18 அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை

Share this:

ரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுக்குப் பகிரங்கமான அச்சுறுத்தலை விடுத்துள்ளது. ஈரானியத் தலைவர்கள் மீது நடத்தப்படும் படுகொலைகளுக்குப் பதிலடியாக, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையில் உலகம் முழுவதும் அறியப்பட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமானவை:

தொழில்நுட்ப நிறுவனங்கள்: மைக்ரோசாப்ட் (Microsoft), கூகுள் (Google), ஆப்பிள் (Apple), இன்டெல் (Intel), ஐபிஎம் (IBM), டெல் (Dell), ஹெச்பி (HP), சிஸ்கோ (Cisco), ஆரக்கிள் (Oracle).

சமூக ஊடகங்கள்: மெட்டா (Meta – Facebook/Instagram).

விமானம் மற்றும் வாகன உற்பத்தி : போயிங் (Boeing), டெஸ்லா (Tesla).

நிதி மற்றும் மின்சாரம்: ஜேபி மோர்கன் சேஸ் (JPMorgan Chase), ஜெனரல் எலக்ட்ரிக் (General Electric).

சமீபகாலமாக ஈரானிய முக்கியத் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் குறிவைத்துக்  கொல்லப்பட்டு வருவதற்கு இங்குள்ள மேற்காணும் நிறுவனங்களால் நடைபெறும் உளவு வேலைகள் மூலம் படுகொலைகளுக்கான இலக்குகளைத் தீர்மானிப்பதற்கும் அமெரிக்கத் தொழில்நுட்ப மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களே முக்கியக் காரணம் என ஈரான் குற்றம் சாட்டுகிறது. இதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நன்றி : ஸ்கை தமிழ்

Thursday, April 2, 2026.


Share this: