ஏகாதிபத்தியத்தின் எதிர்விளைவே தீவிரவாதம் – நீதிபதி ரஜீந்திர ஸச்சார்

{mosimage}ஏகாதிபத்தியத்தின் எதிர்விளைவே தீவிரவாதமாகிறது என்று நீதிபதி ரஜீந்திர ஸச்சார் கூறியுள்ளார். கேரளத்தில் உள்ள கொச்சியில் நடக்கும் இந்திய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் ஏழாவது தேசிய மாநாட்டில் பேசும்போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும் அதிகரிக்கும்போது அதற்கு எதிரான போராட்டமும் வலுவடையும். இவ்வாறான போராட்டத்தின் நவீன வடிவம் தான் தீவிரவாதமாக உருவெடுக்கிறது.

இந்த எதிர் போராட்டம் ஏகாதிபத்தியவாதிகளின் அடக்குமுறைக்கு எதிராக உருவானதாகும். தீவிரவாதத்தின் பெயரைக் கூறி ஒரு தனிப்பட்ட சமுதாயத்தை அடக்கி வைக்க முயற்சிப்பது சரியல்ல.ஆக்ரமிப்பும், அடக்குமுறையும், சுரண்டலும் இல்லாமலாக்குவதே தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான ஒரே சிறந்த வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

இம்மாநாட்டிற்கு இத்தாலி, ஃப்ரான்ஸ், அமெரிக்கா, பல்கேரியா, சீனா, ஸ்பெயின் உள்ளிட்ட பன்னிரண்டு நாட்டிலிருந்து 41 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாநாட்டில் அனைத்து நாடுகளில் இருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

பார் கவுன்ஸில் ஆஃப் இந்தியாவின் நிறுவுனர் ஜகன்நாத் பட்நாயக், முன்னாள் துணை ஜெனரல் வீரேந்திரசிங், பி.பி.ராவ், வழக்கறிஞர் ஜனரல் வெங்கானூர் சந்திரசேகரன் நாயர், நீதிபதி வீரேந்திர ஜெயின், செபாஸ்டியன்போள் எம்.பி., பி. கே. சித்ரபானு போன்றவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.