நாமக்கல் (மே 12, 2025): நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (40). இந்து முன்னணி மாவட்டச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டில் இருந்து அலறல் சப்தம் கேட்டுள்ளது.
அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ஜெகதீசன், கீதா ஆகியோர் வெட்டுக்காயங்களுடன் கிடந்தனர். அவர்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீதா உயிரிழந்தார்.
இதுகுறித்து எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீஸார், ஜெகதீசனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தனது மனைவியை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சில மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்ததாகவும், தடுக்க முயன்ற தனக்கும் வெட்டு விழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மனைவியைக் கொலை செய்துவிட்டு ஜெகதீசன் நாடகமாடுவதாக போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஜெகதீசனிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, பழியை வேறொரு மதத்தினர் மேல் போட்டால் கட்சியில் பெரிய ஆள் ஆகலாம் எனும் ஆசையில் தனது கையை வெட்டிக் கொண்டதாக ஜெகதீசன் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கியக் குறிப்பு:
குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் தன்னையும், தன் மனைவியையும் வெட்டியதாக காவல்துறையில் தெரிவித்த செய்தியை முதல் பக்கத்தில் இட்டு பரபரப்பாக்கிய பெரும்பாலான தமிழ் ஊடகங்கள், காவல்துறையின் விசாரணையில், இந்து முன்னணி செயலாளரான ஜெகதீசனே தன் மனைவியைக் கொன்றுவிட்டு, பழியை வேறொரு மதத்தினர் மீது போட்ட அப்டேட் செய்தியை பிரசுரிக்க வில்லை.
செய்தியை வெளியிட்ட சில ஊடகங்கள்: