பெங்களூரு (04 ஆகஸ்ட், 2025): கர்நாடகாவில் உள்ள பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்துத்துவா அமைப்பினர் விஷம் கலந்த சம்பவம், நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம், ஹூள்ளிக்கட்டி (Hulikatti) பகுதியில் அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு சுலைமான் கொரிநாயக் (Suleman Gorinaik) என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். கிட்டத்தட்ட 13 வருடங்களாக அவர் அங்கு பணியாற்றி வருகிறார். உள்ளூர் கிராம மக்களிடம் அவர் மிகவும் நல்ல உறவில் இருக்கிறார்.
நன்மதிப்பைப் பெற்ற இஸ்லாமியர்
சுலைமான் அப்பகுதி மக்களிடம் நன்மதிப்பைப் பெற்று இருப்பதைப் பொறுக்க முடியாமலும், அவர் இஸ்லாமியர் என்பதாலும் அவர் மீது ஏதேனும் பழி சுமத்தி பணியிடம் மாற்றம் செய்வதற்காக, அங்குள்ள இந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்துள்ளனர். இதில் 11 மாணவர்களது உயிர் ஊசலாடும் நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கு மிரட்டல் விடுத்த இந்து அமைப்பினர்
சம்பவத்திற்கு முன்புவரை, தலைமை ஆசிரியர் சுலைமானை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இந்து இயக்கங்கள் பள்ளி நிர்வாகத்தை மிரட்டியுள்ளனர். ஆனால், தலைமை ஆசிரியர் சுலைமானின் சிறப்பான சேவை காரணமாக பள்ளி நிர்வாகம் அவரை பணியிட மாற்றம் செய்ய வில்லை.
இதையடுத்து அவருக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்தி, பள்ளியில் இருந்து மாற்றி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விஷத்தை கலந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாகர் பாட்டீல், கிருஷ்ணா மதர், மகன்கௌடா பாட்டீல் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பூச்சி மருந்து கலப்பு இதுகுறித்து பெலகாவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பீமாசங்கர் குலேத் கூறுகையில், “கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்தப் பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையின்போது தண்ணீர் தொட்டியில் ஒரு வித நாற்றம் வந்தது. அதற்குள்ளேயே ஒரு பூச்சி மருந்தின் பாட்டிலும் கண்டறியப்பட்டது.
விசாரணையில் இந்து அமைப்பினர் குடிதண்ணீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினோம். அதில் பள்ளியில் பணியாற்றும் இஸ்லாமிய தலைமை ஆசிரியரை டிரான்ஸ்பர் செய்வதற்காக இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இதை செயல்படுத்தியது தெரிந்தது.
சதி திட்டம் தீட்டியது எப்படி?
சாகர் பாட்டீல் என்பவர் (president of the Sri Rama Sene) ஶ்ரீராம் சேனா என்கிற இந்து இயக்கத்தின் மாவட்ட தலைவராக உள்ளார். அவர் தான் இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டுள்ளார். (சத்தியமார்க்கம்.காம்)
அவரது மிகவும் கெட்டப் பெயராகி பணியிட மாற்றம் செய்ய சாகர் இந்த திட்டத்தை தீட்டியுள்ளார். இதற்காக கிருஷ்ணா என்ற இந்து அமைப்பு உறுப்பினரை மற்றொரு விஷயத்தில் பிளாக் மெயில் செய்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
திட்டம் தீட்டியபடி இவர்கள் கடந்த ஜூலை 18 ஆம் தேதி முனவல்லி என்கிற பகுதியில் உள்ள கடையில் பூச்சி மருந்து வாங்கியுள்ளனர். இவர்கள் நேரடியாக கலக்காமல் அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனுக்கு ரூ.500 பணம் மற்றும் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து சிறுவனை பள்ளிக்குள் அனுப்பி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்துள்ளனர். ஆனால் பூச்சி மருந்து கலந்தபின் சிறுவன் பாட்டிலை தொட்டி அருகிலேயே போட்டு சென்றுவிட்டான்.
இந்து அமைப்பினர் மாட்டியது எப்படி?
“சிறுவன் போட்டு விட்டுச் சென்ற விஷப் பாட்டில் தான் எங்களுக்கு கிடைத்த துருப்பு. அதை வைத்துக் கொண்டு கடைக்காரரை பிடித்து, பூச்சி மருந்து யார் வாங்கினார்கள் என்பதைக் கண்டறிந்தோம். காவல்துறையினரின் விசாரணையில் இந்து அமைப்பினர் 3 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தனர். அதனடிப்படையில் தான் அவர்களை கைது செய்தோம்.” என்றார் காவல்துறை அதிகாரி.
கண்டனம்
ஒரு முஸ்லிம் மீது பழி போட எண்ணி, பத்திற்கும் மேற்பட்ட ள்ளிக் குழந்தைகளின் உயிருடன் விளையாடிய இந்துத்துவாவினர் மீது, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
- SatyaMargam.com