கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு!

Share this:

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு, சென்னையில் நீதியரசர் பசீர் அஹமது சயீத் கல்லூரியில் கடந்த 23-01-2011 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் பின் வருமாறு:

 

கொடியேற்றம்:

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் ஏ.ஷாஹூல் ஹமீது காலை 9.30 மணிக்கு நீல வண்ணத்தில் சிகப்பு நட்சத்திரம் மின்னும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கொடியை ஏற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகிக்க, கூடியிருந்த மாணவர்கள் ‘சமூக மாற்றத்திற்கான கோஷங்கள்’ எழுப்பி விண்ணதிரச் செய்தனர்.

 

 

கேம்பஸ் எக்ஸ்போ – 2011:

இதனைத் தொடர்ந்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் துணைத் தலைவர் அ.முஹம்மது அன்வர் ‘கேம்பஸ் எக்ஸ்போ – 2011’ கண்காட்சியை துவக்கி வைத்தார்.

‘அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி’ வரை பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், சமூக அக்கறையற்ற மாணவர்கள் ஏற்படுத்திய வெற்றிடம், ‘ஊழல்வாதிகளையும், ஆதிக்க சக்திகளிடம் அடி பணிபவர்களையும்’ ஆட்சியில் அமர்த்துவது குறித்தும், அதன் விளைவு இந்தியாவை பின்னோக்கி அழைத்துச் செல்வது குறித்தும், இவற்றிக்கான மாற்றங்கள் புரட்சியின் மூலமே ஏற்படும் என்பது குறித்தும் காட்சியாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

மேலும், ராகிங், ஈவ்டீசிங் மூலம் ஏற்படும் விளைவுகள் குறித்து ‘ஈவண்ட் டெமோ’ நடித்துக் காட்டப்பட்டது.

கருத்தரங்கம்:

‘சமூக மாற்றத்தில் மாணவர்களின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் காலை 10.30 மணிக்கு நீதியரசர் பசீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி அரங்கில் துவங்கியது. நிகழ்ச்சிக்கு தேசிய பொதுச்செயலாளர் அனிஸுஜ் ஜமான் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா முஹம்மது வரவேற்புரையாற்றினார். மாநிலத் தலைவர் சாஹூல் ஹமீது அறிமுக உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் ஜே.எஸ்.அலி அசாருதீன், கடந்த ஆண்டின் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

சமூக மாற்றத்தில் மாணவர்களின் பங்கு‘ என்ற தலைப்பிலான கருப்பொருள் (Theme) மாநில துணைத்தலைவர் அப்துல் ரஹ்மானால் சமர்ப்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகள், முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துரை வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்:

மதியம் 2.30 மணிக்கு மாணவர்களின் தனித் திறனை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடகம், பாட்டு மற்றும் கவிதை ஆகியவற்றை மாணவர்கள் படித்தும், நடித்தும் காட்டினர்.

நிறைவுப் பொதுக்கூட்டம்:

மாநாட்டின் நிறைவாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் துணைத்தலைவர் முகம்மது ஷாஃபி வரவேற்புரையாற்றினார். முன்னாள் மாநிலத் தலைவர் சாஹூல் ஹமீது தலைமை தாங்கினார். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் வழக்கறிஞர் முகம்மது யூசுப் துவக்கி வைத்து உரையாற்றினார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (தீயணைப்பு, மீட்பு) திரு.R. நட்ராஜ் IPS., அவர்களும் மனித நேயம் ஐ.ஏ.எஸ் அகாடமியின் தலைவர் சைதை ச.துரைசாமி அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் A.S.இஸ்மாயில் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

நூல் வெளியீடு:

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் “நாமும் சாதிக்கலாம்” என்ற மேற்படிப்பு வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை டி.ஜி.பி திரு.R.நட்ராஜ் I.P.S. அவர்கள் வெளியிட, அதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை சைதை ச.துரைசாமி வெளியிட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில ஆலோசனை குழுத் தலைவர் K.S.M.இப்ராஹிம் B.Com., அவர்கள் பெற்றுக்கொண்டார்.

கட்டுரைப் போட்டி:

மாநாட்டை முன்னிட்டு ‘சமூக மாற்றத்தில் மாணவர் பங்கு’ , ‘லஞ்சம் ஊழலில் என் தேசம்’ ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டி ஒரு மாதத்திற்கு முன்பே நடத்தப்பட்டது. அதில் தமிழக முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருந்து சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அதில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர்களை முன்னாள் மாநில துணைத்தலைவர் முகம்மது அன்வர் மாநாட்டு மேடையில்அறிவித்தார். இவர்களுக்கான பரிசுத்தொகை வெற்றிபெற்ற பள்ளி கல்லூரிகளில் ஒரு பரிசளிப்பு விழா நடத்தி அங்கு வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

வெற்றி பெற்றவர்கள்:

கட்டுரைத் தலைப்பு: சமூக மாற்றத்தில் மாணவர் பங்கு

முதல் பரிசு : எஸ்.அன்பழகன், 2ம் ஆண்டு பி.எஸ்.சி. கணிதம்
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி, திருச்சி.


இரண்டாம் பரிசு: ஏ.ஜோஷி புஷ்பா, 9ம் வகுப்பு
புனித இக்னேஷியஸ் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, நெல்லை.


மூன்றாம் பரிசு : எம். சுகன்யா, 1ம் ஆண்டு எம்.ஏ. தமிழ்.
லேடி டோக் கல்லூரி, மதுரை.

கட்டுரைத் தலைப்பு: லஞ்சம் ஊழலில் என் தேசம்

முதல் பரிசு :
ஆர்.ராஜலட்சுமி, 2ம் ஆண்டு பி. எல்.
அரசு சட்டக் கல்லூரி, நெல்லை.

இரண்டாம் பரிசு: எம்.டி. வினோத் குமார், 11ம் வகுப்பு
தியாகராசர் நன்முறை மேல்நிலைப் பள்ளி, மதுரை.

மூன்றாம் பரிசு : யூ.ஜெனோஃபர், 2ம் ஆண்டு பி.சி.ஏ.
ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி.

மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நேரடி ஒளிபரப்பு:

மதியம் 2.30 மணி முதல் மாநாடு www.campusfrontofindia.org என்ற இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழகத்திலும், வெளிநாட்டில் வசிக்கும் தமிழ் மக்களும் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை கண்டுகளித்தனர்.

இறுதியாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் மாநில துணைத் தலைவர் முகம்மது அன்வர் முடிவுரை வழங்கினார். மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் R.ராஜா முகம்மது அவர்கள் வாசித்தார். தஞ்சை மாவட்டத் தலைவர் V.M. பக்கீர் முகைதீன் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:எஸ். முஹம்மது ஷாஃபி, மாநாடு ஊடக ஒருங்கிணைப்பாளர்

Campus Front of India Press release


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.