உலகின் நம்பர் 1 கள்ளக் குடியேறிகளின் தேசம் அமெரிக்கா. அங்குள்ள 98 விழுக்காடு மக்கள் கள்ளக் குடியேறிகளின் வழித்தோன்றல்கள். அதன் புதிய அதிபர் ட்ரம்ப், தன் மூதாதையர்களைப் போலவே தன் நாட்டுக்கு வேலை தேடி பிழைக்க வந்தவர்களைத் தன் நாட்டில் இருக்க வைத்து, வேலை போட்டுக்கொடுத்து, சோறு போட மனமில்லாமல், ‘சட்டவிரோத கள்ளக் குடியேறிகள்’ என்று அவர்களைத் துப்பாக்கி முனையில் கைது செய்து, கைகளிலிலும் கால்களிலிலும் விலங்கு மாட்டி, ராணுவத் தளவாடச் சரக்கு விமானத்தில் நாய்களைப் போல் 40 மணி நேரம் அடைத்துத் திருப்பி அனுப்பி விட்டான். அறவே மனிதாபிமானமில்லாமல் நடந்துகொண்ட, ஐரோப்பிய கள்ளக் குடியேறிகளின் வழித்தோன்றலாகிய அந்த ஓநாய், இப்போது 20 இலட்சம் ஃபலஸ்தீன பூர்வகுடிகளை அவர்களின் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்ற ஊளையிடுகிறது. அந்த மண்ணைப் பிடுங்கி ஐரோப்பிய உலகப்போர் யூத அகதிகளான கள்ளக் குடியேறிகளிடம் கொடுக்குமாம்!
இது எந்த உலகத்தின் நியாயம்? மனிதனா அவன்? அதனால்தான் ‘மனித உரிமை அமைப்பில் இருந்தே’ வெளியேறிவிட்டான் போலும்!
1933-ல் ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்த ஹிட்லர், அடுத்தடுத்து மொத்த ஐரோப்பியாவையும் ஆக்கிரமித்து, அங்கு 2000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த ஐரோப்பிய மொழிகள் பேசும் யூதர்களைக் கொன்று குவிக்க ஆரம்பித்தான். அவனிடம் இருந்து உயிர் தப்பிய அந்த ஐரோப்பிய யூதர்கள் மத்திய தரைக்கடலில் குதித்து பிரிட்டிஷ் கப்பலில் கயிற்றைப் பிடித்துத் தொற்றி மேலே ஏறினர். முதலாம் உலகப் போருக்கு பின், 1920ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷார்களின் காலனி நாடாக ஆகிவிட்ட ஃபலஸ்தீன் மண்ணில், அந்த அரபியர்களின் நிலத்தில், கப்பலில் தஞ்சம் அடைந்த ஐரோப்பிய யூத அகதிகள் பஞ்சம் பிழைத்துத் தப்பிக்கட்டும் என்று இறக்கி விடப்பட்டனர்.
பின்னர், அந்த யூத அகதிகளில் பலர் ஃபலஸ்தீனியர்களிடம் உழைத்துப் பொருளீட்டி, பணக்காரர்களாகி, ஃபலஸ்தீன் அரபியர்களிடம் நிலத்தையும் வீட்டையும் தோட்டத்தையும் விலைக்கு வாங்கினார்கள். வக்கற்ற அகதிகள் இர்குன் (Irgun) எனப்படும் யூத பயங்கரவாத அமைப்பை உருவாக்கி, பிரிட்டிஷாரிடமிருந்து ஆயுதங்களைக் களவாடி, ஃபலஸ்தீன் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த பூர்வகுடி ஃபலஸ்தீன் அரபியர்களைக் கொன்று குவித்தார்கள். அவர்களது நிலம், வீடு, தோட்டம் ஆகியவற்றைக் கொள்ளையடித்தார்கள். அந்தப் பணத்தில் மேலும் ஆயுதங்கள் வாங்கினார்கள். மேலும் கொன்றார்கள். மேலும் கொள்ளையடித்தார்கள்.
