கொரோனாவை அடக்கிய பினராய்க்கு ஜே!

Share this:

லகை உலுக்கியெடுக்கும் கொடிய உயிர்க்கொல்லி கொரோனாவை மிகத் திறமையுடன் திட்டமிட்டு அடக்கியுள்ளது கேரள அரசு.நேற்றைய நாளில் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் ஓர் அறிக்கை விடுத்துள்ளார், “இவ்வாண்டின் இறுதியில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடும்” என்று. அதாவது, கொரோனா உயிர்க்கொல்லி எந்த அளவுக்கு உண்மையோ, அதற்கு இன்றுவரை சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் உண்மை.

அப்படியென்றால், “அமெரிக்காவுக்கு 30 மில்லியன் மாத்திரைகளை இந்தியா உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பணிவுடன் வேண்டுகோள் விடுத்ததும், “நாளைக்கே அனுப்புகிறோமா இல்லாயா பார்” என்று அமெரிக்காவை இந்தியா மிரட்டியதுமான HCQ (hydroxychloroquine) மாத்திரைகள் கொரோனாவுக்கான மருந்தில்லையா? என்று கேட்டால், அதற்கான பதில் HCQ (hydroxychloroquine) மாத்திரைகள் மலேரியாக் காய்ச்சலுக்கான மாத்திரைகள் என்பதுதான்.

Hydroxychloroquine, the 65-year-old malaria drug that President Donald Trump has praised, appeared not to help patients get rid of the pathogen in a small study.

The pill didn’t help patients clear the virus better than standard care and was much more likely to cause side effects, according to a study of 150 hospitalized patients by doctors at 16 centers in China. The research, which hasn’t been peer-reviewed, was released Tuesday. – The Print.

 

மலேரியாவுக்கான மாத்திரை கொரோனாவைக் கட்டுப்படுத்துமா? எனும் கேள்வி நியாயமானதுதான். என்ன செய்வது என்று தெரியாதபோது நமது நாட்டில் கரோனாவை விரட்டக் கைதட்டச் சொன்னதுபோல், விளக்கணைக்கச் சொன்னதுபோல் அமெரிக்காவுக்கு ‘வாத்துத் தலைக்கு வளையம்’ வீசிப் பார்க்கலாமே எனும் நப்பாசைதான்! விளைவு, இன்றுவரை அமெரிக்காவின் இறப்பு எண்ணிக்கை 28,579; சிகிச்சை(!)யில் இருப்போர் 6,44,188.

oOo

தலைப்புக்கு வருவோம்.

நம் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 378தான்; குணம் பெற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் 198 பேர். சிகிச்சையில் 177 பேர். கொரோனாவின் பாதிப்பால் இறந்த கேரளிகளின் எண்ணிக்கை வெறும் 3. இது இன்றைய (16.4.2020) தேதி வரையிலான கணக்கு.

கேரளாவில் மட்டும் கரோனா அடக்கப்பட்டது எவ்வாறு?

1. மக்களைப் பற்றிய கனிவான அக்கறையுள்ள தலைவன்
2. தெளிவான திட்டமிடல்
3. ஒருங்கிணைந்த மருத்துவம்
4. தொலைநோக்குப் பார்வை

இன்னும் பல … பார்ப்போம், கேட்போம்:

சல்யூட் சகாவே!

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.