திருவள்ளூர் (ஜூலை 07, 2018): கட்சியில் கவன ஈர்ப்பு பெறுவதற்காகவும், காவல்துறையினரின் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தன் சொந்தக் கார் மீது வெடிகுண்டு வீசியதற்காக இந்து அமைப்புப் பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் காளிகுமார். இவர், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா பிரிவின் மாநிலச் செயலாளர் ஆவார்.
நேற்று மாலை 4 மணியளவில் காளிகுமார் மற்றும் இந்து மக்கள் கட்சி-யின் மீஞ்சூர் நகரச் செயலாளர் ஞானசேகர்-வுடன் தனது அம்பாசிடர் காரில் சென்று கொண்டிருந்தார்.
சோழவரம் அடுத்த சுங்கச்சாவடி அருகே நூறடி ரோட்டில் அவர்கள் சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், காளிகுமாரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி கொல்ல முயன்றனர்.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் கார் மளமளவெனத் தீப்பிடித்து எரிந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர், எரிந்து கொண்டிருந்த காரை அணைப்பதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது.
கைது:
இந்து மக்கள் கட்சியில் பிரபலமான தன்னைக் கொல்ல, பிற மதத்தைச் சேர்ந்த சிலர் முயற்சி செய்வதாகவும், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார் காளிமுத்து.
புகாரைப் பெற்றுக் கொண்ட பொன்னேரி டி.எஸ்.பி ராஜா, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சிபி சக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
தொடர் விசாரணையில், நடந்த சம்பவம் குறித்து காளிகுமாரும், ஞானசேகரனும் மாற்றி மாற்றி முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு அவர்கள்மீது சந்தேகம் எழுந்தது.
திடுக்கிடும் உண்மைகள்:
இதையடுத்து, அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்தன. மேலிடத்தில் தனக்குப் புகழும், பெயரும் வர வேண்டி, தனது சொந்தக் கார் மீது இந்து மக்கள் கட்சி அமைப்பு செயலாளரே குண்டு வீசியது தெரியவந்தது.
இதையடுத்து காளிகுமாரையும், ஞானசேகரனையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இ.பீ.கோ. 436 (வெடிகுண்டை பயன்படுத்தி சேதப்படுத்தியது) மற்றும் இ.பி.கோ. 420 (பிறரை ஏமாற்றி பழியை பிறர் மீது போட்டது) ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்களது திட்டத்திற்கு ஒத்துழைத்து காளிகுமாரின் கார் மீது வெடிகுண்டு வீசி விட்டு ஓடிய, காளிகுமாரின் அண்ணன் மகன் ரஞ்சித் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
போலீஸ் பாதுகாப்புக்காக நாடகம்:
பின்னர் விசாரணையில், தனக்கு கட்சியில் புகழும், கூடவே போலீஸ் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்ததாக காளிகுமார் ஒப்புக்கொண்டார்.
பயங்கரவாதிகள் சிலர் பெட்ரோல் குண்டை வீசி இந்து மக்கள் கட்சி நிர்வாகியை கொல்ல முயன்றதாக காளிகுமார் ஊர் முழுக்க பரப்பியதால் அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். விசாரணைக்குப் பின் தீவிரவாதச் செயலை செய்து பிற மதத்தினர் மீது பழி சுமத்தியது, இந்து மக்கள் நிர்வாகிகள் தான் என்ற உண்மையை பொதுமக்களுக்கு விளக்கினோம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

- SatyaMargam.com
Tamil Nadu: Hindutva outfit’s office-bearer, 2 others arrested for fake complaint about crude bomb attack on his car
Chennai: An office-bearer of the little known Hindutva outfit Hanuman Sena has been arrested, along with two others, after their police complaint, claiming that a motorcycle-borne miscreants lobbed crude bomb at his car in a bid to murder him, turned out to be fake.
The local leader of the outfit Kalikumar had lodged a complaint with Sholavaram police on Friday evening that his Ambassador car came under attack when he travelling on the Minjur–Vandalur outer ring road.
The police team, which launched a probe, and forensic experts, who examined the charred remains of the car, found out that Kalikumar is up to some mischief.
Further inquiries held with him revealed that Kalikumar used the help of his friend Gnanasekaran and a kin Ranjith to set the car ablaze.
Further grilling led to Kalikumar confessing that he plotted the fake attack to get back the police protection he had been enjoying till few months ago.
The Sholavaram inspector of police Balasubramanian said that the police protection, which Kalikumar had been enjoying, was withdrawn four months ago. He wanted the protection back and hence, planned the crude bomb attack on him.
Kalikumar, Gunasekaran and Ranjith were booked under Indian Penal Code (IPC) Sections, including 436 (mischief by fire or explosive substance with intent to destroy house, etc) and 420 (cheating). They were produced in a court and remanded in custody.