1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாத் யாம் (Bat Yam) கடற்கரையில் இரண்டு ஃபலஸ்தீனியர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களின் வீட்டையும் இடத்தையும் ஆக்கிரமித்தார்கள் அந்த யூத இர்குன் தீவிரவாதிகள். பிறகு, ஃபலஸ்தீன மக்களைக் கொன்று, அவர்களின் வீடுகளையும் நிலங்களையும் கைப்பற்றி ஆக்கிரமிப்பதை மெல்ல மெல்லத் தங்களது தொழிலாகவே ஆக்கிக்கொண்டார்கள் அந்த அயோக்கியத் தீவிரவாதிகள்.
அவ்விதம் ஆக்கிரமிக்கப்பட்ட அந்தத் திருட்டு நிலப்பரப்புக்குத்தான் 1948 மே 12இல் ‘இஸ்ரேல்’ என்று பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவில் புகுந்த ஐரோப்பியர்களுக்கும் ஃபலஸ்தீனில் இறக்கிவிடப்பட்ட ஐரோப்பிய யூதர்களுக்கும் அங்குள்ள பூர்வகுடி மக்களைக் கொன்றுவிட்டு நிலத்தை கைப்பற்றுவதே கொள்கை. அதனால், மே 14இல், யூதர்கள் கொள்ளையடித்துத் திருடிய அந்த நிலத்துக்கு ‘நாடு’ என்று முதன்முதல் அங்கீகாரம் அளித்ததது, உலகின் முதலாவது அணுகுண்டு தீவிரவாதி நாடான அமெரிக்கா. ஓராண்டிற்குப் பின், 1949 மே 11இல் அமெரிக்க அடிமையான ஐநா சபை அதற்கு அங்கீகாரமும் அளித்தது.
இதற்கிடையே, தனது காலனியான ஃபலஸ்தீனில், 10 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான கொலைகள், கொள்ளைகள், துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுகள் என்று தீவிரவாதம் நிகழ்த்தும் இர்குன் தீவிரவாதத் தலைவனான மெனசெம் பெகின் (Menachem Begin) என்பவனை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவருக்கு 10,000 பவுண்டுகள் பரிசு என்று அறிவித்தது பிரிட்டிஷ் அரசு! பிரிட்டிஷ் இராணுவத்திடம் சிக்காமல், பல ஆண்டுகளாக தலைமறைவாகத் திரிந்த தீவிரவாதி மெனசெம்பெகின், தன் தீவிரவாத இயக்கத்தின் பெயரை லிக்குட் என்று மாற்றி, 1948இல் அதை அரசியல் கட்சியாகவும் அறிவித்துவிட்டான். பிறகு அவன், தான் களவாடிய நாட்டின் தேர்தலில் போட்டியிட்டு, வென்று, அதன் பிரதம மந்திரியாகவும் ஆகி விட்டான்!
ஃபலஸ்தீன் மக்களுக்கு நிகழ்த்தப்படும் மாபெரும் கொடுமைகளின் தொடக்கக் கால வரலாறு இது!
அன்று உருவான அந்த லிக்குட் கட்சிதான் இன்று இஸ்ரேலிய ஆளுங்கட்சி. அக்கட்சியின் இன்றைய தலைவன்தான் பெஞ்சமின் நெதன்யாஹு (Benjamin Netanyahu). இவன் எவ்வளவு பெரிய பயங்கரவாதி என்றால், ‘யாஸர் அரஃபாத்துடன் ஒஸ்லோ அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திவிட்டு, ஃபலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனி போர் தொடுக்காது என்று போரை நிறுத்திய குற்றத்துக்காக, இஸ்ரேலிய பிரதமர் யிட்ஸாக் ரபீனைச் (Yitzhak Rabin) சுட்டுக் கொல்ல வேண்டும்’ என்று இஸ்ரேலிய மேடைகளில் உரத்துப் பரப்புரை செய்தவன். அவனுடைய கட்சித் தொண்டன் ஒருவன், நெதன்யாஹு சொன்னபடியே பிரதமர் யிட்ஸாக் ரபீனைச் சுட்டுக் கொன்றான். அடுத்து நடந்த தேர்தலில் தனது நாட்டின் பிரதமரைக் கொன்ற கொலைகாரன் நெதன்யாஹு பிரதமர் ஆகிவிட்டான். ஃபலஸ்தீனர்களுக்கு எதிராகப் போரைத் தொடங்கி விட்டான். ஆனால் யாஸர் அரஃபாத்தின் பிஎல்ஒ (PLO) போருக்குத் திரும்பவில்லை. ஹமாஸ் மட்டும் போராடத் துவங்கியது.
