பாதுகாப்பு (கவிதை)

துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி

எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி

சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்

விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல் வீடு திரும்பும்போது
ஆதங்கம் தொட்டது எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!

திருமதி. ஜெஸிலா ரியாஜ், துபாய் (நன்றி: திசைகள் இதழ்)