அலிகார் (31 அக் 2025): உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் நகரில் உள்ள நான்கு கோயில் சுவர்களில், கடந்த அக்டோபர் 25, 2025 அன்று ” ஐ லவ் முஹம்மத் ” என்று சிலர் எழுதி விட்டார்கள். இதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுக்க பெரும் கலவரம் மூண்டது.
பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள், இச்செயலைக் கண்டித்து போராட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதற்குக் காரணமான முஸ்லிம்களைக் கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, முதல் கட்ட விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் இமாம் மவ்லவி முஸ்தக்கீம், குல் முஹம்மது, சுலைமான், அல்லாபக்ஷ், ஹஸன், ஹமீத், சோனு, யூஸுப் ஆகிய எட்டு முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால், சங் பரிவாரங்கள் வன்முறையைக் கைவிட்டனர்.
காட்டிக் கொடுத்த பிழை:
ஆனால், அலிகாரின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (SSP) நீரஜ் குமார் ஜேடன் அவர்களுக்கு, இக் கைது தொடர்பான நெருடல் தொடர்ந்தது. தொடர் விசாரணையை முடுக்கி விட்டார். கோவில் சுவர்களில், முஹம்மது என்பது ஆங்கிலத்தில் MUHMAD என தவறாக எழுதப்பட்டிருந்ததே காரணம்.
பொதுவாக முஸ்லிம்கள் தமது பதாகைகளில் சரியான ஸ்பெல்லிங் கொண்டு எழுதுவது வழக்கம். கைது செய்யப்பட்டவர்களும் சரியான ஸ்பெல்லிங் எழுதக் கூடியவர்கள் என்பதை உறுதிப்படுத்தினார் நீரஜ்.
தொடர் விசாரணையில், பல்வேறு சாட்சிகள் மற்றும் கோயில்கள் இருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்த காவல்துறையினர் அதிர்ந்தனர்.
அதைத் தொடர்ந்து, ஐ லவ் முஹம்மத் என பல்வேறு கோயில்களின் சுவற்றில் எழுதி விட்டு பெரும் மதக் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்ட சங் பரிவாரங்களைச் சேர்ந்த ஐந்து இந்துக்கள் சிக்கினர்:
- அபிஷேக் சரஸ்வத் (Abhishek Saraswat)
- ஆகாஷ் சரஸ்வத் (Akash Saraswat)
- திலீப் குமார் சர்மா (Dilip Kumar Sharma)
- ஜிஷாந்த் குமார் சிங் (Zeeshanth Singh)
- ராகுல் (தலைமறைவாகி உள்ளார்)
வலுவான ஆதாரங்களுடன் உண்மைக் குற்றவாளிகள் பிடிபட்டதால், முன்னர் கைதான எட்டு முஸ்லிம்கள் விடுவிக்கப் பட்டுள்ளனர்.
- SatyaMargam.com