இவ்வாறு அந்தத் திருட்டு யூத நாடு, கடந்த 88 ஆண்டுகளாக, நூறு… ஆயிரம்… லட்சம்… என்று அப்பாவி ஃபலஸ்தீன் மக்களைச் சற்றும் சலிக்காமல் கொன்று குவித்து வருகிறது. அமெரிக்காவும் பிரிட்டனும் அதற்கான ஆயுதங்களைத் தங்கள் நாட்டு மக்கள் வரிப்பணத்திலிருந்து அள்ளியள்ளி விநியோகம் செய்து வருகின்றன.
1940களில் இருந்து, ஒவ்வொரு முறையும் சண்டை முடியும் போது, கொல்லப்பட்ட, உயிர் பிழைத்து வேறு இடம் சென்ற ஃபலஸ்தீனியர்களின் நிலத்தைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றி 90 விழுக்காடு நிலத்தை ஆக்கிரமித்துள்ள அந்தத் தீவிரவாத யூதர்களின் இடத்திற்குத்தான் இஸ்ரேல் என்று பெயர். அப்படியும் முழுமையாக ஃபலஸ்தீன் மக்களை அவர்களால் முழுதாகக் கொல்லவும் முடியவில்லை; அங்கிருந்து விரட்டவும் முடியவில்லை; செவ்விந்திய பூர்வகுடி மக்களைக் கொன்றுவிட்டு முழு நிலத்தையும் ஆக்கிரமித்து உருவான அமெரிக்கா போல, யூதர்களால் ஃபலஸ்தீனை ஆக்கிரமிக்க முடியவில்லை.
காரணம், 1970ம் ஆண்டுகளிலிருந்து 1990ஆம் ஆண்டுகள் வரை யாஸர் அரஃபாத் தலைமையிலான ஃபலஸ்தீன் விடுதலை இயக்கம்; 2000 முதல் இன்றுவரை ஹமாஸ் என்கிற ஃபலஸ்தீன் விடுதலைப் போராளி இயக்கம்.
தங்களிடமிருந்து பிடுங்கப்பட்ட பகுதிக்குள் புகுந்து, கள்ளக் குடியேறி யூதர்களைப் பணயக் கைதிகளாக ஹமாஸ் எப்போது தூக்கிச் சென்றதோ, அப்போதே அதிர்ந்து விட்டது கள்ளக் குடியேறி யூத அரசு. இப்போது கோமாளி ஒருவன் அமெரிக்காவின் அதிபர் ஆகிவிட்டான் என்றதும் தனக்கு உடந்தையாக ஹமாஸுடன் போரிட அவனை அழைக்கிறது இஸ்ரேல். அந்தக் கோமாளியும் கஸ்ஸாவில் வாழும் 20 இலட்சம் ஃபலஸ்தீன் மக்களை அண்டை நாடுகளுக்கு அகதிகளாகத் துரத்த வேண்டும் என்கிறான்.
