புதுதில்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முழு ஒத்துழைப்போடும் ஆசிர்வாதத்தோடும் தான் மதக் கலவரத்தை நடத்தியதாக பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த குஜராத் முஸ்லிம்களைக் கொன்று குவித்த பயங்கரவாதிகள் வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.
இதைத் தெஹெல்கா புலனாய்வு இதழ் ரகசியமாகப் படம் பிடித்து ஆவணப்படுத்தியுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெஹெல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசியப் புலனாய்வில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.
குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற ரயில் தீ விபத்து ஆகும். சுமார் 50க்கும் மேற்பட்ட கரசேவக்குகள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.
கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் எரிக்கப்பட்ட செய்தி கேட்டவுடன் அவ்விடத்திற்கு விரைந்து சென்ற மோடி, இதற்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று ‘இரத்தம் கொதிக்க’க் கூறியதாகவும், தான் ஒரு மாநில முதல்வராக இல்லாதிருந்தால் உடனடியாக ஜுஹாபுரா (அஹமதாபாத்தின் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி)-வில் குண்டுகளை வெடிக்கச் செய்து முஸ்லிம்களைக் கொன்றிருப்பதாகக் கூறினார் என குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளர் அர்விந்த் பாண்டியா தெரிவித்துள்ளது தெஹெல்கா வீடியோவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்களை அழைத்துப் பேசிய மோடி தாம் அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும் அதற்குள் மாநில முழுவதும் முஸ்லிம்களை எல்லா வழியிலும் மூர்க்கத் தனமாக அழிக்க வேண்டும் என்றும் கூறியதாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டம் போட்ட காவிப் பயங்கரவாதிகளின் வழியில் குறுக்கிடக்கூடாது என காவல் துறைக்கு மோடி அரசு கட்டளை இட்டது. மேலும் அடைக்கலம் தேடிவந்த முஸ்லிம்களைப் பிடித்து கலவர வெறியர்களிடம் ஒப்படைத்துத் தான் மேற்கொண்ட பணிக்கு தீரா இழுக்கையும் மோடி அரசின் காவல் துறை தேடிக் கொண்டது.
இக்கலவரங்கள் நடந்த போதே இந்திய உச்சநீதிமன்றம் மோடியைக் கடமையில் இருந்து தவறியதாகக் கண்டித்திருந்தது நினைவுகூரத்தக்கது. முஸ்லிமாக இருந்ததால் சட்டம் இயற்றும் நாடாளுமன்ற உறுப்பினரைக் கூடப் பாதுகாக்க மறுத்தது மோடி அரசு. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஃப்ரி தன்னை நாடிவந்த அப்பாவி முஸ்லிம்களைக் காக்க முயன்ற போது தன் உயிரையும் இழக்க நேரிட்டது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போனதை மட்டுமல்லாது இந்துத்துவாவின் நச்சுக்கரங்கள் புற்றுநோய்போல அரசு இயந்திரத்தினுள்ளும் புரையோடி இருப்பதையும் தான் காட்டுகிறது.
இது குறித்த விரிவான செய்தியை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த தெஹெல்கா வீடியோ ஆவணங்கள் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கையில் இதில் புதிதாக ஒன்றும் இல்லை என்றும் மோடி தான் இந்தக் கொடூரக் கொலைவெறியாட்டத்தின் சூத்திரதாரி என்பது ஊரறிந்த ரகசியம் என்றும் இப்போது இது ஆவணப்படுத்தப் பட்டுள்ளதால் இந்திய அரசு இக்கயவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் கூறினர்.
இது குறித்து பாஜக கருத்துத் தெரிவிக்கையில், இந்த வீடியோ ஆவணம் காங்கிரஸிடம் கையூட்டு பெற்று தெஹெல்கா உருவாக்கியுள்ளதாகவும், மோடியை இழுக்குச் செய்யும் முயற்சி இது என்றும் வெட்கம் கெட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோத்ரா ரயில் விபத்துகுறித்து ஆதாரங்களை அழிக்க முயன்ற மோடியின் முயற்சியைக் குறித்த செய்தியை இங்கு காணலாம்.
வீடியோ ஆதாரங்கள்:
பாபு பஜ்ரங்கி – பயங்கரவாதிகளில் ஒருவனும் பஜ்ரங் தள் நிர்வாகியுமான இவனது வாக்குமூலம் கீழே:
{youtube}mfnTl_Fwvbo{/youtube}
அரவிந்த் பாண்டியா – நானாவதி-ஷா நீதிவிசாரணை ஆணையத்தில் ஆஜரான குஜராத் அரசின் வழக்கறிஞரான இவனது வாக்குமூலம் கீழே:
{youtube}A9KlevWeYrE{/youtube}
ரமேஷ் தவே – காலுப்பூர் விஎச்பி அமைப்பாளனும், தரியாப்பூர் முஸ்லிம்களைக் கருவறுத்தவனுமான இவனது வாக்குமூலம் கீழே:
{youtube}_DRS0WyGJVo{/youtube}