நரக மாளிகை 2.0 !

Yashwant Shinde
Share this:

நரக மாளிகை 1.0 நூல் அறிமுகம் :

ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் சாகாவிற்கு ஐந்துவயதிலே அவரது தாயாரால் தூக்கிக் கொண்டு விடப்பட்ட குழந்தை சுதீஷ் மின்னி. அவ்வியக்கத்துடன் வளர்ந்து இருபத்தைந்து ஆண்டு காலம் அதில் செலவிட்ட அவர் அவ்வியக்கத்தின் முக்கியமான பல ரகசிய நடவடிக்கைகளில் பங்கெடுத்து அவர்களின் மக்கள் விரோத, சட்ட விரோத, மானுட விரோத, அறத்தை மறுக்கும் நடவடிக்கைகளினால் மனம் நொந்து வெளியேறி அதன் எதிர் இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வந்துசேர்கிறார். அவரது இருபத்தைந்து ஆண்டுகால அனுபவத்தின் ஒரு சிறிய பகுதியை (Click) நூலாக்கியிருக்கின்றார்.

நரக மாளிகை 2.0 ஒப்புதல் வாக்குமூலம்:

The applicant, Yashwant Shinde, was an RSS worker for close to 25 years and also had associations with other ultra-right-wing groups like the Vishva Hindu Parishad (VHP) and Bajrang Dal. He has claimed that over three years before the blast, a senior VHP worker had informed him about a terror training camp that was underway to “carry out blasts across the country” – The Wire.

oOo

மிலிந்த் பராண்டே போன்ற முக்கிய சதிகாரர்கள் தலைமறைவாக இருந்துகொண்டு ரகசியமாக சதித்திட்டங்களைத் தொடர்ந்தனர், நாடு முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்தினர் . மேலும் காவல்துறை மற்றும் ஒருதலைப்பட்சமான ஊடகங்களின் உதவியுடன் அவர்கள் முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டினர் . அது அவர்களுக்கு 2014 மக்களவைத் தேர்தலில் உதவியது ”

மும்பை, செப்.3, 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்டில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், பாஜகவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்காக, ஆர்எஸ்எஸ் இயக்கமும், அதன் துணை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்தும் 2000ஆம் ஆண்டுகளில் நான்டெட் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றியதாகக் குறிப்பிட்டு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 49 வயதாகும், யஷ்வந்த் ஷிண்டே எனும்  அந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி, 2000ஆம் ஆண்டுகளில் நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2007 மற்றும் 2008இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு உட்பட  நாட்டில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்கள், நான்டெட் குண்டுவெடிப்பின் அதே  சதியில் இருந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தால் திட்டமிடப்பட்டவை என்று நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வெடிகுண்டு பயிற்சி

“இந்திரேஷ் குமார், ஹிமான்ஷு பான்சே, மிலிந்த் பராண்டே, ராகேஷ் தவாடே, ரவி தேவ் (மிதுன் சக்ரவர்த்தி) ஆகியோர் இந்த குற்றங்களில் முக்கிய சதிகாரர்கள். மிலிந்த் பராண்டே மற்றும் ராகேஷ் தவாடே ஆகியோர் ஏற்பாடு செய்த பயிற்சி முகாமில் ரவி தேவ் (மிதுன் சக்ரவர்த்தி) வெடிகுண்டு தயாரிப்பில் பயிற்சி அளித்தார்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர்களில், மிலிந்த் பராண்டே தற்போது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ‘தேசிய அமைப்பாளராக’ உள்ளார். ‘மிதுன் சக்ரவர்த்தி’ எனப்படும் ரவி தேவ் [ஆனந்த்] – இப்போது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் உத்தர்கண்ட் பிரிவுக்குத் தலைமை தாங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2006ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவான பஜ்ரங் தளத்தின் தொண்டர் ஹிமான்ஷு பான்சே உட்பட இருவர் வெடிகுண்டு வெடித்ததில் இறந்து போயினர். இந்த வழக்குத் தொடர்பான விசாரணையிலேயே யஷ்வந்த் ஷிண்டே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அந்த பிரமாணப் பத்திரத்தில், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியைத் தகர்க்க வெடிகுண்டு தயார் செய்யும்போது, தவறுதலாகக் குண்டுவெடித்து, ஹிமான்ஷூ பான்சே  இறந்ததாகவும், ஹிமான்ஷூ பான்சே  இந்துத்துவா சுற்றுச்சூழல் அமைப்பில் நீண்ட கால கூட்டாளியாகவும் சக பயணியாகவும் இருந்ததால், இது தனக்குத் தெரியும் என்று ஷிண்டே தெரிவித்துள்ளார்.

