நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானின் ‘பாரத ரத்னா’!

நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானின் ‘பாரத ரத்னா’!
Share this:

“நரேந்திரமோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்” என்று பேசினாராம் கிரிராஜ் சிங் என்ற பிஜேபி தலைவர்.  “நரேந்திர மோடிக்கே பாகிஸ்தானின், ‘பாரத ரத்னா’ போன்ற ‘நிஷான்–எ-பாகிஸ்தான்’ என்ற ஆக உயரிய விருதை வழங்க வேண்டும்” என்று எழுதினார் ஒருவர்.  அவர் பிரபல பத்திரிக்கையாளரான எம்.ஜே.அக்பர்.

அக்பருடைய Byline என்ற வாராந்திர பத்திகள் மிக பிரசித்தமானவை.  அக்கட்டுரைகளின் தொகுப்பு Byline என்ற பெயரிலேயே புத்தகமாகவும் வெளியாகியுள்ளது. அதில் ‘நிஷான்–எ-பாகிஸ்தான் விருதிற்கு ஏன் மோடி தகுதியானவர்?’ (Why Modi deserves Nishan-e-Pakistan) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் அக்பர்.  பிப்ரவரி 2002-ல் மோடியின் நல்லாதரவுடன் நடத்தப்பட்ட உலகப்புகழ் பெற்ற ‘குஜராத் கலவரம்’ ஏற்படுத்திய ரணம் காயுமுன் மார்ச் 2002-ல் எழுதிய கட்டுரை இது.

Even after a month after Godhra, Gujarat was burning.  Muslims had become prey to hooliganism abetted and aided by Chief Minister Modi. “கோத்ரா சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன பிறகும் குஜராத் இன்னும் எரிந்துக் கொண்டிருக்கிறது.  முதலமைச்சர் மோடி உடந்தையாகவும் உதவியாகவும் இருந்து நடத்திய அராஜகங்களுக்கு முஸ்லிம்கள் இரையாயினர்” என்ற முன்னுரையோடு கட்டுரையைத் தொடங்குகிறார் அக்பர்.

Modi has been trying to destroy the idea of India as a nation in which every citizen is equal irrespective of his faith. He has provided the evidence that was once offered only as argument.

That is not the only major favor that Modi has done to Pakistan. Till he started his lynch-mob response to the cruel tragedy of Godhra, all the negative focus of South Asia was concentrated on Pakistan and the state of terror that had been spawned by the state of Pakistan, to use a depressing pun.

Modi has, in a space of days, taken Pakistan off the world’s front pages and replaced it with Gujarat. Suddenly, the stories of violence and state-sponsored terror are all coming from Gujarat, each day’s tragedy focused through television cameras. If President Pervez Musharraf has not yet sent a thank you letter to his benefactor in Ahmedabad, then the president is remiss….

…His preferred passion is hatred.  This is what makes him unique.  He actually uses hatred as a political weapon, and employs both subtle and crude means to provoke a similar passion among others. You can see the difference in his eyes; there is gloat floating in them. This is why it is especially dangerous to leave power in the hands of a man like him. It is almost implicit that anyone who has been soaked in the RSS version of Indian history has acquired a deep sense of grievance against Muslims, but Modi is not the only graduate from the RSS school. You do not see this intense, Nazi-type hatred in either the attitude or the behavior of others from this school; the political stance, even when it is acrid, does not become a personal vendetta against a community…

“சாதி, மத வேறுபாடுகளின்றி நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமமானவர்களே என்ற இந்தியாவின் தனித் தன்மையைக் குலைக்க முயன்றிருக்கிறார் மோடி.  வெறும் விவாதப்பொருளாக மட்டுமே இருந்த ஒரு விஷயத்திற்கு ஆணித்தரமான ஆதாரத்தைத் தந்திருக்கிறார் அவர்.

மோடி பாகிஸ்தானுக்குச் செய்த உபகாரம் இது மட்டுமல்ல.  கோத்ரா அசம்பாவிதத்திற்குப் பழி வாங்குகிறேன் என்ற பெயரில் மோடி அராஜக வெறியாட்டத்தைத் தொடங்கும்வரை உலக ஊடகங்களின் பார்வையில் கலவரபூமி, அரச பயங்கரவாதம் ஆகியவற்றின் அடையாளமாக கிழக்கு ஆசியாவில் பாகிஸ்தானே இருந்தது.   ஒரு சில நாட்களிலேயே ஊடகங்களின் தலைப்புச் செய்தியிலிருந்து பாகிஸ்தானைத் தூக்கிவிட்டு குஜராத்தை அங்கே இடம்பெறச் செய்தார் மோடி..  வன்முறை, கலவரம், அரசு ஆதரவுடன் பயங்கரவாதம் போன்றச் செய்திகள் திடீரென குஜராத்திலிருந்து வர ஆரம்பித்தன. ஒவ்வொரு நாளின் வன்முறைச் செய்திகளும் தொலைக்காட்சிக் கேமராக்களால் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் ஒளிபரப்பாயின.  இந்த ‘அரிய சேவை’யை செய்த தம் அகமதாபாத் நண்பருக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முசாரப் நன்றிக் கடிதம் எழுதியிருக்க வேண்டும்.

அவருடைய கண்களில் ஒரு வித்தியாசத்தை நீங்கள் பார்க்க முடியும்.  பிறரின் துன்பத்தைக் கண்டு மகிழும் தன்மை அதில் மிதந்துக் கொண்டிருக்கிறது.” – பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர்.

வெறுப்புணர்வை வளர்ப்பதில் மோடி அதீத ஆர்வம் உடையவராக இருக்கிறார்.  அவரின் இந்தக்குணமே அவரை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.  அவர் உண்மையில் வெறுப்புணர்வை ஒரு அரசியல் ஆயுதமாகவே பயன்படுத்துகிறார்.  அதைக் கொண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும் பிறரைத் தூண்டி அவர்களையும் தன்னைப் போலவே வெறுப்புணர்வுக் கொண்டவர்களாக ஆக்குகிறார்.

அவருடைய கண்களில் ஒரு வித்தியாசத்தை நீங்கள் பார்க்க முடியும்.  பிறரின் துன்பத்தைக் கண்டு மகிழும் தன்மை அதில் மிதந்துக் கொண்டிருக்கிறது.  எனவேதான் இவரைப் போன்றவர்களின் கரங்களில் ஆட்சியதிகாரத்தை ஒப்படைப்பது மிக அபாயகரமானதாக இருக்கிறது.

கிட்டத்தட்ட ஆர்.எஸ்.எஸ் கண்ணோட்டத்தில் இந்திய வரலாற்றைப் பயின்ற அனைவரிடமும் முஸ்லிம்களைப் பற்றிய ஒரு மனக்குறை தொக்கி நிற்பதைக் காணலாம்.  ஆர்.எஸ்.எஸ் பள்ளியில் பயின்றது மோடி மட்டுமல்ல.  ஆனால் மோடியிடம் காணப்படும் நாஜி-ஹிட்லரைப் போன்ற ஆழமான வெறுப்புணர்வையும்,  ஒரு சமுதாயத்திற்கு எதிரான பழிவாங்கும் வெறியாகவே மாறிப்போய் இருக்கும் கசப்புணர்வையும் அவருடைய மற்ற சகாக்களிடம் கூட காண முடியாது.”

மேற்கண்டவாறு கட்டுரை எழுதிய எம்.ஜே. அக்பர் இப்போது பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர்.  பாவம்.. அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ..!

–    இப்னு பஷீர்Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.