சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் கட்டுரைப் போட்டி.

சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் கட்டுரைப் போட்டி. உலகளாவிய மாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டி.

ஸனாயிய்யா – ஜித்தா, சவூதி அரேபியா

SR 1500 மதிப்புள்ள முதல் மூன்று பரிசுகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட ஆறுதல் பரிசுகள்.

விதிமுறைகள்:

1. கட்டுரைகள் 3 முதல் 6 பக்கத்திற்குள் மிகாமல் இருக்க வேண்டும், தட்டச்சு செய்திருந்தால் 1200-1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்

2. தட்டச்சு (Typing) செய்யப்பட்ட கட்டுரையின், எழுத்துருவும் (Font) ஈமெயில் மூலமாகவோ, நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

3. கட்டுரையை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்க விரும்புபவர்கள் மூடிய உறையிலிட்டு, முழுமையான முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும்

4. பிற கட்டுரைகளிலிருந்து தொகுக்காமல், சொந்தமான ஆக்கங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும், புரட்சிகரமான கருத்துகள், புதுமை ஆக்கங்கள், ஆகியவை மார்க்கத்திற்கு முரண் இல்லாமல், ஆதாரங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும, கட்டுரைகள் திருப்பி கொடுக்கப்பட மாட்டாது.

5. கட்டுரைகளை சமர்ப்பிக்கவேண்டிய முகவரி/இடங்கள்:

a. இஸ்லாமிய அழைப்பகம் – ஸனாய்யியா. (Jeddah, K.S.A)

b. துறைமுக நூலகம் – துறைமுகம் (Jeddah, K.S.A)

c. suvanam@gmail.com

d. P.O. Box No. 32628, Jeddah 21438, Saudi Arabia.

6. கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: ரமளான் பிறை 25, 1430 (செப்டம்பர் 15, 2009).

7. பரிசளிப்பு நாள் பின்பு அறிவிக்கப்படும்.

8. தமிழில் எழுத தெரிந்த அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்

9. சிறந்த கட்டுரைகள் சுவனப்பாதை மாத இதழில் வெளியிடப்படும். (மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு).

10. சுவனப்பாதை பத்திரிக்கை குழுவினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் இப்போட்டியில் கண்டிப்பாக கலந்துகொள்ள அனுமதி இல்லை

11. ஒருவர் பல தலைப்புகளில் கட்டுரை சமர்பிக்கலாம்

12. ஒரே தலைப்பில் பலர் கட்டுரை எழுதியிருந்தால் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற கட்டுரை மட்டுமே சுவனப்பாதையில் பிரசுரிக்கப்படும்.

13. ஒரே தலைப்பில் பலர் கட்டுரைகள் எழுதி முதல் மூன்று பரிசுக்களுக்கோ, அல்லது ஆறுதல் பரிசுக்களுக்கோ மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

14. பலர் ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

15. ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

தலைப்புகள்:

1. நபி(ஸல்) உலகத்திற்கோர் முன்மாதிரி

2. நீங்கள் ஒரு நல்ல மனைவியா?

3. தனிக்குடித்தனம் தரமானதா?

4. கருப்பை சுதந்திரம் பெண்ணுரிமையா?

5. இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்ப்பதேன்?

6. விவாகரத்து ஒரு கழுகுப்பார்வை

7. தஃவாவில் பெண்களின் பங்கு

8. பெண்களும் உடற்பயிற்சியும்

9. அழகு சாதனப் பொருட்கள் – ஒர் ஆய்வு

10. கொடுப்பதும் எடுப்பதும் (மஹர், வரதட்சணை)

11. பத்திரிக்கை தர்மம்

12. பிரிவுகளுக்கு மத்தியில் அழைப்புப்பணி

13. இணையத்தில் இஸ்லாம் (சாதகங்களும் பாதகங்களும்)

14. கல்வியில் கணினியின் பங்கு

15. செல்ஃபோன் சிந்தனைகள்

16. மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் – ஓர் ஆய்வு

17. தவணைமுறை வியாபாரங்கள் – ஓர் ஆய்வு

18. முதல் உதவி மருத்துவங்கள்

19. மருத்துவமும் மனோதத்துவமும்

20. அறிவியல் சாதனைகளில் முஸ்லிம்கள்

21. இறைவனின் அருட்கொடை – ஃபையால் சர்ஜரி

22. டென்ஷன் ஆவது ஏன்?

23. அழைப்புப்பணியில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு

24. முஸ்லிம்களின் நவீன எழுச்சியும் வீழ்ச்சியும்

25. தனிமனித வழிபாடு – ஓர் ஆய்வு

26. கற்காலத்தை நோக்கி மனிதன்

27. வெளிநாட்டு வாழ்க்கை (சாதகமும் பாதகமும்)

28. ஷியாயிசம் ஓர் ஆய்வு

29. ஈராக் – ஒரு வரலாற்றுப் பார்வை

30. சவுதி அரேபியா – ஒரு வரலாற்றுப் பார்வை

31. இலங்கையில் இஸ்லாம் (வரலாற்றுப் பார்வை)

32. கிரிக்கெட்

33. ஷேர் மார்க்கெட்

34. வியாபாரமும் வட்டியும்

35. அரசியலும் நபி(ஸல்) அவர்களும்

36. குடும்பவியலும் நபி(ஸல்) அவர்களும்

37. புறம், கோள் மற்றும் அவதூறு

38. தர்ஹா வழிபாடு மார்க்கமா? – ஓர் ஆய்வு

39. வீரமும் உமர் (ரலி) அவர்களும்

40. பொறுமையும் அபூபக்ர் (ரலி) அவர்களும்

41. உழைத்து உண்ணுதல்

42. அரசாங்க உயர் பதவிகளில் தமிழக முஸ்லிம்கள் இடம்பெறாதது ஏன்? தீர்வு என்ன?

43. அரசிடமிருந்து நமக்குள்ள முழு உரிமையையும் பெற்றுக்கொள்ள வலுவான ஒரே தலைமையின் கீழ் எல்லா முஸ்லிம்களும் அணிதிரள வழி என்ன?

44. பெரும்பாலான தமிழக முஸ்லிம்கள் வெளிநாட்டு வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதேன்?

45. அரசியலில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுவதேன்?

46. நபி (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை

47. குர்ஆன் இறக்கப்பட்டதின் நோக்கம்?

48. மாற்று மதத்தாருக்கு நாம் அளிக்கும் பங்களிப்பு

49. பொறுமையின் அவசியம்

50. நட்பு