ராணுவத்திலும் பயிற்சி

மேலும், 1999ஆம் ஆண்டில், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்)-இன் மூத்த  நிர்வாகியான இந்திரேஷ் குமாரின் அறி வுறுத்தலின் பேரில் ஹிமான்ஷுவையும் அவரது 7 நண்பர்களையும் தான் ஜம்முவிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு ஹிமான்ஷூ பான்சே  உள்ளிட்டோர் இந்திய  ராணுவ வீரர்களிடம் நவீன ஆயுதப் பயிற்சி  பெற்றார்கள் என்றும் மற்றுமொரு அதிர்ச்சி தகவலையும் ஷிண்டே வெளியிட்டுள்ளார். “ஜம்முவில் உள்ள தலாப் தில்லோ என்ற இடத்தில் பயிற்சி நடைபெற்றது” என்று இடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 2003இல் தானும், ஹிமான்ஷூ பான்சேவும் புனேவில் உள்ள சிங்காட் அருகே நடைபெற்ற வெடிகுண்டு பயிற்சி  முகாமில் கலந்துகொண்டதாகக் கூறியிருக்கும் ஷிண்டே, அந்த முகாமில் தங்களுக்குப் பயிற்சி அளித்தவர்கள் “முகாமின் முதன்மையான மற்றும் முக்கிய அமைப்பாளர்- தற்போதைய விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தற்போதைய தேசிய அமைப்பாளர் மிலிந்த் பராண்டே ஆவார்” என்றும் நபர்களைப் பட்டியலிட்டுள்ளார்.

தற்போது 49 வயதாகும் ஷிண்டே தனது  முதல் ஒன்பது ஆண்டுகளை ஜம்மு – காஷ்மீரில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பில் (தற்போதைய ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர்) இந்திரேஷ் குமாரின் பயிற்சியின் கீழ் கழித்ததாகவும் கூறியுள்ளார்.

ஜம்முவில் வெடிகுண்டு சோதனைகள்

முக்கிய பயிற்றுவிப்பாளரான ‘மிதுன் சக்ரவர்த்தி’ எனப்படும் ரவி தேவ் [ஆனந்த்] குறித்துக் கூறும் யஷ்வந்த் ஷிண்டே, “காலை 10 மணிக்கு முகாமுக்கு வரும் மிதுன் சக்ரவர்த்தி இரண்டு மணி நேரம் ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாக வெடிகுண்டு பயிற்சி வழங்குவார். நாங்கள் பயிற்சி எடுத்தபோது, எங்களுக்கு வெடி குண்டுகளைத் தயாரிப்பதற்காக  3-4 வகையான வெடிப் பொடிகள், குழாய் துண்டுகள், கம்பிகள், பல்புகள், கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. பயிற்சிக்குப் பிறகு, வெடிகுண்டுகளைப் பரிசோதிப்பதற்காக, ஒரு தனிமையான காட்டுப் பகுதிக்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவோம். அங்கு, குண்டுவெடிப்பு ஒத்திகை நடக்கும். ஒரு சிறிய குழி தோண்டி,  அதில் வெடிகுண்டை டைமர் வைத்து,  அதை மண் மற்றும் பெரிய பாறைகளால் மூடி வெடிகுண்டை வெடிக்கச் செய்வோம்.  அப்போது எங்களின் சோதனை வெற்றியடைந்தது. பெரிய குண்டுவெடிப்புகள் மற்றும் கற்பாறைகள் நீண்ட தூரத்திற்குத் தூக்கி எறியப்பட்டன” என்று சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.

