அவசர சிக்கன் புரோக்களி சூப்

{mosimage}

தேவையான பொருள்கள்
சிக்கன் – 200 கிராம்
கேரட் – 1
புரோகளி (Broccoli)- 100 கிராம்
குடை மிளகாய் (Capsicum)- 1
பீன்ஸ் – 50 கிராம்
வெங்காயத் தாள் – 2
கரு மிளகு – 1 தேக்கரண்டி
சோள மாவு – 1 தேக்கரண்டி
உப்பு -தேவைக்கேற்ப

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 5
கலோரி அளவு: NA
தயாராகும் நேரம்: 12 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 5 (நிமிடம்)

 

முன்னேற்பாடுகள்:

1. பீன்ஸ், கேரட், புரொக்களி, குடைமிளகாய் காய்களை துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். (மாற்றமாக ரெடிமேடாக கிடைக்கும் உறையவைக்கப்பட்ட காய்கறிக் கலவை (Frozen Mixed Vegetable) உபயோகிக்கலாம்)

2. வெங்காயத் தாளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

3. கரு மிளகை பொடி செய்து கொள்ளவும்

செய்முறை

பாத்திரத்தில் சுமார் 1 1/2 லிட்டர் தண்ணீர் விட்டு, சிக்கனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.  பிறகு சிக்கனை எடுத்து எலும்பு நீக்கி உதிர்த்து கொள்ளவும்.  அதே தண்ணீரில் நறுக்கிய காய்கள் மற்றும் உதிர்த்த சிக்கன் போட்டு இரண்டு நிமிடம் வேக வைக்கவும். (‘புரோசன் மிக்ஸெட் வெஜிடபள்’ உபயோகித்தால், ஒரு நிமிடம் வேக வைத்தால் போதுமானது).  பிறகு ஒரு தேக்கரண்டி சோள மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.  கொதித்ததும் நறுக்கிய வெங்காய தாள் போட்டு இறக்கி விடவும்.

 

சூப் குவளைகளில் ஊற்றி மிளகு தூவி சூடாக பரிமாறவும்.

 

குறிப்பு

 

உம்மு ரேஹான்