சிரிப்பதற்குக் கூட அருகதையற்ற நகைச்சுவை இது. கஸ்ஸா மக்களை வெளியேற்ற அவன் யார்? அவனுக்கு அதில் என்ன அதிகாரம் உள்ளது? அதை யார் அவனுக்கு அளித்தது? சீரழிந்துள்ள கஸ்ஸாவை செப்பனிடப் போகிறேன் என்கிறான். அதற்கு ஏன் அம்மக்களை நாடு கடத்துகிறான்? அம்மக்களின் 90 விழுக்காடு நிலத்தைக் கொள்ளையடித்து வைத்துள்ளானே யூதன், அவனிடமிருந்து அந்த இடங்களை பிடுங்கி மீட்டு உரியவர்களிடம் கொடுக்க வேண்டியதுதானே நியாயமாக இருக்கும்? அல்லது அந்தளவு அக்கறை இருப்பவனாக இருந்தால், தன் நாட்டுக்கு அந்த 20 இலட்சம் மக்களையும் அழைத்துக்கொள்ள வேண்டியதுதானே? ஐரோப்பிய கள்ளக் குடியேறிகளின் நாடான அமெரிக்காவில் இவர்களையும் குடியேற்றி அடைக்கலம் அளிக்கலாமே? ஆனால், மாட்டான். அவனது நோக்கம் ஃபலஸ்தீன் மக்களைத் துரத்தியடிப்பது மட்டுமே!
அப்படியே அவன் கைவிரித்து அழைத்தாலும் அவர்கள் தம் மண்ணை விட்டு வெளியேற மாட்டார்கள் என்பதே உண்மை. யூதனையும் அமெரிக்கனையும் போல் அந்த ஃபலஸ்தீனியர்கள் கள்ளக் குடியேறிகள் அல்லவே! ஃபலஸ்தீன் எனும் பெயரை உலக வரைபடத்திலிருந்து அழித்துவிட்டு, ‘வெஸ்ட் பேங்க்’, ‘கஸ்ஸா’ என்று இரு துண்டுகளாக எழுதும் அவர்களின் வஞ்சகம் அறியாதவர்கள் அல்ல அந்த ஃபலஸ்தீன் போராளிகள். அவர்கள் அந்த மண்ணின் பூர்வகுடி மக்கள்!
போரைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடைந்து, ஒஸ்லோ அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு நோபல் பரிசும் பெற்றார் யாஸர் அரஃபாத். அந்தக் கட்சியின் இன்றைய தலைவராக உள்ளவர் சாதுவான மஹ்மூத் அப்பாஸ். அந்த ஒப்பந்தத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஹமாஸ் வென்று ஆட்சி அமைத்த போது, அதை அமெரிக்காவும் கள்ளக்குடியேறி யூதர்களும் அங்கீகரித்திருக்க வேண்டும். மீண்டும் போரிட்டார்கள். இப்போது கஸ்ஸாவுக்கு ஆதரவாக சாதுவான மஹ்மூத் அப்பாஸே கூட எழுந்து நின்று விட்டார். ஃபலஸ்தீனை யூதர்கள் கடந்த 88 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதை விளக்கிப் படங்களைக் காட்டுகிறார்.
அமெரிக்க அதிபரே! அந்த வந்தேறி கள்ளக் குடியேறி யூத அகதிகள் உண்மையான வீரர்களாக இருந்தால், உனது அமெரிக்காவின் நிதியுதவியும் ஆயுதங்களும் இன்றி ஃபலஸ்தீனர்களிடம் போரிடச் சொல் பார்ப்போம். யூதர்களின் தீவிரவாத இராணுவத்திற்கு அந்த ஆண்மை இல்லையேல் ஃபலஸ்தீனர்களிடம் அபகரித்து ஆக்கிரமித்த நிலத்தை அவர்களிடமே திருப்பித் தந்துவிட்டு, ‘இஸ்ரேல்’ எனும் பெயரை வரைபடத்திலிருந்து அழித்துவிட்டு, அவர்களின் பூர்வீகமான ஐரோப்பிய நாடுகளுக்குத் திரும்பிச் செல்லட்டும்.
கோமாளி அதிபதியே, உனக்குத் திராணி இருந்தால் அதற்கு நீ கட்டளை இடு பார்ப்போம்!
நன்றி : முஹம்மது ஆஷிக்