இப்பகுதியில் உள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஈரானின் பதிலடித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன.
IRGC அறிக்கை எண் 50:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்!
”… ஆகவே, உங்களுக்கு எதிராக எவன் வரம்பு மீறுகிறானோ, அவன் உங்களுக்கு வரம்பு மீறியதைப் போலவே நீங்களும் அவனுக்கு எதிராக வரம்பு மீறுங்கள்” (அல் குர் ஆன் 2:194).
அமெரிக்கக் குற்றவாளிகளான ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை!
சியோனிச அமெரிக்கப் படையெடுப்புப் படைகள், டெஹ்ரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது குண்டு வீசியதன் மூலம், எண்ணற்ற முறை ஈரானியப் பல்கலைக்கழகங்களைத் தங்கள் குண்டுவீச்சுகளால் குறிவைத்துள்ளன.
வெள்ளை மாளிகையின் பொறுப்பற்ற ஆட்சியாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும், இனிமேல், அழிக்கப்பட்ட ஈரானியப் பல்கலைக்கழகங்களுக்குப் பதிலடியாக ஆக்கிரமிப்பாளர்களின் இரண்டு பல்கலைக்கழகங்கள் தாக்கப்படும். எங்களின் பல்கலைக்கழகங்களைத் தாக்கியதன் மூலம் ஆக்கிரமிப்பு ஆட்சியின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மட்டுமல்லாது மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் எங்களுக்கு முறையான இலக்குகளாகிவிட்டன.
இப்பகுதியில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்து ஊழியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள, குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழகங்களிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்றுவிடுமாறு நாங்கள் அறிவுறுத்துகின்றோம்.
இந்தக் கட்டத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களைத் தவிர, இப்பகுதியில் உள்ள தனது மற்றப் பல்கலைக்கழகங்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் விரும்பினால், அது டெஹ்ரான் நேரப்படி மார்ச் 30, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்குள் ஈரான் பல்கலைக்கழகங்கள் மீதான கூட்டணிப் படைகளின் குண்டுவீச்சை அதிகாரப்பூர்வமாகக் கண்டிக்க வேண்டும். அதன்பிறகு, இப்பகுதியில் உள்ள தனது பல்கலைக்கழகங்கள் தாக்கப்படக்கூடாது என்று அது விரும்பினால், தனது மூர்க்கமான கூட்டணிப் படைகள், ஈரானின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களைத் தாக்குவதைத் தடுக்க வேண்டும்; இல்லையெனில், எங்களின் எச்சரிக்கை உறுதியாக நிறைவேற்றப்படும்.
மேலும், வல்லமையும் ஞானமும் மிக்க அல்லாஹ்விடமிருந்து அன்றி வேறு வெற்றி இல்லை.
நன்றி : joaquim.d.almeida
