முட்டைச் சுருள்

{mosimage}
தேவையான பொருள்கள்
10 மிலி சமையல் எண்ணெய்
60 கிராம் இஞ்சி
6 பெரிய வெங்காயம்
8 பெரிய முட்டை
45 மிலி சைனீஸ் BBQ சாஸ்
30 மிலி ஸோயா சாஸ்
45 மிலி திராட்சைப் பழரசம்

சமையல் குறிப்பு விபரம்

செய்வது: மிக எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: 800 
தயாராகும் நேரம்: 10 (நிமிடம்)சமைக்கும் நேரம்: 20 (நிமிடம்) 

 

முன்னேற்பாடுகள்:

1. 60 கிராம் இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
2. பெரிய வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
3. இறுதியில் அலங்காரத்திற்காக கொஞ்சம் இஞ்சியை நீண்ட குறுகிய துண்டுகளாக நறுக்கி வறுத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை

சமையல் எண்ணெயை ஃப்ரையிங் பேன்-ல் மிதமாக சூடாக்கவும். நறுக்கிய இஞ்சியில் பாதி மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் அனைத்தையும் போட்டு இஞ்சி இளகும் வரை இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும். வதக்கிய வெங்காயம், இஞ்சி கலவையை ஒரு கிண்ணத்தில் போட்டு கொஞ்சம் ஆற வைத்து, முட்டைகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவும். ஏறக்குறைய 60 மிலி அளவு ஃப்ரையிங் பேன்-ல் ஊற்றி தோசை போல் வார்த்து, தேவையான அளவு பொரிந்ததும் அழகாக சுருட்டி எடுத்து விடவும். மீதமுள்ள முட்டை கலவை முழுவதையும் இவ்வாறு செய்து பரிமாறுவதற்காக தட்டில் வைத்து, இஞ்சி வறுவலைத் தூவி விடவும்.

மீதமுள்ள இஞ்சியை சைனீஸ் BBQ சாஸ், ஸோயா சாஸ், மற்றும் திராட்சைப் பழரசத்துடன் சேர்த்து கலந்து ஃப்ரையிங் பேன்-ல் மிதமான சூட்டில் நான்கு நிமிடம் சூடாக்கவும். பிறகு கிண்ணத்தில் ஊற்ற முட்டை சுருளை நனைத்துக்கொள்ள சாஸ் ரெடி.

 

ஆக்கம்: அபூ ஷிபா