ஜைனுல் ஆபிதீன்!

Share this:

{mosimage}கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள MES பொறியியல் கல்லூரியில் MCA சமீபத்தில் முடித்துள்ள 24 வயதான துடிப்பான இளைஞரான இவரது புதிய கண்டுபிடிப்பிற்கு ரெயின்போ டெக்னாலஜி (Rainbow Versatile Disc சுருக்கமாக RVD) என்று பெயரிட்டுள்ளார்.

அப்படி என்ன சாதித்துவிட்டார் இவர்?

ஒரு சாதாரண தாளில் பெரும் தகவலைப் பதியும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார். இதை அறியும் எவர் மனதிலும் உடன் எழும் ஐயம், இத்தகவலை எப்படி எழுதவும் படிக்கவும் இயலும்? ஒரு சாதாரண Floppy Disc போன்றோ அல்லது CD போன்றோ கணினியினுள் இட்டு தகவலைப் படிப்பது போல் படிக்க இயலுமா? என்று ஜைனுல் ஆபிதினிடம் கேட்டால்

"அதைவிட மிக எளிமையான முறையில் படிக்க இயலும்" என்கிறார் கூலாக.

இன்றைய தேதிக்குத் தகவல் தொழில்நுட்பத்தைப் பதிக்க வசதியாகத் தற்போது உலக சந்தையில் பரபரப்பாக புழக்கத்தில் உள்ள DVD யில் சேகரிக்கப்படும் தகவல்களைப் போன்று 131 மடங்கு (450 GB) வரை பதியும் வசதி கொண்ட இவரது புதிய தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமே மிகவும் குறைவான இதன் விலைதான் என்கிறார். தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு CD யின் விலை ரூ.15 என்றால் இவரின் RVD யின் விலை வெறும் ரூ.1.5 தான். பெருமளவில் தயாரிக்கப்படும் போது இதன் விலை 0.50 பைசாவிற்கு விற்க இயலும் என்று அதிர வைக்கிறார்.

இவர் கண்டுபிடித்துள்ள இந்த RVD தட்டுக்களை இவரே கண்டுபிடித்துள்ள புதிய Scanner கொண்டு Scan செய்வதன் மூலம் எழுத்துக்கள், கோப்புக்கள், நிழற்படங்கள், பாடல்கள் மற்றும் திரைப்படங்களை சேகரித்து வைத்து, கணினி மூலம் பயன்படுத்த இயலும் என்கிறார்.

கல்லூரியில் ஒரு பொதுநிகழ்ச்சியில் 432 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் ஒன்றை 4 இன்ச் பேப்பரிலும் 45 நொடிகள் ஓடக்கூடிய ஓர் திரைப்படத்தை ஓர் சாதாரண பேப்பரிலும் பதிந்து காட்டி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். செல் போன்களில் பயன்படுத்தப்படும் Sim card அளவிலான இவரின் ரெயின்போ கார்டுகளும், அதனைப் படிக்கக்கூடிய இவரின் ரெயின்போ டிரைவ் களும் தான் இனி கணினி உலகை ஆளப்போகும் சாதனங்கள் என்று உறுதியுடன் பேசுகிறார்.

தனது கண்டுபிடிப்பிற்கு உறுதுணையாக இருந்த கல்லூரி பேராசிரியர் Prof. ஹைதர் அலியை நன்றியுடன் நினைவு கூறும் ஜைனுல் ஆபிதீன் Biogradable Nature அடிப்படையில் உருவாக்கப்படும் இந்தத் தொழில் நுட்பத்தினால் e-waste pollution தவிர்க்கப்படும் என்கிறார்.

அமெரிக்காவின் சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி அமெரிக்காவின் தகவல் வங்கிக்கான (Data Bank) செலவான ரூ. 23 ஆயிரம் கோடி (US$ 500 கோடி) செலவைத் தனது RVD தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வெறும் ரூ. 35 இலட்சத்தில் செய்துவிட முடியும் என்று சவால் விடுகிறார்.

இவரின் கண்டுபிடிப்பின் தரத்தை இனம் கண்டு கொண்டு முந்திக்கொண்ட பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அத்துடன், மொபைல் போன்களைப் பயன்படுத்தி இணையத்திலுள்ள செய்தித்தாள்களை ஒலி வடிவத்தில் கேட்கக்கூடிய Xpressa என்று பெயரிட்டுள்ள மற்றோர் புதிய தொழில் நுட்பத்தையும் சத்தம் போடாமல் செய்து வருகிறார் என்பது கொசுறுச் செய்தி.

சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உணரச் செய்யும் இளம் விஞ்ஞானி ஜைனுல் ஆபிதீன், வாழ்வில் மேன்மேலும் உயர்ந்திட வாழ்த்துக்கள்!!

தகவல்: அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.