அமெரிக்கக் குடிமகன் தப்பிஓட்டம் – குண்டு வெடிப்புகளுக்குப் பின்னணியில் சிஐஏ?

Share this:

அண்மையில் நாட்டை உலுக்கிய அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகள் நடப்பதற்குச் சற்று முன்பு, ‘இந்தியன் முஜாஹிதீன்என்ற போலிப் பெயரில் குண்டுவைக்கப்போவதாகப் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட கணினியின் உரிமையாளரான அமெரிக்க நபர், உண்மை அறியும் (நார்கோ அனாலிஸிஸ்) சோதனை செய்யப்படாமல் நேற்றிரவு குடும்பத்துடன் அமெரிக்கா தப்பிச் சென்றார். இது அமெரிக்காவின் நெருக்குதல் காரணமாக இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடந்தாகும் என்றக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

நவிமும்பையிலுள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்த முன்னாள் அமெரிக்க இராணுவ வீரரான கென்னெத் ஹேவுடை, உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப் போவதாக அஹமதாபாத் குண்டுவெடிப்பை விசாரிக்கும் குழு தெரிவித்திருந்த நிலையில், எவ்வித அனுமதியும் இன்றி இரகசியமாக ஹேவுட் தப்பிச் சென்றது எப்படி? என்பதற்கான பதிலை எவராலும் தர இயலவில்லை. இது தொடர்பாக மும்பை, டெல்லி காவல்துறையும் விமான நிலைய அதிகாரிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் சுமத்தி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். எனினும், குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகப்பட வேண்டிய முக்கிய நபர், நாட்டின் அனைத்து பாதுகாப்பு வளையங்களையும் மீறித் தப்பிச் சென்றது குறித்துப் பலவிதச் சந்தேகங்கள் நிலவுகின்றன.

 

மும்பையில் ஹேவுடின் வீட்டிலிருந்த அவரது மடிக்கணினியிலிருந்து பத்திரிக்கையாளர்களுக்குஇந்தியன் முஜாஹிதீன்என்ற போலிப் பெயரில் மின்னஞ்சல்கள் அனுப்பபட்டிருந்தது தொடர்பாக விசாரித்ததில், தனக்குஎதுவும் தெரியாதுஎன இவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியிருந்தார். இவரை உண்மை அறியும் சோதனைக்கும்ப்ரைன் மாப்பிங்எனப்படும் சிந்தனை படிக்கும் நவீன சோதனைக்கும் உட்படுத்தியுள்ளோம் என்றும் இது தொடர்பான பரிசோதனை அறிக்கை இரு தினங்களில் கிடைக்கும் எனவும் தீவிரவாத எதிர்ப்புப் படை(.டி.எஸ்) தலைவர் ஹேமந்த் ஹர்கரே அறிவித்திருந்தார். இவ்வறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில், தீவிரவாத தடுப்புப்படையின் துணை தலைவர் பரம்வீர் சிங், “பரிசோதனையில் இவருக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லைஎன்று அறிவித்தார்.

 

இவர்களின் அறிக்கைகளில் காணப்பட்ட முரண்பாடு, ஹேவுட் விவகாரத்தில் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது. ஹேவுடை மேலும் உண்மை அறியும் நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்துவோம் என ஹேமந்த் அறிவித்திருந்தார். ஆனால், இதனை ஹேவுட் எதிர்த்ததாகவும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க முடியாது என மறுத்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இவை அனைத்திற்கும் மேலாக, குண்டுவெடிப்புகள் நடைபெற்றதைத் தொடர்ந்து விமானநிலையங்களில் பரிசோதனைகளைக் கடுமையாக்கி இருந்தனர். மேலும், ஹேவுடுக்கு எதிராக மும்பை காவல்துறை எச்சரிக்கை அறிக்கையும் வெளியிட்டிருந்தது. ஆனால், இவை அனைத்தையும் மீறி, ஹேவுட் தனது குடும்ப சகிதம் தில்லி இந்திராகாந்தி விமானநிலையம் வழியாக அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்று விட்டார்.

 

காவல்துறை வெளியிடும் எச்சரிக்கை அறிக்கை என்பது, விசாரணையின் ஒரு பகுதியாக, கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக வெளியிடப்படும் அறிக்கையாகும். ஹேவுடு க்கு எதிராகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கையினைக் குறித்துத் தங்களுக்குத் தெரியாது என விமானநிலைய பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள சி..எஸ்.எஃப்பும் தில்லி காவல்துறையும் சுங்கத்துறையும் கூறுகின்றன.

 

ஆனால், ஒருவரைக் குறித்து எச்சரிக்கை நோட்டீஸ் வெளியிடப்பட்டால் அந்நபரைக் குறித்த அனைத்து விவரங்களும் விமாநிலைய பாதுகாப்பு, கஸ்டம்ஸ், எமிகிரேசன் அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கப் படும். இருப்பினும், நேற்று இரவு விமானநிலைய அதிகாரிகளால் எவ்விதப் பரிசோதனையும் செய்யப்படாமல் குடும்பத்துடன் ஹேவுட் அமெரிக்கா தப்பிச் சென்றதன் பின்னணியில் அமெரிக்க நெருக்குதலே காரணம் என்றும் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சிஐஏ உட்பட சர்வதேச சதி காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வலுத்துள்ளது.

 

இதற்கு முன்பு, இந்திய உளவுத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜாயிண்ட் செக்ரடரி அதிகாரியான ராமிந்தர் சிங் அமெரிக்காவுக்கு உளவு பார்த்து வந்ததைக் கண்டறிந்து அவர் மீதும் இதே போன்ற எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். இதனை அறிந்த அவர் இந்திய ரகசியங்களுடன் குடும்பத்தோடு தப்பியோடியது அமெரிக்காவுக்குத்தான் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

 

“அனுமதி பெறாமல் மும்பையை விட்டு அகலக் கூடாது” என்ற மும்பை காவல்துறை அதிகாரிகளின் உத்தரவைக் குப்பையில் வீசி விட்டு, அமெரிக்காவுக்குப் பறந்து விட்ட ஹேவுடைத் திரும்ப இந்தியாவுக்குக் கைது செய்து கொண்டு வந்து உரிய வகையில் விசாரித்தால் திடுக்கிடும் உண்மைகள் பல வெளிவரலாம்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.