ஹிமான்ஷூ உயிரிழந்தது எப்படி?

“எனினும் குண்டுவெடிப்புகளில் எனக்கு  உடன்பாடில்லை. நான் மட்டுமன்றி, கூட்டாளியான ஹிமான்ஷு பான்சேவையும் குண்டுவெடிப்புகளில் ஈடுபடவிடாமல் தடுக்க முயன்றேன். ஆனால் பயிற்சிக்குப் பிறகு ஹிமான்ஷு மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் மூன்று குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினார். அடுத்ததாக அவுரங்காபாத்தில் உள்ள முக்கிய மசூதியில் ஒரு பெரிய குண்டு வெடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார், அந்த குண்டுவெடிப்புக்காக வெடிகுண்டு தயாரிக்கும் போதுதான் அவர் 2006 இல்  நான்டெட்டில் உயிர் இழந்தார்” என்று யஷ்வந்த் ஷிண்டே விரிவாகக் கூறியுள்ளார்.

தனித்த நிகழ்வு அல்ல

ஷிண்டேவின் இந்த வாக்குமூலத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படையின் முதல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளவைதாம் என்றாலும், 2013ஆம் ஆண்டு இந்த வழக்கை தன்வசம் எடுத்துக் கொண்ட மத்திய புலனாய்வுப் பிரிவு, 2006 நான்டெட் குண்டுவெடிப்பு, தனித்த சம்பவம் என்று கூறியிருந்தது. “நகரில் உள்ள ஒரு முகாமில் ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக  தனது இயக்கத்தினருக்குப் பயிற்சி அளிக்குமாறு” மிலிந்த் பராண்டே கேட்டுக் கொண்டதாக புனேவைச் சேர்ந்த (ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி) சனத்குமார் ரக்வி தால்பேட், பயங்கரவாத எதிர்ப்புப் படையிடம் ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்தார். இதையும் தாண்டித்தான் “நான்டெட் குண்டு வெடிப்பு தனித்த சம்பவம்” என்று சிபிஐ முடிவுக்கு வந்தது. ஆனால், “நாடு முழுமைக்குமாக ஆர்எஸ்எஸ் வடிவமைத்திருந்த குண்டு வெடிப்பு சதித் திட்டத்தின் ஒருபகுதிதான் நான்டெட் குண்டுவெடிப்பு” என்று யஷ்வந்த் ஷிண்டே தற்போது கூறியிருப்பது முடிச்சுகளை அவிழ்ப்பதாக அமைந்துள்ளது.

முடிச்சுகள் அவிழ்கின்றன

அதுமட்டுமல்ல, “நான்டெட் வெடிகுண்டு தயாரிக்கும் முகாமில் இருந்த மற்ற நபர்களில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் தவாடேவும் இருந்தார்” என்று ஷிண்டே கூறுவது குண்டுவெடிப்பு வழக்குகள் தொடர்பான விசாரணையில் புதிய கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. மேலும், “2000களில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் 2007 மற்றும் 2008 இல் மாலேகான் குண்டுவெடிப்பு உட்பட நாட்டில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்கள், நான்டெட் குண்டுவெடிப்பின் அதே சதியில் இருந்து உருவானவை” என்று ஷிண்டே கூறியிருக்கின்றார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி  அலைகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அவரது தகவல்கள் முன்னுக்குப் பின்  முரணின்றி சம்பவங்களோடு பொருந்திப் போகின்றன. “வெடிகுண்டுகள் வைக்கும் திட்டத்தைப் பொறுத்தவரை, ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகிகள், தற்போதைய தலைவர் மோகன் பகவத் உட்பட பலரிடம் மிலிந்த் பராண்டேவின் சூழ்ச்சிகளைப் பற்றி எச்சரிக்குமாறு பேசியதாகவும், ஆனால் அவர்கள் செவிமடுக்கவில்லை எனவும் பிரமாணப் பத்திரத்தில் யஷ்வந்த் ஷிண்டே  குறிப்பிட்டுள்ளார். உண்மையில், இந்தத் தலைவர்களின் சாக்குப் போக்கான காரணங்களைப் கேட்ட  பிறகு, ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியின் மூத்த தலைவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரிக்கின்றார்கள் என்ற உண்மை தெரியவந்ததாகக் கூறும் யஷ்வந்த் ஷிண்டே, 1999இல் மும்பைக்குத் திரும்பியதாகவும், அங்கு  பஜ்ரங் தளத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும், எனினும், 13-14 ஆண்டுகளுக்கு முன்பே, ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளில் தீவிரமாக பங்கேற்பதை நிறுத்தி விட்டதாகவும், உறுப்பினராக மட்டும் தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆதாயத்திற்காக

