவும், பிள்ளைகளின் படிப்பிற்குச் செலவிட முடியாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும் பவுண்டேஷன் கீழ்க்கண்ட தகுதிகளையும் மாணவர்களிடம் எதிர்பார்க்கிறது.
-
மாணவர்கள் தொடக்க நிலையிலிருந்தே நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சிப் பெற்றிருத்தல்.
-
இஸ்லாமிய மார்க்க அடிப்படைகளை அறிந்தவர்களாகவும் அவற்றை தமது நாளாந்திர வாழ்வில் கடைப்பிடிப்பவர்களாகவும் இருத்தல்.
-
‘ஜகாத் பெறுபவர்கள்’ என்ற நிலையிலிருந்து ‘ஜகாத் கொடுப்பவர்கள்’ என்ற நிலைக்கு உயரும் நோக்கமும், சமுதாய மேம்பாட்டிற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் தமது பங்களிப்பைச் செலுத்தும் எண்ணமும் உடையவர்களாய் இருத்தல்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
-
விண்ணப்பப் படிவங்களை கீழ்க்கண்ட முகவரியிலிருந்து தபால் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.bsazakaat.org என்ற இணையத்தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
-
பூர்த்திச் செய்யப்பட்டப் படிவங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். (மருத்துவ மற்றும் பொறியியல் துறை முதலாம் ஆண்டு விண்ணப்பங்களுக்கான இறுதி தேதி 30-செப்டம்பர்-2009. மற்றத் துறைகளுக்கான இறுதி தேதி 31-ஜூலை-2009 கடந்து விட்டதால் ஆர்வமுடையவர்கள் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தகவல் பெறவும்).
-
விண்ணப்பதாரர்கள் தரும் தகவல்களை நிறுவன பிரதிநிதிகள் நேரடியாக வந்து உறுதி செய்வார்கள்.
-
நிதியுதவி பெற தகுதி பெற்ற மாணவர்கள், இஸ்லாம் பற்றிய எழுத்துத் தேர்விலும், அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்விலும் கலந்துக் கொள்ள அழைக்கப் படுவார்கள். நேர்முகத் தேர்வில் பெற்றோரும் கலந்துக் கொள்ள வேண்டும்.
-
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
-
அடுத்தடுத்த ஆண்டுகளில் இக்கல்வி உதவித்தொகையை தொடர்ந்து பெற, மாணவர்கள் சராசரியாக 60% மதிப்பெண்கள் பெற்று எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
நிதியுதவி பெற்று வெற்றிகரமாக படிப்பை முடித்த மாணவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பைப் பெற்றுத்தர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பயனடைந்தோர்
2007-ம் ஆண்டு 155 மாணவர்கள் இந்த நிதியுதவியைப் பெற்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 1,969,500.
2008 – 09 – Course Wise Detail |
|||||
S.no |
Course |
No. of Applicant |
Boys |
Girls |
Amount |
1 |
U.G (ARTS) |
189 |
66 |
123 |
746,300 |
2 |
B.E & B.TECH |
450 |
319 |
131 |
10,033,985 |
3 |
B.SC, BCA, BBA |
326 |
85 |
241 |
2,010,780 |
4 |
B.Ed |
32 |
1 |
31 |
508,000 |
5 |
MBBS, BUMS,BDS |
19 |
5 |
14 |
382,000 |
6 |
DIPLOMA |
153 |
117 |
36 |
1,687,100 |
7 |
M.A, M.Sc |
51 |
28 |
23 |
383,300 |
8 |
PH.D, ME , M.TECH |
5 |
4 |
1 |
74,500 |
9 |
MCA, MBA |
56 |
41 |
15 |
834,500 |
10 |
ITI |
4 |
2 |
2 |
35,000 |
|
Total |
1,285 |
668 |
617 |
16,698,465 |
ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள ஜமாஅத் நிர்வாகங்களும் இஸ்லாமிய அமைப்புகளும் தகுதியான மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இது போன்ற கல்வி உதவிகளைப் பற்றிய தகவல்களை தெரிவிப்பது பயனளிக்கும்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
B.S. Abdur Rahman. Zakaat Fund Foundation
Buhari Building
# 4, Moores Road, Chennai-600 006
Phone:+91-44-42261100
Fax: +91-44-28231950
admin@bsazakaat.org, bsazakaat@gmail.com