“நீதிபதிகள் மிரட்டப்பட்டு வழங்கப்பட்டது தான் அலஹாபாத் தீர்ப்பு” பேரா. ஜவாஹிருல்லாஹ்வுடன் ஓர் நேர்காணல்! (வீடியோ)

டந்த 2010 டிசம்பர் 20ஆம் தேதி, கத்தருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சகோதரர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுடன் சத்தியமார்க்கம்.காம் ஒரு நேர்காணலை நடத்தியது.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவருக்கே உரிய நடையிலும் பல்வேறு அரிய தகவல்களுடனும் விளக்கங்கள் அளித்தார். சுவாரஸ்யமான அந்த நேர்காணலை சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக இங்குத் தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கே 1அ) சமீபத்தில் வெளியான அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் இந்திய முஸ்லிம்களுக்கு பாபரி மஸ்ஜிதை மீட்டெடுக்கும் போராட்ட உணர்வு மங்கியிருப்பதாகத் தோன்றுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தமுமுகவின் நிலைபாடு என்ன?

ஆ) அடுத்து எதிர்நோக்கியுள்ள உச்சநீதி மன்றத் தீர்ப்பும் முஸ்லிம்களுக்குப் பாதகமாக வரும் எனில் தமுமுகவின் நிலைபாடு என்னவாக இருக்கும்? முஸ்லிம்களின் நிலைபாடு எப்படி இருக்க வேண்டும்?

“நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல், சட்டத்தின் அடிப்படையில் வரவிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படுமேயானால், அது முஸ்லிம்களுக்குச் சாதகமாகவே அமையும்!” – பேரா. ஜவாஹிருல்லாஹ்

கே : 2அ) ஊடகங்களின் அவசியம் பற்றி சமீபகாலமாக முஸ்லிம்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக முஸ்லிம்கள் தனித்து நின்று செய்தி நிறுவனம் / ஊடகம் நடத்துவது சாத்தியமா?

ஆ) இணையத்தைப் பயன்படுத்தும் தமிழ் அறிந்த முஸ்லிம்கள் பெருமளவு அதிகரித்துள்ள சூழலில் – இணையதளங்கள், வலைப்பூக்கள், குழுமங்கள் ஆகிய வலிமையான ஆற்றல்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதைவிட தேவையற்ற வீண் விவாதங்கள், விமர்சனங்கள், தன்னிலை விளக்கங்கள் என்று பாழாக்கிக் கொள்வதைப் பற்றி, உங்கள் கருத்தும் ஆலோசனையும் என்ன?

கே : 3 தேசிய அளவில் இடஒதுக்கீட்டைப் பெற்றிடவும், பெற்றுள்ள இடஒதுக்கீட்டை முறையாக பயன்படுத்திக் கொள்ளத் தகுதியானவர்களை உருவாக்கிக் கொள்ளவும் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? இது தொடர்பான தமுமுகவின் முயற்சிகள் என்ன?

கே : 4 அ) தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மனிதநேய மக்கள் கட்சிக்கு எதிரான ஒரு அணியுடன் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுபடும் எனில் தங்கள் நிலைபாடு என்ன?

“தமிழக முஸ்லிம்களின் இன்றைய அரசியல் தேவை Self Identity என்ற சுயமுகம் கொண்ட தனித்தன்மையே!” – பேரா. ஜவாஹிருல்லாஹ்

ஆ) SDPI போன்ற அமைப்புகளின் அணியில் இணைந்து ம.ம.க. போட்டியிடும் நிலையுள்ளதா?

கே 5) தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளும் ஒரே குடையின்கீழ் ஒன்றிணைய உடனடியான சாத்தியக் கூறுகள் தற்போதைக்கு இல்லை என்றாலும், குறைந்த பட்சம் பொதுவான பிரச்சினைகளிலாவது ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் விதமாகவும் இயக்கங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு பலவீனம் அடையாமல் இருக்கவும், பழைய கசப்பான சம்பவங்களை மறக்க உதவும் சந்திப்புகள் ஏற்படுத்திடத் தங்கள் அமைப்பு சார்பான முயற்சிகள் என்ன?

{youtube}v-67ZiHuZUA{/youtube}

Disclaimer: முழுக்க சமுதாய நலன் கருதி மட்டுமே நடத்தப்பட்ட இந்த நேர்காணலில் பேராசிரியரால் கூறப்படும் தனிமனித/அமைப்பு பற்றிய ஒரு சில விமரிசனங்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்துக்கு உடன்பாடற்றவை. தனிநபர், அமைப்பு விமர்சனங்களைக் கடந்து, சமுதாய நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் சகோதரர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!