ஆதாரம் ஏதுமில்லை; அவ்லக்கியைத் தேடவில்லை – யெமன்

அன்வர் அல் அவ்லக்கீ

அன்வர் அல்-அவ்லக்கியை வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

அமெரிக்கரான அல்அவ்லக்கியைப் ஒழித்துக் கட்டும்படிஅவரது அரசாங்கத்தின் உளவுப் பிரிவான ஸீ ஐ ஏவுக்குக் கடந்த 6.4.2010 அன்று அமெரிக்க அரசு ஆணை பிறப்பித்திருந்தது.

காரணம் : “அமெரிக்காவுக்கு எதிராக அல்-காயிதா இயக்கத்துக்கு அவ்லக்கி ஆள் சேர்க்கிறார்

சான்றுகளாகச் சொல்லப்படுபவை:

  1. நவாஃப் அல் ஹஸ்மீ, காலித் அல் மிஹ்தர் ஆகிய இருவரும் 9/11இல் ஃப்ளைட்77 மூலம் பெண்டகனைத் தாக்கியவர்கள். அவ்விருவரும் அவ்லக்கியைச் சந்தித்திருக்கக் கூடும் அல்லது அவரது பயான் அமர்வில் பங்கெடுத்திருக்கக் கூடும்.

  2. கடந்த 5.11.2009இல் டெக்ஸஸின் ஃபோர்ட் ஹூட் இராணுவ முகாமில் இருந்த 13 இராணுவத்தினரைச் சுட்டுக் கொன்ற அமெரிக்க இராணுவ மேஜர் நிதால் மாலிக் ஹஸனைப் பற்றி அவ்லக்கி தன் வலைப்பூவில், “ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு, தன் சொந்த மார்க்க சகோதர சகோதரிகளைக் கொன்று குவிக்கும் இராணுவத்துக்காகச் சேவையாற்றுவது சாத்தியமில்லை என்று புரிந்து கொண்ட புத்திசாலிஎன்று பாராட்டி இருக்கிறார். (மேஜர் நிதால் மாலிக் ஹஸனை ஆளாக்கியவரே அவ்லக்கிதான்என்பதாக மேற்கு ஊடகங்கள் க்ரைம் தொடர்கள் எழுதின. ஆனால், “நிதால் தனித்துச் செயல்பட்டார் என்று எஃப் பி ஐயின் புலனாய்வு அறிக்கை, “Based on all the investigations since the attack, including a review of that 2008 information, the investigators said they have no evidence that Hasan had help or outside orders in the shootings என்று கூறுகிறது).

  3. நைஜீரியாவைச் சேர்ந்த உமர் ஃபாரூக் அப்துல் முத்தலிப் என்பவர் கடந்த ஆண்டு (2009) கிருஸ்துமஸ் அன்று, நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் 253 எண்ணுள்ள விமானத்தில் (ஆம்ஸ்டர்டாம்டெட்ராய்டு) பயணித்து, தன் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த ப்ளாஸ்ட்டிக் வெடிகுண்டை வெடிக்க வைத்து விமானத்தைத் தகர்க்க முயன்றவர். உமருக்கு அவ்லக்கியின் வழிகாட்டுதல் இருக்கக் கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை ஐயப்படுகிறது. (Intelligence officials suspect al-Awlaki may have directed Abdulmutallab).

இப்போது அவ்லக்கி மீது சுமத்தப் பட்டுள்ள ‘தீவிரவாதக் குற்றச்சாட்டு’க்கு முன்னர், எத்தனை முறை மற்ற விஷயங்களில் அமெரிக்க அரசாங்கம் சுமத்திய தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் பொய்த்துப் போயிருக்கின்றன? என்று க்ளென் க்ரீன்வால்ட் (Glenn Greenwald) கேள்வியெழுப்பியுள்ளார்.

“நிரூபிக்கப்படாத, அனுமான வகைக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மட்டுமே ஓர் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது என்பது சர்வாதிகாரத்தனமான கொடுங்கோல் மன்னர்களின் செயல்பாடுகளுக்கு ஒப்பானவை.

ஒரு பிடியாணை இல்லை; விசாரணை இல்லை; சிறைத்தண்டனை இல்லை; எங்கிருந்தாலும் ‘போட்டுத் தள்ள’ உத்தரவு! Obama White House has now expressly authorized the CIA to kill al-Alwaki no matter where he is found, no matter his distance from a battlefield. I wrote at length about the extreme dangers and lawlessness of allowing the Executive Branch the power to murder U.S. citizens far away from a battlefield (i.e., while they’re sleeping, at home, with their children, etc.) and with no due process of any kind.

அமெரிக்க அதிபருக்கு இத்தகைய உரிமையை அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ளதா?” என்ற வினாவையும் வழக்கறிஞரான க்ரீன்வால்ட் முன்வைக்கிறார்.

ஐயப்படுகின்ற, சொல்லப்படுகின்ற மாதிரியான செய்திகளின் அடிப்படையில் ஓர் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. ‘அல் காயிதாவுக்கு ஆள் சேர்க்கிறார் எனும் அன்வர் அல்-அவ்லக்கியின் மீது குற்றம் சாட்டும் எந்தச் சான்றையும் அமெரிக்கா இதுவரை எங்களுக்குத் தரவில்லை. எங்களது பார்வையில் அவ்லக்கி, இஸ்லாமிய மார்க்க அறிஞராகப் பார்க்கப் படுகின்றாரே அன்றி, தீவிரவாதியாக அல்ல. எனவே, அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் இறங்கப் போவதில்லைஎன்று யெமனின் வெளியுறவு அமைச்சர் அபூபக்ரு அல்-கிர்பி ஊடகங்களுக்கு அறிக்கை கொடுத்துத் தெளிவாக்கி இருக்கிறார்.

“இரட்டை கோபுரத் தாக்குதலின் மூலகர்த்தாவான உஸாமா பின் லாடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்” என்ற அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் அஃப்கன் அரசுக்கு விடுத்த மிரட்டலும் அன்றைய அஃப்கானிஸ்தான் அதிபர் முல்லா உமர், “உஸாமா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு ஓர் ஆதாரத்தையேனும் தந்தால், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்போம்” என்று கூறிய நியாயமான பதிலும் இங்கு நினைவு கூரத்தக்கன. பின்னர் நடந்தவையும் நடந்து கொண்டிருப்பவையும் எல்லாருக்கும் தெரியும்.

இதுவரை அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஐயங்களின் அடிப்படையில் அமைந்திருக்கின்றவேயன்றி ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல என்பதை ஒப்பிட்டு நோக்கினால், அவ்லக்கியைப் பற்றி சகோ. நூருத்தீன் அவர்கள் எழுதிய கடைசி வரிகளான “அமெரிக்கப் போரின் அடுத்த தளம் யமன் என்றால், யமன் அடுத்த ஆப்கானிஸ்தான் ஆகி விடுமா?” எனும் கேள்வி உண்மையாகிவிடும் சாத்தியம் கூடுதலாகிறது – கவலையும்தான்.