இந்திய கடற்படை ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அளித்த உளவாளிகள் ரோஹித் மற்றும் சந்த்ரி கைது!

Share this:

பெங்களூரு (21 நவம்பர், 2025): இந்தியாவின் கடற்படை கப்பல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு அனுப்பிய உளவாளிகள் ரோஹித் (29) மற்றும் சந்த்ரி (37) ஆகிய இருவரும் கர்நாடகா-வில் உள்ள உடுப்பி காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். கடந்த 18 மாதங்களாக, பாகிஸ்தான் உளவாளிகளாக இவர்கள் செயல்பட்டு வந்தது, காவல்துறை விசாரணையில் நிரூபணம் ஆகியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் ராணுவ கப்பற்படைத் தளம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

இந்த கப்பற்படை தளத்தில் பணியாற்றி, இந்திய ராணுவ தொடர்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து கசிய விட்டு காவல்துறையில் சிக்கிய ரோஹித் மற்றும் சந்த்ரி ஆகிய இருவரும் உத்தர பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூரைச் சேர்ந்தவர்கள்.

உடுப்பி மாவட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ பிரியம்வதா மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் டி. அனில் குமார் தலைமையிலான குழுவினர், பாகிஸ்தான் உளவாளிகள் இருவரையும் கடந்த நவம்பர் 20, 2025 ஆம் தேதி கைது செய்தனர். தற்போது இவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாக். உளவாளிகள் சிக்கியது எப்படி?

உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police) ஹரிராம் ஷங்கர், இந்த விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்களை கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்:

உடுப்பியில் உள்ள ராணுவ கப்பல் கட்டுமான பணிக்காக, சுஷ்மா மரைன் பிரைவேட் லிமிடெட் (Shushma Marine Private Limited) என்ற நிறுவனத்திற்கு துணை ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. அங்கு ரோஹித் இன்சுலேட்டராக பணியாற்றி வந்தார். அதற்கு ஆறு மாதத்திற்கு முன் ரோஹித், கேரளாவில் உள்ள (Kochi Shipyard) கொச்சின் கப்பல் தள லிமிடெட்-இல் பணியாற்றியிருந்தார்.

கேரளாவில் ரோஹித் பணியாற்றிய காலத்தில், வாட்ஸ்ஆப் மூலம் சட்டவிரோதமாக ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்தது ஆதாரங்களுடன் பிடிபட்டுள்ளது. இதில் இந்திய கடற்படை ராணுவத்திற்குச் சொந்தமான கப்பல்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கும். பதினெட்டு மாதங்களாக ராணுவ ரகசியங்களைப் பாகிஸ்தானுக்கு தொடந்து அனுப்பி வந்ததன் மூலம் ரோஹித் பாக். உளவாளியாக செயல்பட்டு வந்து கண்டு காவல்துறையினர் அதிர்ந்தனர்.

கேரளாவின் கொச்சியில் பணி முடிந்து, கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள மால்பே (Malpe) துறைமுகத்திற்கு மாற்றப்பட்ட பிறகும், அவர் கொச்சியில் உள்ள தனது நண்பர் சந்த்ரி மூலம் ரகசியத் தகவல்களை சேகரித்து, வாட்ஸ்ஆப் மூலம் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து அனுப்பியுள்ளார். ராணுவ ரகசியங்களைப் பாகிஸ்தானுக்கு உளவு தந்ததன் மூலம், இந்திய நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடுப்பியின் கப்பல் தளத்தின் மால்பே பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO), காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், கைதும் Section 152 of the Bharatiya Nyaya Sanhita (BNS) மற்றும் Sections 3 and 5 of the Official Secrets Act இன் கீழ் மால்பே காவல் நிலையத்தில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான பாகிஸ்தான் உளவாளிகள் இருவரும் டிசம்பர் 3, 2025 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தேச விரோதச் செயல்களில் இவர்களுடன் மேலும் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறிய, காவல்துறையினருடன் இணைந்து தொடர்ந்து NIA (National investigation agencies) விசாரணை நடைபெற்று வருகிறது.

கூடுதல் தகவல்களுக்கு:

https://www.ndtv.com/india-news/2-men-who-leaked-sensitive-naval-shipyard-data-to-pakistan-arrested-9680834

https://www.thehindu.com/news/cities/Mangalore/udupi-police-arrest-two-up-men-for-sharing-information-on-indian-navy-ships-with-pakistan/article70307045.ece

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்தியர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது கத்தார்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்துவிட்டு பழியை இந்திய முஸ்லிம்கள் மீது சுமத்துவது, மதக்கலவரம் செய்துவிட்டு பிற மதத்தினர் மீது பழி சுமத்தும் பாஜகவினரின் பட்டியலை, சத்தியமார்க்கம்.காம் தளத்தில் #தனக்குத்தானே என்ற TAG மூலம் தொகுப்பாக வாசிக்கலாம். (லிங்க்)


Share this: