ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனோகரன் கைது: விளம்பரத்திற்காக ஒரு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கும்மிண்டிபூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் செல்போனுக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், இந்து முன்னணி அலுவலகம், பாரிமுனையில் உள்ள ஒரு பிரபலமான கோயில் ஆகியவற்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுகுறித்து ராஜேஷ், சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.

விசாரணையில் கும்மிடிபூண்டி புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் (37) என்பவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மனோகரனை சனிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி (16-11-2014)


சென்னை: சென்னை இந்துமுன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனோகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு,  கடந்த 10ஆம் தேதி தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை அடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நடத்திய விசாரணையில்  கும்மிடிப்பூண்டி பகுதியிலிருந்து, மனோகரன் என்பவரது செல் போனிலிருந்து  மிரட்டல் வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மனோகரனை கைது செய்த காவல்துறையினர் விசாரித்த போது தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை மனோகரன் ஒப்புக் கொண்டார்.

இந்துமுன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தமை, கலவரத்திற்கான சதி திட்டமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா? என மனோகரனிடம் காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நேரம்.காம் (16-11-2014)

தொடர்புடைய செய்திகள்:

விளம்பரத்திற்காக குண்டு வீசிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகள்!

ராம் – பாம் என்று மீடியாக்கள் ஏன் தலைப்பிட வில்லை?

ரயில் குண்டுவெடிப்பும் தயாநிதி மாறனும்! – ஆளூர் ஷாநவாஸ்

காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்!

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!

ஆர்.எஸ்.எஸ்ஸும் வி.ஹெச்.பியும் வெடிகுண்டுகள் தயாரிக்கின்றன

தொடர்ந்து தோல்வியுறும் இராம கோபாலனின் மத வியாபாரம்!