மேலும் விவரிக்கும் ஷிண்டே, “நாடு முழுவதும் குண்டுவெடிப்புகளை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியின் திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், பாஜகவுக்கு அரசியல் பலன்  கிடைக்கவில்லை. அதன் விளைவாக, 2004 தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது. எனினும், மிலிந்த் பராண்டே போன்ற முக்கிய சதிகாரர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு ரகசியமாக சதித் திட்டங்களைத் தொடர்ந்தனர், நாடு முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்தினர். மேலும் காவல்துறை மற்றும் ஒரு தலைப்பட்சமான ஊடகங்களின் உதவியுடன் அவர்கள் முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டினர். அது அவர்களுக்கு 2014 மக்களவைத் தேர்தலில் உதவியது” என்று பிரமாணப் பத்திரத்தில் விவரிக்கும் யஷ்வந்த் ஷிண்டே, “2014இல் பாஜக மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றி நரேந்திர மோடி பிரதமரானார். இதன் விளைவாக பாஜகவின் பின்புலத்தில் செயல்பட்டு வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ்  ஆகிய அனைத்து அழிவு சக்திகளும் திடீரென முன்களத்திற்கு வந்தன” என்று குறிப்பிடுகின்றார்.

திடீரென இந்த பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டிய தேவை என்ன வந்தது? என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் யஷ்வந்த் ஷிண்டே, “நான் ஒரு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்)இன் ஆள்; இந்துத்துவா சித்தாந்தத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவன்; இந்து மதம் உன்னதமான மதம்; அது பயங்கரவாதத்திற்கு எதிரானது; எனவே, ஆர்எஸ்எஸ் கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் விஷயங்கள் மிகவும் மோசமாகிவிட்டன; அவர்கள் (பாஜகவினர்) ஆட்சியில் இருப்பதற்காக மக்களைப் பிளவுபடுத்தி, மதத்தின் பெயரால் அணி திரட்டுகின்றார்கள். எனவே நான் இதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆர்எஸ்எஸ் அமைப்பை சுத்திகரிக்கும் ஆர்வத்தால் உந்தப்பட்டே வாக்குமூலம் அளித்துள்ளேன்” என்றும் கூறியுள்ளார். மேலும், பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வதற்கு முன்பு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்றும் ஷிண்டே கூறியுள்ளார். நீங்கள் கூறுவதையெல்லாம் எப்படி நம்புவது? என்ற கேள்விக்கு, “சங் பரிவாரில் உள்ள பலருக்கும், என்னைப் போலவே தலைவர்கள் மீது வருத்தம் உள்ளது. ஆனாலும் பொறுமையாக இருக்கின்றார்கள். நான் இப்போது பேசி விட்டேன். இதேபோல மற்றவர்களும் பேசுவார்கள். விரைவில் ஒரு வெடிப்பு ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள். அப்போது நான் கூறியது உண்மை என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள்” என்றும் ஷிண்டே குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : தீக்கதிர்

பேரலையில் சத்தியம் பேசும் சத்திய பிரபு

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.